articles

img

சமரசமற்ற போராட்ட வரலாறு கொண்ட அன்புத்தோழர் ‘வி.ஆர்’

அப்பழுக்கற்ற எளிய வாழ்க்கை, அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல், வறுமை யில் வாடும் தொழிலாளர்களின் உரி மைகளை பெற்றுக் கொடுக்கும் உரி மைக்குரல். கட்சி ஊழியர்களை தலை வர்களாக உருவாக்கும் அணுகு முறை, கட்சி அமைப்பு மீது அளவற்ற பற்றும் மரியாதையும் கொண்டு வாழ்ந்த கம்யூனிஸ்ட் போராளி தோழர் வி.ராம சாமி. நாமக்கல் மாவட்டத்தில் ‘வி.ஆர்’ என்று அன்புடன் மக்களால் அழைக்கப் பட்ட வி.ராமசாமி 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் திருச்செங் கோடு மோலிப்பள்ளி கிராமத்தில் வேலாயுதம் நாடார் - மாறாயி தம்ப தியரின் எட்டாவது மகனாக பிறந்தார்.

வறுமையின் பிடியில் இருந்தது இக்குடும்பம். ராமசாமிக்கு ஏழு வயதாகும் பொழுது, திருச்செங்கோடு அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத் தில் காந்தி ஆசிரமத்தில் சேர்த்து விடப்பட்டார். ஆசிரமத் தலைவர்க ளும் அங்கிருந்த மாணவர்களும் சுற்று வட்டார கிராமங்களில் குடிப்பழக்கத் திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார் கள். ஒரு நாள் ராமசாமி மணியனூர் கள்ளுக் கடைக்கு குடிக்க வந்த ஒரு நபரின் காலில் விழுந்து கள்ளு குடிக்க வேண்டாம் என கெஞ்சினார். கோபம் கொண்ட அந்த நபர் கூரான கல்லை எடுத்து ராமசாமியின் முன் மண்டையை பிளந்தார்.

தேசிய இயக்க ஆர்வத்தால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். கதர் ஆடை மட்டுமே அணிவார்.  1946 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. டி.பிரகாசம் முதல்வரானார். மதுவிலக்கு கொள்கை உடையவரான பிரகாசம், கள் இறக்குவதை ராஜாஜி தடை செய்த பின்பு பதநீர் இறக்கி பிழைத்து வந்த பனையேறும் தொழி லாளர்கள் பதநீரும் இறக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தார்.  அன்று சங்ககிரி உள்ளிட்ட திருச் செங்கோடு தாலுகாவில் மூன்றில் ஒரு பகுதி பனையேறும் தொழிலாளர்கள் வசித்து வந்தனர்.

அவர்களைத் திரட்டி கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போராட்டம் நடத்த திட்டமிட்டது. டி.எஸ்.அர்த்த னாரி, எஸ்.பி.ராமு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதில், முன் நின்றனர். வி.ராமசாமியும் அவர்களோடு சேர்ந்து செயல்பட்டார். கம்யூனிஸ்டுகள் தலை மையில் போராட்டக் களத்தில் நின்ற பனையேறும் தொழிலாளிகள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மூன்று நாள் அவகாசம் கொடுத்து எச்சரிக்கையை முன் வைத்தார்கள். ஆயிரக்கணக்கான வர்கள் பங்கேற்ற ஊர்வலம் திருச்செங் கோட்டில் நடைபெற்றது.

 இதைக் கண்ட சேலம் மாவட்ட ஆட் சியர் பதநீர் இறக்க அனுமதி கொடுத்து புதிய உத்தர விட்டார். இப்போராட்டத் தின் விளைவாக செங்கொடி கிராமப்பு றங்களுக்குள் பறக்க ஆரம்பித்தது. ராம சாமியின் சிந்தனைக்குள்ளும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கம் யூனிஸ்டுகளோடு சேர்ந்து போராட்டத் தில் ஈடுபட்ட பின்பு அது வெறுமனே ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல; சமூக பொருளாதார பிரச்சனை என்பதை அவர் காண முடிந்தது.

