articles

img

விவசாயத்துறைக்கான தொலைநோக்கு பார்வையற்ற பட்ஜெட்! - ஆர்.ராம்குமார்

விவசாயத்தில் பல்வேறு எதிர் மறையான காரணிகள் உள்ள போதும், உணவு மற்றும் உரங்க ளுக்கான மானியத்தை அரசு குறைத்துள் ளது. கால்நடைப் பாதுகாப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத்திற்கு இந்த பட்ஜெட் டில் எதுவுமே இல்லை. உலகளாவிய அளவில்,  விவசாயத்தில்  இரட்டை நெருக்கடி காணப்படுகிறது, ஒன்று, உணவு நெருக்கடி, மற்றொன்று உரங்களுக்கான நெருக்கடி.  ஒரு பக்கம் உலகளாவிய அளவில் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, உணவிற்கான பற்றாக்குறை அதிகரிக்குமோ என்ற அச்சம் உள்ளது.  உணவுப் பணவீக்கம் அதிக ரிப்பது அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கவலையளிக்கும் விஷயமாக இருந்தது. மறுபுறம், கடந்த இரு ஆண்டுகளில் உலக ளாவிய உரங்களின் விலை 200 விழுக் காடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவிலும் உரங்கள் மற்றும் இதர விவசாய வேதிப் பொருட்களுக்கான விலை யும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

தோல்விக்கு அரசு விளக்கமளிப்பது கடமை

2015 மற்றும் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவதில் தாங்கள் ஏன் தோற்றுவிட் டோம் என்று விளக்கம் அளிக்கும் கடமை ஒன்றிய அரசுக்குள்ளது. அரசு ரீதியான தரவுகளின்படி,  விவசாயத்திற்கான வருமா னம் 2015ஆம் ஆண்டிற்குப் பின் கணிசமா கக் குறைந்துள்ளது. 2020-2021 மற்றும் 2022-2023க்கு இடைப்பட்ட காலத்தில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள துறைகளின் ஆண்டு வளர்ச்சி விகிதம் மூன்றிலிருந்து மூன்றரை விழுக்காடு தேக்கம் அடைந்துள்ளது.  சில விவசாய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்திருந்தா லும், இதன் பலன் சொற்பமாகவே உள்ளது. மிகச் சில விவசாய உற்பத்திப் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதியாகின்றன. ஒரு நிதி நிலை அறிக்கையை உரு வாக்கும்போது இரண்டு விதமான அம் சங்களை கருத்தில் கொள்ளவேண்டும்.  ஒன்று, உணவு மற்றும் உர விலைகளிலி ருந்து விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும். இரண்டு, விவசா யத்திலிருந்து கிடைக்கும் நிகர வருமா னத்தை பெருக்க தேவையான நட வடிக்கைகளை எடுக்கவேண்டும்.

ஏமாற்றமளிக்கும் ஒதுக்கீடுகள்

உணவு மற்றும் உரங்களுக்கான மானியங்கள் அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படாது என்ற எதிர்பார்ப்பு பர வலாக இருந்தது. பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், உணவு வினியோகத்திற்கான வழிகாட்டுதல்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் உணவுப் பொருட்களை சுதந்திரமாக விநி யோகிப்பது பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த ஏமாற்றம் பட்ஜெட்டுக்கு முன்பே விவசாயிகளுக்கு கிடைத்தது. இந்த நிலை பாட்டை பட்ஜெட் உறுதிப்படுத்தியுள்ளது.  உணவிற்கான மானியம் 2022-2023ஆம் ஆண்டின் திருத்தியமைக்கப்பட்ட செல வினத்தில் 2.87லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.  இந்த மானியம் தற்போதைய 2023-2024ஆம் ஆண்டின் பட்ஜெட் செல வினத்தில் 1.97லட்சம் கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இதனால் சர்வதே சச் சந்தையின் சூறாவளிகளில் விவசாயி கள்  நிர்க்கதியாக நிற்க வைக்கப்பட்டுள் ளார்கள்.  இதன் விளைவாக விவசாயமும் அதனைச் சார்ந்த பொருளாதாரமும் கடு மையாகப் பாதிக்கப்படும் அளவிற்கு பல வீனமடையும்.

கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற விவசாயிகளின் குடும்பங்களும் கடுமையா கப் பாதிக்கப்படும். ஏனெனில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையானது சென்ற 2022-2023ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் 73,000 கோடி ரூபா யாக இருந்தது. ஆனால் தற்போது இதற்கான ஒதுக்கீடு 60,000 கோடி ரூபா யாகக் குறைந்துள்ளது.  உரங்களுக்கான மானியத்தை குறைத்துள்ளதால் விவசாய உற்பத்திக்கான செலவுகள் விவசாயிக ளுக்கு அதிகரிக்கும்.  இதனால் விளைபொ ருட்களின் விலையும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டத் திற்கு ஈடு செய்யும் வகையில் எதுவும் அறி விக்கப்படவில்லை. விவசாய விளைச்சலுக்கும் எந்தவித மான ஆதரவையும் அளிக்கவில்லை. விவ சாய உற்பத்தி குறைவாகவே உள்ளது. 

