articles

img

பெகுசராயில் உயரும் செங்கொடி

பாட்னா, மே 4- கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நிலப்பிரபுக்க ளுக்கு எதிராக  ஒடுக்கப்பட்டோர் கிளர்ந்தெழுந்த மண்தான் பீகாரில் உள்ள பெகுசராய். ஒடுக்கிய வர்களிடம் இருந்து நிலத்தைப் பறித்து ஒடுக்கப் பட்டோருக்கு வழங்கிய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆழமாக வேரூன்றிய பகுதி இது. மக்களவைத் தேர்தல்களில் சிபிஐயின் பாரம்பரியம் மிக்க தொகுதியான பெகுசராயில் இம்முறை நடப்பது மிக கடுமையான போராட்டம்.

2019இல் கனய்ய குமாரை நான்கரை லட்சம் வாக்குகளில் தோல்வியுறச் செய்த பாஜகவின் கிரிராஜ் சிங் ஒன்றிய அமைச்சரானார்.  ராஷ்ட்ரிய ஜனதா தளமும் போட்டியிட்ட தொகுதியில் எதிர்கட்சி ஓட்டு கள் பிளவுபட்டதும் அதிதீவிர தேசிய உணர்வு தூண்டப்பட்டதும் சிங்கின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.  ஆனால், எங்கேயும் வளர்ச்சி ஏற்பட வில்லை. சொந்தக் கட்சியினரையே பாகிஸ்தான் ஆதர வாளர்கள் எனக்கூறி தீவிர இந்துத்துவ பிரச்சாரம் நடத்தியவரை வாக்காளர்கள் தடுத்து நிறுத்தி மன்னிப்பு கோரச் செய்தது அண்மைக்கால நிகழ்வு.  

நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான அதிருப்தி தனக்கு சாதகமாக இருக்கும் என்கிறார் மெகாகூட்ட ணியின் சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் அவதேஷ் குமார் ராய் .  மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட அவருக்கு இப்போது நாடாளுமன்ற தொகுதி கைகொடுக்கும். ஏப்ரல் 3 வெள்ளியன்று ஸாஹேப்பூர், பலியா உள்ளிட்ட ஒன்றி யங்களில் வலுவான பிரச்சாரத்தை ராய் மேற்கொண் டார்.  தெருமுனைக் கூட்டங்களிலும் வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மிக வலுவான எதிர்கட்சி முன்னணி என்பதால் வெற்றி நிச்சயம்  என்றும், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் இதர பிரச்சனைகள் எதிரொலிக்கும் தேர்த லில் பாஜகவின் கொள்கைகள் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னரான சத்ருஹ்னன் பிரசாத் சிங். பெகுசராய் மக்களவைத் தொகுதியில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில், சிபிஐ இரண்டு, ஆர்ஜேடி இரண்டு, பிஜேபி இரண்டு, ஜேடியு ஒன்று என கட்சி நிலைகள் உள்ளன. நான்காவது கட்ட தேர்தல் நடைபெறும் மே 13 அன்று பெகுசராய் தொகுதிக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

பெகுசராயில் இருந்து ரிதின் பவுலோஸ் 
நன்றி : தேசாபிமானி

;