articles

img

அவசரத் திட்டங்கள் இல்லாமல் திணறும் ஒன்றிய அரசு - ராக்ஸி மேத்யூ கோல், (காலநிலை விஞ்ஞானி)

காலநிலை மாற்றத்தால் உலகில் என்ன நடக்கி றது என்றே தெரிய வில்லை. எப்பொழுது மழை பொழி கிறது, எப்பொழுது வெயில் கொளுத்து கிறது என்பதை திடமாக கணிக்க முடிய வில்லை. மேலும் வெப்ப அலைக்கு நிகராக வெயில், மழை பெய்தால் பேரிடர் அளவுக்கு கனமழை என பிரேக் இல்லா  வாகனம் போல காலநிலை மாற்றத்தால் உலகம் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியு டனே இயங்கி வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் இந்தியாவிலும் வெப்பநிலை படிப்படி யாக உயர்ந்து வருகிறது. 2023 பிப்ரவரி மாதம் நாட்டிலேயே மிகவும் வெப்பமான பிப்ரவரி என்ற வரலாறை படைத்தது. பிப்ரவரியை போல மார்ச், ஏப்ரல் மாதங்க ளும் வெப்ப அலையால் புதிய வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அடிக்கடி இடியுடன் கூடிய கோடைமழை காரணமாக பெரியளவு வெப்பம் உணரப்படவில்லை. ஆனால் மழை இல்லாத நாட்களில் வெப்ப அலைக்கு நிகராக இயல்பைவிட 2-3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருந்தது. அதாவது விட்டுவிட்டு கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது.

வெப்ப அலைகள் எவ்வாறு ஏற்படுகின்றன?

வறண்ட மற்றும் சூடான காற்று மேல் வளிமண்டலத்திலிருந்து மூழ்கி பூமியின் மேற்பரப்பை நோக்கி அழுத்தத்துடன் கீழே தள்ளும் போது வெப்ப அலைகள் ஏற்படுகின்றன. சூடான காற்றின் அழுத்தம் மேலும் கீழே இறங்கும்போது  கூடுதல் வெப்பத்துடன் அழுத்தம் உரு வாகி ஒரு குவிமாடத்தை (மையம்) உரு வாக்குகிறது. இதன்விளைவு வானில் மேகங்கள் உருவாவது கடினமாக்கப்படு கிறது. இதனால் வெப்பம் நேரடியாக தரையை அடைவதால் இயல்பை விட அதிகமாக வெப்பம் தரையை தொடுகி றது. இதுதான் வெப்ப அலைகள் என அழைக்கப்படுகின்றன. கோடைகாலங்க ளில் அதாவது ஏப்ரல்-மே மாதங்களில் இந்திய துணைக்கண்டத்தில் இது ஒரு பொதுவான நிலை என்றாலும், தற்போ தைய காலநிலை மாற்றத்தால் கூடுத லான அளவில் வெளிப்பட்டு அதிதீவிர வெப்ப அலைகள் உருவாகி வருகின்றன.

17,362 உயிர்கள் பலி

புவியியல் ரீதியாக வெப்ப அலை மண்டலம் இந்தோ-பாக் பகுதியில் குறுக்காக அமைந்துள்ளதால் சுமார் 76 கோடி மக்கள் வசிக்கும் வறண்ட வட மேற்கு இந்தோ-பாகிஸ்தான் பகுதி வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. மேலும் இந்திய பகுதியான பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தர கண்ட், தில்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல்-மே மாதங்க ளில் வெப்பநிலை அடிக்கடி 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும். சில சமயங்க ளில் கடுமையான வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கும். இந்த நிகழ்வுகள் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் தீவிரமானவை களாக காணப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீண்ட காலம் நீடிக்கும் அள விலும், மிகவும் பரவலாக நிகழும் நிகழ்வா கவும் மாறிவிட்டன.  இந்த வெப்ப அலைக ளால் வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே  உள்நோய் உள்ளவர்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. 1971 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா வில் ஆண்டுக்கு சராசரியாக 350 உயிர்கள் வீதம் வெப்ப அலைகள் சுமார் 17,362 உயிர்களை காவு வாங்கியுள்ளன.

