court

img

6 நோயாளிகள் இறந்த விவகாரத்தில் அலட்சியம்... குஜராத் பாஜக அரசு உண்மைகளை மூடிமறைக்கிறது? உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுதில்லி:
ராஜ்கோட்டின் உதய் சிவானந்த் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதில் 6 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்றம் குஜராத் அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. குஜராத் அரசும் அதற்கு பதிலளித்து பிரமாணப் பத்திரம்ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.இந்நிலையில், குஜராத் அரசு தாக்கல் செய்த அந்தவிளக்க அறிக்கை முரண்பாடுகளுடனும், உண்மைகளை மூடிமறைக்கும் வகையிலும் இருப்பதாக அசோக் பூஷண் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

“குஜராத் அரசின் பதிலை நாங்கள் கண்டிக்கிறோம். உங்களைப் பொறுத்தவரை (குஜராத் அரசு) எல்லாம் நன்றாக இருக்கிறது என்கிறீர்கள். ஆனால் உங்கள் நிலைப்பாடு, ‘வயரிங்’ குறித்த உங்களது அரசின் சொந்த தலைமை மின்பொறியாளரின் அறிக்கைக்கேமுரணாக இருக்கிறது. உண்மைகள் மூடிமறைக்கப்படுமானால், அது என்ன வகையான பிரமாணப் பத்திரம்?” என்றுநீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதேபோல அகமதாபாத்தில் 7 பேர் பலியான சம்பவத் தையும் விசாரணையின்போது சுட்டிக்காட்டியிருக்கும் நீதிபதிகள், சரியான தகவல்களுடன் புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதுடன்; அதில் அனைத்து உண்மைகளும் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தர விட்டுள்ளனர்.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

;