கம்யூனிஸ்டுகள் அதை சாதி பிரச்சனையாக கருதாமல் புதிய அணுகுமுறை மூலம் தீர்த்தது அவர் சிந்தனையில் பதிந்தது. திருச்செங் கோட்டில் கம்யூனிஸ்டுகள் மரமேறும் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக கம்யூனிஸ்ட் கட் சியை சேர்ந்த எஸ்.பி.ராமு அவர்களை யும் செயலாளராக வி.ராமசாமி அவர்க ளையும் தேர்வு செய்தனர்.

பின்னர் தீவிர கம்யூனிஸ்ட் அனுதாபியானார். வி.ராம சாமியை கம்யூனிஸ்ட் ஆக வார்த்தெ டுத்ததில் டி.எஸ்.அர்த்தனாரி, டி.ஆர்.சண்முகம், எஸ்.பி.ராமு ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் முக் கிய பங்கு உண்டு. 1948 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது நூற்றுக் கணக் கான கம்யூனிஸ்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்சித் தடையை எதிர்த்து வெள்ளைக் கொடி பிடித்து சமாதான ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் சர்க்கரை செட்டியார் அறைகூவல் விடுத்தார்.

அதனை ஏற்று திருச்செங் கோடு நகரில் அக்டோபர் 21ஆம் தேதி அன்று டி.எஸ். அர்த்தனாரி, டி.ஆர். சண்முகம், வி.ராமசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வ லமாய் சென்றனர். வி.ராமசாமியின் செயல்பாடுகளை கவனித்து வந்த அரசாங்கம் 1949 ஆம் ஆண்டில் அவரை கைது செய்து திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தது. அங்கு பலத்த தாக்குதலுக்கு உள்ளானார். அதன்பி றகு சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது சேலம் மத்திய சிறையில் 350 க்கு மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் அடைக்கப்பட்டிருந்தனர். சிறை அதிகா ரிகளோ கொடுமையே உருவாக இருந் தனர். ஒரு கட்டத்தில் சிறை அதிகாரி கள் இடும் உத்தரவுகளை ஏற்க முடியாது என கம்யூனிஸ்டு கள் போராடினார் கள்.  இதனால் ஆத்திரம் அடைந்த சிறை நிர்வாகம், 1950 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் காவலர்கள் கம்யூனிஸ்டு கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை வெறித் தாண்டவம் ஆடினார்கள்.   இதில் திருச்செங்கோட்டை சேர்ந்த காவேரி முதலியார் உள்ளிட்ட 22 கம்யூ னிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

அப் போது காவேரி முதலியாரின் மகன் சலம் விசாரணைக் கைதியாக வி.ராமசாமியுடன் அடைக்கப் பட்டிருந்தார். தந்தையின் உடலைக் கூட பார்க்க சேஷாச லத்தை கொடூர மனம் படைத்த காவல்துறையினர் அனுமதிக் கவில்லை. இக்காலகட்டத்தில் தான் எம்.வி. சுந்தரம் முன்னிலையில் வி.ராம சாமி கட்சி உறுப்பினரானார். ராமசாமி உட்பட 33 பேர் மீது அரசாங்கம் வழக்கு தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைத்தது.

பின்னர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டு மூன்றரை வருட சிறை வாசத்திற்கு பின் ராமசாமி 1952 ஆம் ஆண்டில் விடுதலையானார். 1965-66 ஆம் ஆண்டுகளில் ஓராண் டுக்கு மேல் பாதுகாப்பு கைதியாக இருந் தார். 1976 ஆம் ஆண்டில் 11 மாதங் கள் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டி இருந்தது. தனது கணவரின் மீதான பேரன்பினாலும் அவரது அரசி யல் நடவடிக்கைகளை புரிந்து கொண்டு இருந்ததாலும் சிரமங்கள் அனைத்தை யும், இவரது இணையர் அருக்காணி தாங்கிக் கொண்டார்.

