articles

img

எங்கள் நைனா....... ( கி.ரா. தொடர்பான சிறப்புக்கட்டுரை)

நைனா கி.ரா. காலமாகிவிட்டார். கோவில் பட்டியில் அன்றைய கம்யூனிஸ்டுக் கட்சியின் முழு நேர ஊழியராய் விவசாய அரங்கில் செயல்பட்டவர். அடக்குமுறைக் காலத்தில் அவர் சதிவழக்கில் கைது செய்யப்பட்டார்.

அப்போது தமிழக முதல்வராயிருந்த குமாரசாமி ராஜாவிடம் ரசிகமணி டி.கே.சி. தலையிட்டுஅனாவசியமாக அவரை கைது செய்துள்ளீர்கள் என்றுகடிந்ததால் நைனா விடுத லை செய்யப்பட்டார்.தமிழகத்தில் கலை இலக்கியப் பெருமன்றம் துவங்கிய போது ஜீவா நாடோடிக்  கதைகளை சேகரிக்கும் பொறுப்பை கி.ரா.வுக்கு அளித்தார். அப்பணியில் இறங்கியவர் எழுத்தாளராகிவிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதை ஏற்காமல் கட்சி வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.எனக்குக் கடிதம் எழுதினாலும் நேரில் போனில் பேசினாலும் ரெண்டு கட்சியும் ஒண்ணாகணும் அதுக்கு ஏதாவது வழிபாரு என்பார். கணபதி அம்மா மறைவின்போது நான் உடல்நலமின்றி மருத்துவமனையிலிருந்தேன். தொலைபேசியில் நான் பேசிய போது அழுதுவிட்டு கட்சி ஒற்றுமையை வலியுறுத்தினார்.

அவரது 60வது வயது மணிவிழாவை மீரா நடத்தினார். அது 1983. அதில் நானும் பாரதி கிருஷ்ணகுமாரும் கலந்து கொண்டு அவருக்கு ஒரு வேட்டி அணிவித்துப் பாராட்டினோம். அவரது வேட்டி என்ற கதை புகழ்மிக்கது.அவரது கோபல்ல கிராமம் நாவலை ஒரு தோழர் மூலம் சாத்தூருக்கு எனக்கு அனுப்பினார்.நான் படித்துவிட்டு 100 புத்தகங்கள் வாங்கி பலரிடம்வழங்கினேன். அதை முதலில் வாசகர் வட்டம் வெளியிட்டிருந்தது.அடுத்து இத்தகவலுடன் இடைசெவல் போய் சொன்னேன். அவர் மகிழ்ச்சியடைந்தார்.

அதன் பிறகு செளபாவுடன் அங்கு சென்ற போது, நைனா, நேற்றுத்தான் பாரதிராஜா வந்துட்டுப்போனான். முதல் மரியாதை படத்தில் எனது கழுவன் கதையை பயன்படுத்திக் கொண்டதற்காக பத்தாயிரம் கொடுத்துவிட்டுப் போனான்; எங்க அம்மா கிட்டக் குடுத்தேன். அவள் இவ்வளவு பணத்தை இப்பத்தான் பாத்துருக்காடா என்றார்.நானும் மேலாண் மையும் இணைந்து ஆலங்குளத்தில் (விருதுநகர் மாவட்டம்) ஒரு இலக்கிய வகுப்புக்கு ஏற்பாடு செய்தோம். நைனா வந்து தமுஎகச தோழர்களுக்கு ஒருநாள்முழுவதும் இருந்து அறிவார்ந்த உரைநிகழ்த்தினார்.

அவர் புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் அவ ரை சந்தித்து,இனி நம்ம நாட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான என்று கேட்டேன். இல்லை. இங்கு தண்ணியும் காத்தும் ருசியாயிருக்கு. நிறைய எழுதமுடியுது என்றார். அப்டீன்ன இங் கே யே இருங்கள் என்றேன்.புதுவை தோழர் சு.ராமச்சந்திரன்தான் நைனாவுக்கும் எனக்குமிடையே கண்ணியாக இருந்தார். எழுத்தாளர் எஸ்ரா, நைனாவுக்கு இலக்கியத்திற்கான நோபல்பரிசு வழங்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.தமிழும் இலக்கியமும் வாழும் வரை நீங்கள் இருப்பீர்கள் நைனா!

கட்டுரையாளர் : எஸ்.ஏ.பெருமாள்

;