articles

img

மோடியின் வாண வேடிக்கைகள்! -துஷ்யந்த் தவே

 பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய படம் காட்டும் வேலைகளை என்றைக் குமே  நிறுத்தப் போவதில்லை.ஜூன்  7,2024 அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அலுவ லகத்திற்கு வந்தவுடன் திரு மோடி அரசியல மைப்புச் சட்ட புத்தகத்தை தொட்டு மரியாதை செலுத்தினார். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்த கூட்டம் நடந்தது.

ஆனால், இந்திய அரசியல் அமைப்பை தன் சொல்லிலும்,செயலிலும் மதிக்கிறாரா? 2014 முதல் பிரதமராக அல்லது அதற்கு முன் பாக குஜராத் முதலமைச்சர் ஆக அவருடைய நட வடிக்கைகள் எதுவும் அதை உறுதி செய்ய வில்லை.

அரசியல் சாசன பிரிவு 74 நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பிரதமர் என்பவர் அமைச்சர் கள் குழுவின் தலைவர். ஜனாதிபதிக்கு உதவ வும் ஆலோசனை வழங்கவும் பிரதமர் தலை மையில் ஒரு குழு இருக்க வேண்டும். அவர் தனது பணிகளை அத்தகைய ஆலோசனைக ளின்படி செயல்படுத்துவார் எனக் கூறுகிறது.

பொறுப்பை  நிறைவேற்றும் கடமை!

அண்ணல் அம்பேத்கரும் அவரது சக வடிவமைப்பாளரும் குடியரசுத் தலைவர் முறை யை விட நாடாளுமன்ற முறையை புத்திசாலித் தனமாக தேர்ந்தெடுத்தனர். நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொறுப்புகள் மிக அதிகம் அதை மதிப்பீடு செய்வது என்பது தினந்தோறும் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடை பெறுகிறது. கேள்விகள், நம்பிக்கையில்லா மற்றும் ஒத்திவைப்பு தீர்மானங்கள் வழியாக தினசரி மதிப்பீடு செய்யப்படுகிறது. 5 வருடங்க ளுக்கு ஒரு முறை வாக்காளர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது. நாடாளுமன்றம் நிலையா னது என்பதை காட்டிலும் பொறுப்பை அதிகம் நிறைவேற்றுவதை தான் அவர்கள் விரும்பினர்.

பிரதமரின் வாண வேடிக்கைக்கு என்ன அவசரம்?

ஜூன் 9 அன்று பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் குடியரசுத் தலைவர் செய்து வைத்தார். 10 ஆம்  தேதி மாலை நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தான் அமைச்சர் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் அதே நாளில் விவசாயிகள் நலத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின் 17 ஆவது தவணையாக 12 ஆயிரம் கோடி ரூபாய் அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி.

பிரதமர் அவ்வாறு ஒரு அறிவிப்பை வெளி யிட முடியுமா? அலுவலக விதியின் கீழ் அதன் எல்லைக்குள் அவருக்கு அதற்கான உரிமை உண்டா? செலவீட்டுத் துறையால் ஒழுங்கு படுத்தப்பட்ட பிறகு வேளாண் அமைச்சகம் தான் அதை செய்ய முடியும்? பிரதமர் ஏன் இதில் அவசரம் காட்டினார்? வாண வேடிக்கை நிகழ்த்தினார்?

மேலும் இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் கூடிய முதல் அமைச்சரவை, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று கோடி கூடுதல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட உதவி வழங்கு வது என்ற முடிவையும் எடுத்தது. எந்த அமைச்ச கத்தோடு இது தொடர்புடையது? உரிய அமைச் சர்களுக்கு தெரிவிக்கப்பட்டதா? இந்த அறி விப்பிற்கும் என்ன அவசரம்?

அதேபோல புதிய அமைச்சரவை குழுவை மறுசீரமைக்காமல் தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித் தோவால் மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா ஆகியோ ரின் பதவி காலத்தையும் பிரதமர் நீட்டித்தார்.

அரசியல் அமைப்பின் அறநெறி

 கூட்டணி  தர்மத்திற்கு இனி என்ன நடக்கும்? மேற்கண்ட வாணவேடிக்கைகள் அரசியல் அமைப்பை பற்றி பிரதமர் துளி கூட கவலைப் படவில்லை என்பதை காட்டுகிறது. ஒரு அமைச் சரோ அல்லது அதிகாரத்தில் உள்ள ஒரு உயர் அதிகாரியோ ஏன் சிறிய ஆட்சேபணையை கூட தெரிவிக்கவில்லை?

