புதுதில்லி:
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதவரை, விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது, வேளாண் சட்டங்களில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க சார்பற்ற, சுயாட்சிக் குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழனன்று அறிவித்தது.
வழக்கு விசாரணை முடியும் வரை சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியது.மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக கடந்த 20 நாட்களுக்கு மேலாக தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களை அப்புறப்படுத்தக் கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும்பல்வேறு மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டி ருந்தன. இந்த மனுஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வெ.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் புதனன்று காணொலி மூலம்விசாரிக்கப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
“வேளாண் சட்டங்களால் ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்க்க நாடு முழுவதும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசு சார்பில் பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்துப் பேசலாம். இந்த வழக்கில் மத்தியஅரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். நாளை (வியாழன்) இந்த வழக்கைமீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள் கிறோம்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதன்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா,வெ.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில்வியாழனன்று காணொலி மூலம் விசார ணைக்கு வந்தது.அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில் “வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டதா எனும் மனு குறித்து இப்போது முடிவு செய்யமாட்டோம். இன்று முதலில் செய்ய வேண்டிய விஷயம், போராட்டம் நடத்தும் விவசாயிகள் குறித்தும், அனைவரும் சுதந்திரமாக செல்வதற்கான உரிமை குறித்தும்தான். வேளாண் சட்டம் குறித்து விசாரிக்க சிறிதுகாத்திருங்கள்.
ரத்து செய்ய முடியாது
விவசாயிகள் போராட்டம் வன்முறையில் மாறாதவரை, பொதுச்சொத்துக்களுக்கு
தொடர்ச்சி 3-ஆம் பக்கம்...