cinema

img

பிப்.24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் வலிமை 

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம், பிப்ரவரி 24 ஆம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியாகவிருப்பதாகப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். 

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கொரோனா பரவல் காரணமாகத் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது ‘வலிமை’ திரைப்படத்துக்கான புதிய ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில் போனி கபூர் கூறியிருப்பதாவது, வார்த்தைகளை விட செயல்களே அதிகம் பேசும். படத்துக்கான காத்திருப்பு தற்போது நிஜமாகவே முடிவுக்கு வந்துவிட்டது. வலிமையின் அனுபவத்தை, பிப்ரவரி 24 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் பெறுங்கள் என தெரிவித்துள்ளார்.

;