cinema

img

ஜனவரி 26ல் வெளியாகும் விக்ரமின் மகான்

மகான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தை, இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கியுள்ளார்.
பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், குடியரசுத் தினமான ஜனவரி 26ம் தேதி மகான் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.