காலநிலை  மாற்ற விளைவுகள்

கார்பன் உமிழ்வுகள் காரணமாக உலகளாவிய சராசரி வெப்பநிலையில் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புக்கு பதில ளிக்கும் விதமாக தற்போது வெப்பம் உச்சநிலையில் மிரட்டி வருகிறது. உலக நாடுகளில் அதிக வெப்பம் உமிழும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் தற்போது சீனா, இந்தியா முதலிய நாடுகளின் உறுதிப்பாடுகள் வெப்பநிலை உயர்வைத் தடுக்க போது மான நடவடிக்கை இல்லாத காரணத்தி னால் வரும் காலங்களில் வெப்ப அலைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2020 மற்றும் 2040 க்கு இடையில் 1.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 2040 மற்றும் 2060 க்கு இடையில் 2 டிகிரி செல்சி யஸ் அளவில் வெப்பம் அதிகரிக்க வாய்ப் புள்ளது. புரியும்படி சொன்னால் எதிர்கால காலநிலை கணிப்புகள் 2060 ஆம் ஆண்டளவில் ஆறு மடங்கு வரை வெப்ப நிலை அதிகரிப்பைக் குறிக்கின்றன. இது எதிர்காலத்தில் என்றாலும்,தீவிர வெப்ப அலையை எதிர்கொள்ள வெகு காலம் இல்லை. விரைவாக கூட எதிர் கொள்ள வாய்ப்புள்ளது. அது குழந்தை களோ, பேரக்குழந்தைகளோ ஏன்  நம்மில் பெரும்பாலானோர் இன்னும் சில ஆண்டு களுக்கு பிறகு உலக வெப்பநிலை இரட்டிப்பாகும் நிலையை உணரலாம். 1 டிகிரி செல்சியஸ் உயர்வின் தாக்கத்தின் கீழ் நாம் சுழலும் போதே இப்படி மோச மான அளவில் திணறும் பொழுது,  1.5 டிகிரி செல்சியஸ்,  2 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை இரட்டிப்பானால் ஏற்படும் பாதிப்புகளை காட்சிப்படுத்துவதே கடின மாக இருக்கும். இதில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் வெப்ப அலையால் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகையின் எண்ணிக்கை 2050 ஆண்டிற்குள் 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத்தரவு எதிர் கால வெப்ப அலைகளின் தாக்கம் பற்றிய கவலைகளை மேலும் எழுப்புகிறது.

வெப்பத் தீவுகளாக மாறும் நகர்ப்புறங்கள்

உள்கட்டமைப்புகள் வெப்பத்தை உறிஞ்சி மீண்டும் வெளியிடும் போது நகரங்கள், நகர்ப்புற வெப்ப தீவுகளைப் போல காட்சி அளிக்கின்றன. இதனால் கிராமப்புறங்க ளை விட நகரங்கள் பல டிகிரி அளவில் கூடுதலான அளவில் வெப்பமாகக் காணப் படுகின்றன. பகலில், சூரியனின் கதிர்கள் குறுகிய அலைக் கதிர்வீச்சை அடைந்து பூமியின் மேற்பரப்பை வெப்பமாக்குகின்றன. இரவில் வெளியா கும் வெப்பம் நீண்ட அலைக் கதிர்வீச்சாக வெளியேறுகிறது. இது ஷார்ட்வேவ் கதிர்வீச்சு என அழைக்கப்படுகின்றது.  ஷார்ட்வேவ் கதிர்வீச்சு எளிதில் ஊடு ருவி பூமியின் மேற்பரப்பை அடையும் போது,  நீண்ட அலைக் கதிர்வீச்சானது கான்கிரீட் மற்றும் மேகங்களில் சிக்கிக் கொள்கிறது. திறந்த பசுமையான இடங்கள் மற்றும் மரங்கள் கொண்ட இயற்கைச் சூழல் இரவில் வெப்பத்தை வேகமாக வெளியிட உதவும். ஆனால்  நகரங்களில் உள்ள உயரமான கட்டி டங்கள் மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகள் இரவில் அதிக வெப்பம் வெளியேற அனு மதிப்பதில்லை. இதனால் வெப்பநிலை குறையாததால், வெப்பம் இரவிலும் தொடர்கிறது. 

இந்தியாவில், வானளாவிய கட்டடங்க ளைப் போற்றும் அளவுக்கு நாம் இயற் கையை பாராட்டுவதில்லை. இயற்கை சமன்பாட்டிற்கு இடையூறான நகர திட்டமிடல், மோசமான கட்டடக்கலை (வானுயர்ந்த அடுக்குமாடி) மற்றும் நீடித்த கட்டுமானம் ஆகியவற்றையே நகர்ப்புற வெப்பத் தீவின் செய்முறையாக மாறி யுள்ளது. நடப்பு மே மாதத்தில் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு நேர வெப்பநிலையை ஆய்வு செய்தால்  நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே 20 டிகிரி செல்சியஸ் வரை வித்தி யாசம் பிரமிக்க வைக்கிறது. புரியம்படி சொன்னால் சூரியன் இல்லாமல் 20 டிகிரி அளவு இரவில் வெப்பம் வெளிப்படுகிறது.

