cinema

img

ராகவா லாரன்ஸ் - வடிவேலு நடிப்பில் "சந்திரமுகி – 2

சந்திரமுகி 2 குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் 'சந்திரமுகி'. 'சிவாஜி புரொடக்ஷன்' தயாரித்திருந்த இப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயந்தாரா வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். 
இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் வடிவேலும் இணைந்து நடிக்கவிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.