அனைத்துத் தொகுதிகள் அல்லது ஒன்றிரண்டு தவிர அனைத்துத் தொகுதிகளையும் வென்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்தாலும் தொகுதிகள் அதிகரிக்கும் பேச்சுக்கு
இடமில்லை. அதே சமயம் பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தொகுதிகளை இழக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
2024 நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்குவதையொட்டி கருத்துக் கணிப்புகளும் வரத் தொடங்கிவிட்டன. இன்னும் ஏராளமான கருத்துக் கணிப்புகள் நம்மைத் தாக்கும். கருத்துக் கணிப்பு ஒரு அறிவியல் செயல்முறை. ஆனால் எந்த ஒரு அறி வியலும் தொழில்நுட்பமும் தவறான நோக்கத்துக் காக பயன்படுத்த இயலும் என்பதற்கு ஏற்ப கருத்துக் கணிப்புகளும் மக்களின் சிந்தனையில் குறிப்பிட்ட தாக்கத்தை உருவாக்க தவறாகப் பயன்படுத்தப்படு கின்றன. எனவே கருத்துக் கணிப்புகள் வெளிவரும் பொழுது அவற்றின் முடிவுகள் மட்டுமின்றி அவை எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதையும் என்ன பிரச்சனைகள் மக்கள் முன்பு வைக்கப்படுகின்றன என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஊடகங்களில் பெரும்பாலானவை மோடி அரசின் ஊதுகுழல்களாக இருப்பதால் மிக கவனம் தேவை.
நம்பகத்தன்மையற்ற மிகச்சிறிய சாம்பிள்!
சில நாட்களுக்கு முன்பு “இந்தியா டுடே” பத்திரிகை Mood of the Nation எனும் தலைப்பில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி மீண்டும் 3ஆவது முறை யாக மோடி தலைமையில் பா.ஜ.க. வெற்றி பெறும் என கூறியுள்ளது. சென்ற தேர்தலைவிட இந்த முறை தொகுதிகள் குறையும் எனவும் இந்த கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது. இதே கருத்துக் கணிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பா.ஜ.க. எந்த தொகுதி யிலும் வெல்லப்போவது இல்லை எனவும் கூறுகிறது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பா.ஜ.க. எந்த தொகுதி யிலும் வெல்லப்போவது இல்லை எனும் உண்மை நிலை இருப்பதால் இந்த கருத்துக் கணிப்பு முழுவ துமே உண்மையை பிரதிபலிக்கிறதா எனும் கேள்வி எழுகிறது.
இந்த கருத்துக் கணிப்பு நடத்திய செயல்முறையை ஆழமாக ஆய்வு செய்தால் பல முரண்பாடான தகவல்க ளை அறியலாம். இந்த கருத்துக் கணிப்பு இந்தியா முழுவதும் 35,801 பேரிடம் எடுக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த கருத்துக் கணிப்பு ஒரு மாநிலத்திற்கு சராசரியாக 1200க்கும் குறைவான எண்ணிக்கையில் எடுக்கப்பட்ட மாதிரி ஆகும். தொகுதி எண்ணிக்கையில் கணக்கிட்டால் ஒரு நாடாளு மன்ற தொகுதிக்கு சராசரியாக 65 முதல் 75 பேரிடம் மட்டுமே கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தியா வில் மொத்த வாக்காளர்கள் 94 கோடி. கருத்துகள் கேட்கப்பட்டது 35,801 பேரிடம்! சராசரியாக விகிதாச்சா ரம் 0.004ரூ. இவ்வளவு குறைவான எண்ணிக்கை என்பது சரியான மாதிரியாக (sample) இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி.
30 சதவீத ஏழைகள் கருத்துக் கணிப்பில் இல்லை!
அடுத்த முக்கியமான அம்சம் இந்த கருத்துக் கணிப்பு எவ்வாறு நடத்தப்பட்டது என்பதாகும். இந்த கணிப்பு CATI முறையில் நடத்தப்பட்டுள்ளது. அதாவது Computer Assisted Telephonic Interview. பல்வேறு அலைபேசி நிறுவனங்களிடம் எண்களை பெற்று கணினி உதவியுடன் தேர்வு செய்யப்பட்ட எண் உரிமையாளர்களிடம் தொலை பேசி மூலம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கருத்து கேட்கும் பொழுது முகத்துக்கு நேரே பேசுவதற்கும் அலைபேசி அல்லது தொலைபேசியில் பேசுவ தற்கும் நிரம்ப வேறுபாடுகள் உள்ளன. ஒருவர் கேள்விக்கு தான் அளிக்கும் பதிலை அவர் முக பாவனையிலிருந்து மனப்பூர்வமாகச் சொல்கிறாரா அல்லது மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு உதட்ட ளவில் வேறு பதிலை சொல்கிறாரா என்பதை நேரில் கருத்து பரிமாற்றம் செய்யும் பொழுதுதான் அறிய இயலும். எனவே அலைபேசி மூலம் நடத்தப்படும் கருத்துக் கேட்புகள் முழுவதுமாக உண்மை நிலையை பிரதிபலிக்கும் என கூற இயலாது.
