articles

img

கோவை விமான நிலைய விரிவாக்க நில விவகாரம் 0பி.ஆர்.நடராஜன்

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் விமான நிலையமாக கோயம்புத்தூர் சர்வ தேச விமான நிலையம் திகழ்கிறது. சர்வதேச விமானங்கள் கூடுதலாக வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். 

தமிழ்நாடு அரசின்  நிபந்தனை என்ன?

2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதற்கான முனைப்பான பணிகளை முடுக்கிவிட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு என ரூ.2,100 கோடி செலவு செய்து நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. அந்நிலங்களை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளது. விமான நிலைய ஆணையம் விரிவாக்கப் பணிகளை செய்யும்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, நிலங் களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க நிபந்தனை விதித்துள்ளது. மாநில அரசால் ஒப்படைக்கும் நிலங் களைக் கொண்டு விரிவாக்கம் செய்யப் படும் போது எதிர்காலத்தில் தனியாருக்கு தாரை வார்க்கப்படக் கூடாது என்பதே அந்த நிபந்தனை ஆகும். ஆனால், விமான நிலைய ஆணையம் இந்த நிபந்தனையை தளர்த்திட வலியுறுத்தி வருகிறது. 

விமான நிலையங்கள் தனியார்மயம்

மோடி தலைமையிலான பாஜக அரசு ஏற்கனவே ஏழு விமான நிலையங்களை தனி யாருக்கு தாரை வார்த்து உள்ளது. மேலும், 16 விமான நிலையங்களை விற்க ஏற்பாடு கள் செய்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மோடி அரசின் கடந்த ஆட்சிக் காலத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை கேரள அரசே ஏற்று நடத்துவதாக தெரிவித்த போதும், அதை ஏற்காமல் அதானி குழும நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.  அதன் பிறகு அங்கு விமான நிறுத்தக் கட்டணங்கள், வர்த்தக நிறுவனங்களின் வாடகை, வாகன நிறுத்து மிட கட்டணங்கள் உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டது. விமானப் பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர். அப்போதே நாடாளுமன்றத்தில் இதனைக் கண்டித்து பேசியுள்ளேன். மேலும், இந்த அனு பவத்தை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழ்நாடு முதலமைச் சரிடம் இதுகுறித்து நேரிலும் வலியுறுத்தி யிருந்தேன். இவற்றை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அரசு தற்போது நிபந்தனை விதித்துள்ளது.

நிலம் அளித்த எளிய மக்கள்

கோவை விமான நிலையத்திற்கு நிலம் அளித்தோர் அனைவரும் சாதாரண பொது மக்களே. இம்மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பில் வாங்கிய நிலங்களை சந்தை மதிப்பிற்கும் பல மடங்கு குறைவாக அரசுக்கு அளித்துள்ளனர்.  பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் அளித்த நிலத்தை, தனியார் லாபம் பெறும் வகையில் ஒன்றிய அரசு  பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசு தனது நிபந்தனையில் உறுதியாக இருக்க  வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். 

தனியாருக்காக தவிக்கும் வானதி சீனிவாசன்

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சரை பாஜகவை சேர்ந்த கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பி னர் வானதி சீனிவாசன் சந்தித்துள்ளார். அதில், விமான நிலைய விரிவாக்கத்திற் காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஒப்படைப்பதில்,  மாநில அரசு நிபந்தனை யை தளர்த்த வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார். 

தனது தொகுதிக்குட்பட்ட உக்கடம் பகுதி மக்கள் வீடில்லாமல் அவதிப்படு கிறார்களே, அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றோ; பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மூன்று தலைமுறைகளாக இழப்பீடு கேட்டு  நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார் களே, அவர்களுக்கான இழப்பீடை வழங்க வேண்டும் என்றோ; கோரிக்கை வைத்த தாய் தெரியவில்லை. மாறாக, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் தூதுவராய் சென்றிருப்பது வேதனை அளிக்கிறது. இது சரியானது அல்ல.

நிபந்தனை தளர்த்தப்பட்டால் எதிர்காலத் தில் கோவை விமான நிலையம் தனியா ருக்கு விற்கப்பட வாய்ப்புள்ளது. பொது மக்களின் சொத்தாக விளங்க வேண்டிய ஒன்றை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் மக்களின் சார்பாக நின்று பேச வேண்டிய பாஜகவினர் பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களின் தூதுவர்கள் போல பேசிக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. தமிழ்நாடு அரசு, இவர்களின் நோக்கங்களை உள்வாங்கிக் கொண்டு, ஏற்கனவே எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

பி.ஆர்.நடராஜன்
கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்