சென்னை:
சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும்போது, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தமிழகத்தில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை, சாதி வாரியாக நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இடஒதுக்கீடு முறையை முழுமையாக அமல்படுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்றும், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள் இதற்காக போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சில சாதிகள் சார்பில் தான் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், போராட்டங்களால் எதையும் அடைய முடியாது என்றும் குறிப்பிட்டனர்.சாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளதை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தனர்.