உரங்களின் விலை அதிகரித்துள்ள தால், தனக்கு கட்டுபடியாகக்கூடிய அள விற்கு குறைந்த அளவிலான உரங்க ளையே விவசாயிகள் பயன்படுத்தும் நிலை  உருவாகியுள்ளது. இதனால் பயிருக்கான ஊட்டச்சத்து சமமற்ற நிலையில் கிடைக்கிறது. எனவே விளைச்சல் மிகவும் குறைவாகவே கிடைக்கும் சூழல் உருவாகி யுள்ளது. ஆனால் அரசோ இயற்கை விவசா யத்தின் மாற்று வகைகளை ஊக்குவித்துள் ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள இயற்கை விவசாயத்திற்கான தேசிய திட்டத்திற்கு இந்த பட்ஜெட் 459 கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளது. இயற்கை விவசாயம் வெற்றிகர மானது என்று அறிவியல் ரீதியாக நிரூ பிக்கப்படவில்லை. பயிர் உற்பத்தி 25 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு குறைய லாம். விளைச்சல் குறைந்தால், விவசாயம் எப்படி இலாபகரமானதாக இருக்கும்?  விவசாய இடுபொருட்களின் விலை  அதிகரிக்கிறது. ஆனால் விளைபொருட்க ளுக்கான விலையோ தேக்கமடைந் துள்ளது.

மூலதனச் செலவினம்

வாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தைப் பொறுத்தவரை, மூலதனம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் பாசனத்தை அதிகரிக்க மட்டுமல்ல, விவ சாயச் சந்தைகளை (மண்டிகள்) கட்ட மைக்கவும் வளர்க்கவும் கூட மூலதன ஒதுக்கீடு அவசியம். 2022-2023ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அரசின் மொத்த மூலதனச் செலவினம் 7.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் பயிர்ப் பாது காப்பு, கால்நடைப் பாதுகாப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்திற்கு வெறும் 119 கோடி ரூபாயே ஒதுக்கப்பட்டது. இந்த சொற்பத் தொகையும் 2023-2024ஆம் ஆண்டில்  84.3 கோடி ரூபாயாகக் குறைக் கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாசனம் மற்றும் வெள்ளத்தைக் கட்டுப் படுத்துவதற்கான மூலதனக் கணக்கில் 2022-2023ஆம் ஆண்டின் பட்ஜெட் ஒதுக்கீடு 350 கோடி ரூபாய் மட்டுமே. இந்தத் தொகையும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 325 கோடி ரூபாயாகக் குறைக்கப் பட்டுள்ளது. விவசாய கட்டமைப்பு நிதியம் பற்றி பெருமிதப்படுத்திக் கொள்கிறார்கள். 2022-2023ஆம் ஆண்டில் இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 500 கோடி ரூபாய்தான். ஆனால் இந்தத் தொகையிலும் வெறும் 150 கோடி ரூபாய் மட்டும்தான் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடும் 500 கோடி ரூபாய் மட்டுமே.

அறிவிப்பு உண்டு  நிதி ஒதுக்கீடில்லை

நிதியமைச்சர் தனது உரையில் விவசா யம் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அவர் அறிவித்த திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறித்து  பட்ஜெட் ஆவணங்களில் பட்டியலிடப்பட வில்லை. உண்மையில் இந்த ஒதுக்கீடு கள் எல்லாம் பல்வேறு துண்டுகளாக வெட்டப்பட்டு மிகவும் குறைவான அளவில் பல்வேறு துறைகளுக்கு அளிக்கப் பட்டுள்ளன. இதனால் விவசாயத்துறை யில் மிக மிக சிறிய அளவிலான பலன்களே கிடைக்கலாம். 

சிறுதானியங்கள் குறித்து பேசுவதற்கு கணிசமான நேரம் ஒதுக்கப்பட்டது.  இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவன மையத்தை தரம் உயர்த்துவது தவிர வேறெந்த ஒதுக்கீடும் குறிப்பிடப்படவில்லை.  பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்று மீன்வளத்திற் கான திட்டம் குறித்து உரையில் தெரிவிக்கப் பட்டது. இந்த முதலீட்டிற்கான இலக்கு 6,000 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இதற்கான ஒதுக்கீடு வெறும் 121 கோடி ரூபாய் மட்டுமே என்று பட்ஜெட் தாள்கள் தெரிவிக்கின்றன. இந்திய விவசாயத்தில் உள்ள மிகவும் கடுமையான நெருக்கடிகளை சமாளிக்க பட்ஜெட் தவறிவிட்டது. விவசாயம் குறித்து ஆழமான, அறிவியல்ப் பூர்வமான பார்வை அரசிற்கு இல்லை என்பது, விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையின் அளவு மற்றும் பங்கீட்டிலிருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

கட்டுரையாளர் : மும்பை,  
டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியர்.நன்றி: ‘தி இந்து’, ஆங்கிலம், 2.2.2023,
தமிழில்: ச.வீரமணி

 

;