 1953-54 ஆம் ஆண்டுகளில் திருச் செங்கோடு புள்ளிகார் மில்லில் (மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத் தின் அண்ணன் வையாபுரி முதலியா ருக்கு சொந்தமான மில்) பஞ்சாலை தொழிலாளர் சங்கம் துவக்கப்பட்டது. அதன் தலைவராக டி.எஸ்.அர்த்த னாரியும், செயலாளராக வி.ராமசா மியும் செயல்பட்டனர். 1966 ஆம் ஆண்டு கடலூர் சிறையில் இருந்து விடுதலை யான வி.ராமசாமி, தொழிலாளர் வர்க்கத்தின் மகத்தான தலைவர் ஏ.நல்லசிவன் அவர்களின் ஆலோ சனையின் பேரில் சங்ககிரியில் சிமெண்டாலை தொழிலாளர் சங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். சிஐடியு சங்கம் இங்கே உருவாக்கப் பட்டது. அதை உருவாக்குவதிலும் பலப்படுத்துவதிலும் ராமசாமி முன் நின்றார்.  

அதேபோன்று விசைத்தறி தொழி லாளர் சங்கம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக வி.ராமசாமியும், செயலாள ராக அரசப்பனும் செயல்பட்டனர். விசைத்தறி தொழிலாளர்களின் நலன் காக்க வலுவான போராட்டங்களை நடத் தினார் ராமசாமி. 1989 ஆம் ஆண்டில் வி. ராமசாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது விசைத்தறி தொழிலாளி களுக்கு சட்ட பாதுகாப்பு தொழில் பாது காப்பு மற்றும் 1989-90 ஆம் ஆண்டுக் கான போனஸ் கோரி போராட்டம் தொடங்கியது. வேலை நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்டது.  

இந்த தகவலை கேள்விப்பட்ட முதலாளிகள் உண்ணாவிரதத்தை சீர்குலைக்கவும், வேலை நிறுத்தத்தை தடுக்கவும் உண்ணாவிரதப் பந்தலுக்கு தீ வைத்தனர்.  வி.ராமசாமியை அடித் துக் கொன்று விட வேண்டும் என்பதற் காக முதலாளிகள் 300 முதல் 400 இருசக்கர வாகனங்களில் வெறிபி டித்து அலைந்தனர். தகவலை கேள்விப் பட்ட தோழர்கள், ராமசாமியை பத்தி ரமாக ஈரோட்டுக்கு அழைத்துச் செல்ல படகில் ஏற்றி காவேரி ஆற்றில் வரும் போது, படகு கவிழ்ந்து ராமசாமி நீரில் விழுந்தார்.

கரையிலிருந்த மக்கள் விரைந்து சென்று ராமசாமியைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.  தொழிற்சங்க தலைவரான ராம சாமி 1953 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை மோலிப்பள்ளி பஞ்சா யத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளார். அதே போன்று சேலம் மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தின் மோலிப் பள்ளி கிராம தலைவராகவும், சேலம் மாவட்ட கைத்தறி தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் செயல் பட்டு உள்ளார்.

1989 ஆம் ஆண்டில் திருச்செங் கோடு தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வி.ராமசாமி சிறப்பாக பணி யாற்றி னார். இதர பகுதி மக்களின் பிரச்சனை களையும் அவர் சட்டமன்றத்தில் எடுத்து ரைத்தார். தொழிலாளி வர்க்க லட்சியத் திற்காக ஐந்தரை ஆண்டு சிறைவாசம், ஒன்றரை ஆண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டவர் தோழர் வி.இராமசாமி.  விடுதலைப் போராட்ட வீரர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர், தியாகசீலர் தோழர் வி.ராமசாமி அவர்களின் அப்பழுக்கற்ற பொது வாழ் வும், உழைக்கும் மக்களின் உரிமைக் கான சமரசமற்ற போராட்ட வரலாறும் என்றென்றும் நம்மை வழி நடத்தும்! தோழர் ‘வி.ஆர்’ என்கிற மகத்தான தலைவனின் வரலாற்றை இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண் டும் என்கிற நோக்கத்தோடு, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட் டக்குழு தோழர் ‘வி.ஆர்’ நூற்றாண்டு விழாவை வெகுவிமர்சையோடு கொண்டாடுகிறது. தோழர் ‘வி.ஆர்’  அவர்களின் நீண்டதொரு பயணங் களை தொகுத்து நூற்றாண்டு மலர் வெளியிடுவதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பெருமை கொள்கிறது. கட்டுரையாளர்: எஸ்.கந்தசாமி,  நாமக்கல் மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.