business

img

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,400 உயர்ந்து அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.12,200-ஆகவும், ஒரு சவரன் ரூ.2,400 உயர்ந்து ரூ.97,600-ஆகவும் விற்பனையாகிறது. வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், விரைவில் ஒரு சவரன் விலை ஒரு லட்சத்தை தொடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதே நேரத்தில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.203-ஆக விற்பனையாகிறது.