அதிகபட்ச வெப்ப அலை

நடப்பாண்டை விட 2022 இல் வெப்ப அலைகள் மிகமோசமான அளவில் சாதனை படைத்தன. அதிகபட்ச வெப்ப நிலை இந்தியாவில் 50 டிகிரி செல்சியஸ் இருந்த நிலையில், ஓரளவு குளிர்பிர தேசமான பாகிஸ்தானில் 51 டிகிரி செல்சி யஸைத் தாண்டி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யது. இந்தியாவில் மார்ச் முதல் மே வரை யிலான பருவகால வெப்ப அலையாக இருந்த நிலையில், கோடைமழை பெய்யாததால் வெப்ப அலை பாதிப்பு அதிகரித்ததுதான் மிச்சம். நாட்டின் வட-வடமேற்கு மாநிலங்களில் கோடைமழை மட்டுமல்லாது வழக்கமான பருவமழை யில் கூட 70-90 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட வில்லை என்றாலும், வெப்ப அலை மற்றும் வறண்ட வறட்சி நிலைகளின் கலவையா னது கொடியதாக உள்ளது. இது பரவ லாக காட்டுத் தீ, பயிர் இழப்பு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற பாதிப்பு களுக்கு வழிவகுக்கின்றன. முக்கியமாக கோதுமை உற்பத்தியை கடுமையாக பாதித்தன. இந்தியா கோதுமை ஏற்றுமதி யில் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், வெப்ப அலை தாக்கத்தால் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மே 2022 இல் கோதுமை ஏற்றுமதியைக் குறைக்கும் நிலைகூட ஏற்பட்டது.  இதுமட்டுமல்லாமல் வறண்ட மற்றும் தேங்கி நிற்கும் வளிமண்டல நிலைகள், பரவலான காட்டுத் தீ மற்றும் பயிர்களை எரிப்பதில் இருந்து வெளியே றும் துகள்கள் காற்றில் இருப்பதால், காற்று மாசு அளவுகளை அதிகரிக்க வழி வகுக்கிறது. 

14 உயிர்களை பலி கொண்ட பாஜக அரசுகள்

2023 ஏப்ரல் 16 அன்று மகாராஷ்டிரா மாநிலம் கர்கர் திறந்தவெளி மைதா னத்தில் ஒன்றிய பாஜக அமைச்சர் அமித்ஷா பங்குபெற்ற பூஷன் விருது வழங்கும் விழாவில் வெப்பம் தாங்காமல் 14 பேர் உயிரிழந்தனர்.  சம்பவம் நடந்த தினத்தன்று வானிலை ஆய்வு மையங்கள் அதிகபட்ச வெப்பநிலையாக 34-38 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது. இது சாதாரண அளவுதான் என்றாலும்  அதிக ஈரப்பதத்துடன் (45%) வெப்பத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியது. அதாவது வெப்ப அலைக்கு நிகராக வெப்பம் கொளுத்தியது. வெப்பத்துடன் காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும்போது உடலா னது வியர்வையை நிறுத்தி, உட்புற வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியா மல் போகிறது. இது வெப்ப பக்கவா தத்தை ஏற்படுத்தி,  உடலுறுப்பு செயலி ழப்பை உண்டாக்கி இறப்புகளுக்கு வழிவகுக்கும்.  இப்படிப்பட்ட ஈரப்பத வெப்பநிலை காலங்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் ஒன்றிய, மாநில பாஜக அரசு கள் அரசியல் ஆதாயத்திற்காக ஈரப்பத வெப்பத்தின் தாக்கத்தை பற்றி சிறித ளவு கூட புத்திகூர்மை இல்லாமல், விடியற் காலையிலேயே பொதுமக்களை அழைத்து, 2 முதல் 4 மணி நேரம் வெயிலில் திறந்தவெளி வாகனத்தில் பயணம் செய்ய வைத்து, அடுத்து பல மணிநேரம் கொளுத்தும் வெயிலில் கர்கர் மைதா னத்தில் அமரவைத்துள்ளனர். தண்ணீர், கழிப்பறை வசதி இல்லாமலும், மூச்சு விட்டு பேசக்கூட முடியாமலும் 14 உயிர்கள் அலட்சியத்தால் பறிபோயின.

அரசு என்ன செய்கிறது?

