தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (23-04-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.275 குறைந்து ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.59,720-க்கும், கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.7,465-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.