cinema

img

லால் சலாம் அன்புள்ள முதல்வரே.... சமூக ஊடகத்தில் நன்றி கூறும் மலையாள திரையுலகம்...

கொச்சி:
மலையாள திரைப்படக் கலை ஞர்கள் மம்முட்டி, மோகன்லால், திலீப்,பிருத்விராஜ், நிவின் பாலி, டோவினோ தாமஸ், ஆசிப் அலி, மஞ்சுவாரியர், இயக்குநர் ரஞ்ஜித் உள்ளிட்ட பலர்,திரைத்துறை மீதான பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்ததற்கும், மின்சாரம் உள்ளிட்ட நிலையான கட்டணங் களுக்கு விலக்கு அளித்தமைக்கும் கேரள முதல்வருக்கு நன்றி தெரி வித்துள்ளனர்.

“நெருக்கடியில் இருந்த மலையாள திரைப்படத் துறையை மீட்க முன்வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அன்பான வணக்கங்கள்” என்று மம்முட்டி எழுதினார். “மலையாள சினிமாவுக்கு உத்வேகம் அளிக்கும் சலுகைகளை அறிவித்த கேரள மாண்புமிகு முதலமைச்சர் ஸ்ரீ பினராயி விஜயன்” என்று மோகன்லால் சமூக ஊடகங்களில் எழுதினார். முதலமைச்சரின் செய்திக்குறிப்பைப் பகிர்ந்துகொண்ட பிருத்விராஜ், “கேரள அரசுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். “திரையுலகிற்கு நிவாரணம் தரும் முடிவுகளை எடுத்த மாநில அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சருக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று திலீப் கூறினார்.

“கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கும், முதல்வர் பினராயிவிஜயனுக் கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றுரிமா கல்லிங்கல் கூறினார். பினராயிவிஜயனுக்கு நன்றி தெரிவித்ததோடு திரையரங்குகளில் அவருக்கு மகிழ்ச்சியான வசந்த வாழ்த்துக்கள் என நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். “திரைப்பட சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், எங்கள் அன்பான முதல்வருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என நடிகர் டோவினோ தெரிவித்துள்ளார். திரையுலகிற்கு நிவாரணம் தரும் முடிவுகளை எடுத்த மாநில அரசுக்கும், முதலமைச்சருக்கும் வாழ்த்துக்கள். ஏராளமானோர் கனவு காணும் சினிமா ஏராளமானோரின் வாழ்வுமாகும். நன்றி நன்றி நன்றி  என சூரஜ் வெஞ்ஞாரமூடு பதிவிட்டுள்ளார்.இயக்குநரும், எப்இஎப்சிஏ பொதுச்செயலாளருமான பி. உன்னிகிருஷ் ணன் தனது முகநூல் பக்கத்தில், “மலையாள சினிமாவை புதுப்பித்த முதல்வரான தோழர் பினராயி விஜயனுக்கு, மார்ச் 31 வரை பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்து, திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பாதியாககுறைத்து, மற்ற சலுகைகளை வழங்கினார் என எழுதினார்,.” குஞ்சாக்கோ போபன், முதல்வருக்கும் அவரது அலுவலகத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். புதியசலுகைகளை அறவித்துள்ள அரசாங்க த்திற்கும் முதல்வருக்கும் நன்றி என்று நிவின் பாலி பதவி கூறியுள்ளார்.

;