இதைவிட மிக முக்கியமான முரண்பாடு என்ன வெனில் இந்தியாவில் சுமார் 30சதவீதம் பேரிடம் தொலைபேசி அல்லது அலைபேசி இல்லை என அரசின் ஆய்வுகளே தெரிவிக்கின்றன. ஏழை அல்லது விளிம்பு நிலை மக்களிடம் அலைபேசி வாங்குவதற்கோ அதற்காக மாதாமாதம் செலவு செய்வதற்கோ வசதி வாய்ப்புகள் இல்லை. அரசின் கொள்கைகள் மற்றும் செயல்கள் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது இவர்கள்தான்! அலைபேசி மூலம் கருத்துக் கேட்பு என்பது இந்திய மக்களில் 30 சதவீதம் பேர் அதுவும் ஏழைகள் ஒதுக்கப்படுகின்றனர் என்று பொருள். அத்தகைய ஒரு கருத்துக் கணிப்பு எப்படி நம்பகத்தன்மை கொண்டதாகவும் அறிவியல் அடிப்படையிலும் இருக்க இயலும்? எனவே இந்த கருத்துக் கணிப்பு முழுவதுமாக நம்பகத்தன்மை கொண்டது என கூற இயலாது. கருத்துக் கணிப்பு களை உள்வாங்குவதற்கு முன்பு நேரடியாக நடத்தப் படுகின்றனவா அல்லது அலைபேசி மூலம் நடத்தப் படுகிறதா என்பதை அறிவது அவசியம்!
இதே கருத்துக் கணிப்பு தமது வாழ்வாதாரத் துன்பங்கள் அதிகமாகியுள்ளன என மக்கள் வெளிப் படுத்தினர் என்பதை கூறுகிறது:
வேலையின்மை/ விலைவாசி உயர்வு/ பொரு ளாதார அசமத்துவம் ஆகியவை மோடி ஆட்சியில் மோசமாகியுள்ளன என்பதை மக்கள் வெளிப்படுத்தி யுள்ளனர். கருத்துச் சொன்ன மக்களில் அலைபேசி இல்லாத காரணத்தால் பொருளாதார அடிமட்டத் தில் உள்ள 30 சதவீதம் பேர் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியி ருந்தும் மோடி ஆட்சியில் தமது வாழ்வு நிலை மோச மாகியுள்ளது என பெரும்பான்மையான மக்கள் கூறுகின்றனர். வாழ்வாதார நிலையைத் தாண்டியும் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது எனவும் அம லாக்கத்துறை உட்பட புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன எனவும் மக்கள் கருதுகின்றனர். மோடி ஆட்சியில் ஊழல் ஒழிந்து விட்டது என்று கூறுபவர்களைவிட ஊழல் ஒழிய வில்லை என்பவர்கள் 1சதவீதம் அதிகமாக உள்ள னர். இதுதான் மக்கள் கருத்து எனில் அவர்கள் எப்படி மீண்டும் மோடி அரசாங்கம் அமைய வாக்க ளிப்பார்கள்? இந்த முரண்பாடை விளக்க கருத்துக் கணிப்பு நடத்துபவர்கள் தயாராக இல்லை.
இந்துத்துவா வாக்கு வங்கி!
இதற்கு பின்னரும் மோடி ஆட்சி அமைய மக்கள் வாக்களிக்கிறார்கள் எனில் நாடு முழுவதும் ஒரு வலுவான பரவலான இந்துத்துவா வாக்கு வங்கி உருவாகியிருக்க வேண்டும். அப்படி ஒரு வாக்கு வங்கி வடமாநிலங்களில் ஓரளவு உருவாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அத்தகைய வாக்கு வங்கி தேசம் முழுவதும் உருவாகியுள்ளது என மதிப்பிட முடியாது. மேலும் அத்தகைய வாக்கு வங்கியின் அங்கத்தினர்களாக உள்ளவர்கள் கருத்துக் கணிப்பில் மோடி ஆட்சிக்கு எதிராகப் பேச மாட்டார்கள். 2019 தேர்தலில் பா.ஜ.க. கீழ்க்கண்ட மாநிலங்களில் அனைத்து தொகுதிகளையும் வென்றது:
குஜராத் (26/26), ஹரியானா (10/10), இமாச்சலம் (4/4), ராஜஸ்தான் (25/25), தில்லி (7/7), உத்தர்கண்ட் (5/5). மேலும் பீகார்(39/40), கர்நாடகா (26/28), மத்தியப் பிரதேசம் (28/29), ஜார்க்கண்ட் (12/14), சத்தீஸ்கர் (9/11), மகாராஷ்டிரா(41/48), உ.பி. (64/80) எனவும் வென்றது.
அனைத்துத் தொகுதிகள் அல்லது ஒன்றிரண்டு தவிர அனைத்துத் தொகுதிகளையும் வென்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிக ரித்தாலும் தொகுதிகள் அதிகரிக்கும் பேச்சுக்கு இட மில்லை. அதே சமயம் பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தொகுதிகளை இழக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் அமையும் எனும் கருத்துக் கணிப்புகள் நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை. திணிக்கப் படும் இத்தகைய கருத்துக் கணிப்புகள் குறித்து கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது மிக அவசியம்.