court

img

பழிவாங்கும் எண்ணத்துடன் அமலாக்கத்துறை செயல்படக்கூடாது - உச்ச நீதிமன்றம்

பழிவாங்கும் எண்ணத்துடன் அமலாக்கத்துறை செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
அரியானாவைச் சேர்ந்த பங்கஜ் பன்சல் என்பவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்து, அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது. விசாரணைக்கு அழைத்ததும், குற்றம் சாட்டப்பட்டவர் தானாக வந்து குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும், ஒப்புக்கொள்ள மறுத்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என அமலாக்கத்துறை கூறுவதும் தவறு. உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட அமலாக்கத்துறை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், ஒருவரை கைது செய்யும் போது அதற்கான காரணத்தை எழுத்து மூலம் தெரிவிக்கும் விதியை பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.