business

img

ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது! - ரிசர்வ் வங்கி

வங்கி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என தெரிவித்தார். மேலும், நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.