நான் (கட்டுரையாளர் - ராக்ஸி மேத்யூ)  புனேவில் வசிக்கிறேன்.  புனேவில் வெப்ப நிலை பொதுவாக மிதமானதுதான். ஆனால் கடந்த ஆண்டு (2022) மே மாதம் முதல் வெப்ப நிலை உச்சம் தொட்டு வருகிறது. அதாவது வெப்பநிலை 40டிகிரியைத் தொட்டது.  கொரோனா ஊரடங்குக்கு பிறகு பள்ளிகள் தொடங் கப்பட்டு, குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு அனுப்பப்பட்ட நேரம். துரதிர்ஷ்ட வசமாக தீவிர வெப்ப அலைக் காற்றால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். என் பிள்ளைகள் வீட்டிற்கு வந்த நேரத்தில், அவர்கள் கிட்டத்தட்ட வெப்பமான சூழ்நிலையில் இருந்தனர். இதனால் முன்னறிவிப்புகளுடன் பள்ளியை அணுகி, குழந்தைகளைக் காப்பாற்ற பள்ளி நேரத்தைக் குறைத்தோம். ஆனால் மகாராஷ்டிரா அரசு இதைபற்றி எதுவும் செய்யவில்லை. ஐந்து நாட்களுக்கு, ஆறு மணி நேர அடிப்படையில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெப்ப அலை பற்றி தெரி விக்கிறது. இந்தியாவின் அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை கள் செல்கின்றன. இதுபோக மாநில ஆய்வு மையங்கள் சார்பில் முன்னறி விப்புகள் வழங்கப்படுகின்றன. மாநில அர சாங்கங்கள் வெப்ப அலையின் தீவி ரத்தின் அடிப்படையில் மஞ்சள் (கடிகாரம்), ஆரஞ்சு (தயாராக இருங்கள்) அல்லது சிவப்பு (நடவடிக்கை எடுங்கள்) எச்சரிக்கை யை தயார் செய்கின்றன. அடுத்த இரண்டு நாட்களுக்கான கணிப்புகள் 80-90 சத விகிதம் துல்லியமாக உள்ளன. அடுத்த இரண்டு வாரங்கள் மற்றும் பருவத்திற் கான வெப்ப அலைகள் முன்கூட்டியே திட்ட மிடலுக்கு ஏற்ப வசதி உள்ளது. 

தற்போதைய காலகட்டத்தில் வானிலை முன்னறிவிப்புகள் பொது களத் தில் கிடைக்கின்றன. மேலும் ஊடகங்கள் தேசிய மற்றும் பிராந்திய செய்தித் தாள்களில் இந்த தகவலை அடிக்கடி பரப்புகின்றன. உங்கள் பிராந்திய ஊடகம் அவ்வாறு செய்யவில்லை என்றால், அவர்களை அழைக்கவும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வெப்ப அலைகள் பற்றிய கேள்வி (FAQ) ஆவணம் உள்ளது. இவ்வளவு வசதிகள் இருந்தும் ஒன்றிய அரசின் மக்கள் மீதான கவலை இல்லா செயல்பாடுகளால் மகா ராஷ்டிராவின் கர்கர் சம்பவம் மூலம் 14 உயிர்கள் பறிபோயின. வரும் காலங்களில் வெப்ப அலை தொடர்பாக தனியாக செயல்திட்டம் கொண்டு வந்தால் மட்டுமே மக்களை காப்பாற்ற ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் மகாராஷ்டி ராவின் கர்கர் சம்பவம் போன்று  பொதுக் கூட்டம் இல்லாமல் சாதாரணமாக பல்வேறு இடங்களில் நிகழவாய்ப்புள்ளது.

புதிய திட்டம் தேவை

முன்னறிவிப்பு அடிப்படையிலான வெப்ப செயல் திட்டங்கள் நன்றாக இருந் தாலும், அவை போதுமானதாக இல்லை. வெப்ப அலைகள் தங்குவதற்கும் தீவிர மடைவதற்கும் வாய்ப்புகள் இங்கே உள்ளன என்ற உண்மையை கருத்தில் கொண்டு அதற்கான கொள்கைகள் தேவை. வெப்ப அலைகள் அதிகரித்து வரும் பகுதிகளை அடையாளம் காண போதுமான தரவு உள்ளது. கல்விமற்றும் பணியிடக் கொள்கைகளில் வெப்ப அவசரத் திட்டத்தை ஒருங்கிணைப்பது, வெப்ப அவசரநிலைகளைக் கையாள வும் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க புதிய திட்டம் வேண்டும். வேலை நேரம், பொது உள் கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை கள், பணியிடங்கள், வீடுகள், போக்கு வரத்து மற்றும் விவசாயம் போன்றவற்றில் வெப்ப அலைகள் வெளி வருவதற்கு உதவும் வகையிலான கொள்கைகளை வைத்திருக்கும் நீண்ட காலப் பார்வை இந்தியாவுக்குத் தேவை என்பதால் அதிகப்படியான வெப்பத்தை விரைவாக வெளியிடுவதற்கும், நிழலுக்கும் குளிர்ச்சிக்கும் மையமாகவும் செயல்படும் திறந்தவெளிகள் மற்றும் மரங்களைக் கொண்டிருக்கும் வகையில் நகரங்களை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். 

நன்றி : பிரண்ட்லைன் (ஜூன் 2), 
தொகுப்பு: எம்.சதீஸ்குமார்




 

;