அரசியல் அமைப்பு அறநெறி ஒரு இயல் பான உணர்வு அல்ல. நாம்தான் அதை வளர்த்து எடுக்க வேண்டும் என நவம்பர் 4, 1948-ல் பி.ஆர்.அம்பேத்கர் கூறினார்.  ஜன நாயகம் என்பது இந்தியாவில் மேலிருந்து கீழே  வழங்கப்படும் வகையில் உள்ளது. இது உண்மையிலேயே ஜனநாயக விரோதமாகும்.

அவரைப் பொறுத்தவரை அரசியல் அமைப்பு அறநெறி என்பது அதன் வடிவங்களு க்கு மிக உயர்ந்த மரியாதை என பொருள்படு வது. மேலும் அந்த வடிவங்கள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பார்வை யில் மிகவும் புனிதமானது.

கூட்டுப் பொறுப்பை மறுக்கும் பிரதமர்!

இந்திய அரசாங்கத்தின் அலுவல்களின் மிக வசதியான பரிவர்த்தனைக்கும் மேலும் அதற்காக அமைச்சர்களிடையே பொறுப்பை வழங்கவும் ஜனாதிபதி விதிகளை உருவாக்கும்  என அரசியல் சாசன பிரிவு 77  வகை செய்கிறது.

ஆனால்,சமீப காலங்களில் இந்திய அர சாங்கத்தின் செயல்பாடுகள்,(அமைச்சரவை குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளு மன்றத்தின்) கூட்டுப் பொறுப்பை  மறுப்பதை காட்டுகிறது. பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங் கள் குவிக்கப்படுகின்றன. அரசியல் அமைப்பின் அடிப்படையை இது அழித்து விடுகிறது.

சர்வாதிகாரத்தை உருவாக்கும் “பக்தி”

இந்திய அரசின் அலுவலகங்கள் முதல் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்ச கங்கள், துறைகள், செயலகங்கள் மற்றும் அலு வலகங்களில்  பரிவர்த்தனை செய்யப்படும். ஆனால் இதற்கு மாறாக தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு மட்டுமே அலுவல்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசியல் அமைப்பு, சட்ட அமைப்பு மற்றும் நெறிமுறைகள் பிரதமரின் மீதான “பக்தியால்” சிதைக்கப்படுகின்றன.

அரசியலில் பக்தி வழிபாடு சர்வாதிகா ரத்திற்கு இட்டுச் செல்லும் உறுதியான பாதை என அம்பேத்கர் எச்சரிக்கிறார். அரசியல் அமைப்பை வடிவமைத்தவர்கள் கடுமையாக எதிர்த்த ஒன்றை நாம் இன்று காண்கிறோம்.

எரியும் மணிப்பூர்!

ஒரு வருட காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. அங்கு செல்ல  பிரதமர் மோடி அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி அங்கே ஆட்சியில் இருந்திருந்தால் 356ஆவது பிரிவின் கீழ் குடியரசுத் தலை வரின் ஆட்சி நீண்ட காலத்திற்கு முன்பே அங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும்.

வறுமை, அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் அல்லது காஷ்மீர் சிக்கலை தீர்ப்பது போன்ற கடுமையான பிரச்ச னைகளை தீர்க்க பிரதமர் மோடி எப்போதாவது அவசரம் காட்டியுள்ளாரா? இவை யாவும் முட்கள் நிறைந்த சிக்கல்கள். இதில் அவரால் வாணவேடிக்கை நிகழ்த்த முடியாது. விளம்பர வெளிச்சத்தில் திளைக்க முடியாது.

நடவடிக்கை எடுத்திருந்தால்...

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் அரசியல் சாசன மாண்புகளை காற்றில் பறக்க விட்டது. நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மை சமூகத்தை கொச்சைப்படுத்தினார். மீண்டும் மீண்டும் அவர்களை தாக்கினார். நம் நாட்டின் மதச்சார் பின்மை அரசியலமைப்பின் அடித்தளமாக இயங்குவதை மறந்துவிட்டார். எதிர்க்கட்சிக ளுக்கு நம்முடைய ஜனநாயகத்தில் மரியாதை உண்டு என்பதையும் மறந்து அவர்களையும் அவமதித்தார். எந்த ஒரு நிறுவனமோ அதன் பாதுகாவலரோ இதற்கு எதிராக எழுந்து நின்று அவருக்கு அதை நினைவூட்டவில்லை, தடுக்கவில்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பார். ஜனநாயகம் மதிப்பையும் மரியாதையும் இழந்திருக்காது.

அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளும் புதிதாக புத்துயிர் பெற்ற எதிர்க்கட்சிகளும் அரசி யல் அமைப்பின் அறநெறியை பிரதமர் கடைப் பிடிக்க வேண்டும் என நினைவூட்டுவார்களா? நம்பிக்கையோடு காத்திருப்போம்!

-துஷ்யந்த் தவே மூத்த வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் 
வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர்

தி இந்து 18/6/2024 
தமிழில் : கடலூர் சுகுமாரன்