articles

img

கடல் சிவப்பாக மாறுவதேன்? - பேரா. தினகரன்

கடல் தான் மிகப்பெரிய சூழல் மண்ட லம். இங்கிருந்துதான் எத்தனை வளங்களைப் பெறுகிறோம். உணவுப்பாதுகாப்பைபெருவாரியாகக் கொடுப்பது கடலும் கடல் சார்ந்தவள மும்தான். வீடுகட்ட, மருந்துப்பொருட்களைப் பெற என அதன் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மழை பெறுவதும் கடலின்மூலம்தான். கிட்டத்தட்ட 78% மழைப் பொழிவை நாம் கடலின் மூலமே பெறுகி றோம். கடல் பார்ப்பது அனைத்துவகைகளிலும் முக்கியமானது, அலாதியானதும்கூட! கடல் ஏன் சீறுகிறது? ஏன்அமைதியாய் இருக்கிறது? என்ன நிகழ்கிறது உள்ளுக் குள்? நிலத்தைச்சுருட்டி கடலுக்குள் எடுத்துச் சென்றானாமே எப்படி? என்று கடல் சொல்லும்கதைகள் ஆயிரமாயிரம். 15% சிற்றி னங்கள் கடலில்வசிக்கின்றன. 80% நிலவாசி களைவிடவும்கடல் சிற்றினங்களின் பங்கு அளப்பரியது. கடல் நமக்குச் சொல்லும் விசயங்கள் ஏராளம். வான்நோக்குதல்போல கடல் நோக்குதல் ஒரு அற்புதமான நிகழ்வு. 

இரவில் நிலவொளியில் கடல் நீலநிறத்தில் ஒளிர்வது எதனால்? என்று ஆய்வுசெய்தவ னால்தான் சாத்தியப்பட்டது டயனோபிளா ஜெல்லேட்டுகள் குறித்து அறியமுடிந்தது. கடந்த வாரங்களில் மீன்கள் செத்துமிதந்தது எதனால், ராமேஸ்வரத்தின் குந்துக்கால் பகுதியில் டால்பின்கள் இறந்துகிடந்தது எத னால், முத்துப்பேட்டையின் கடல் வண்ணம் மாறியது எதனால்என்று காரணம் அறிய முற்பட்டது சிலசுவாரசியமான தகவல்களைக் கொணர்ந்தது.  இது குறித்து அறிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிறியகுழு ஒன்று ஆய்வில் இறங்கியது. மடிப்பு நுண்ணோக்கியுடன் களத்தில் இறங்கிய மொபா, இனியன்,  முதின்ஸ் வண்ணம்மாறிய கடலின் மேற்பரப்பில் வசிக்கும்மிதவை உயிர்களை  எடுத்து ஆய்வு செய்தனர். அதில் பெருவாரி யாக டயனோபிளா ஜெல்லேட்டுகள் என்ற ஒருவகை பாசியைக் கண்டறிந்தனர். இவை தான் கடல் சிவப்பு நிறமாக மாறுவதன் கார ணம். பொதுவாக இதைசிவப்பு அலை என்பர். 

கடலில்வாழும்பாசிகள் குறித்துப்படிப்பதேமிகப்பெரியபடிப்பு. அதற்குஃபைக்காலஜி என்று பெயர். இந்தியக்கடலில் மட்டும் 896 கடல்பாசிச்சிற்றினங்கள் உண்டு. பச்சைப் பாசி, ப்ரவுன்பாசி, டயடம், கோகோலித் தோஃபோர் மற்றும் டயனோபிளாஜெல் லேட்டுகள் என்று பல வகைகள் உண்டு. உண வுத்தயாரிப்பின் அடிப்படை உறுப்பினர்கள். சார்ந்துவாழும் முதுகெழும்பு உள்ளவைக ளும், முதுகெழும்பற்றவைகளும் இவை சார்ந்துதான் இயங்கும்.  டயனோபிளாஜெல்லேட்டுகள் என்பது ஒருசெல்உயிரி. இதையும் பாசிகளிலேயே வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் பெரும்பா லானவை கடலில் வாழக்கூடியவையே, சில நன்னீர் வாழிகளும் உண்டு. கடலின் விசத்தன்மைக்கு இவை முக்கியக்காரணம். ஏன்சிலகாலங்களில் மட்டும் நிகழ்கிறது என்றகேள்விக்கான பதில், கடலுக்கு அடித்துவரப்படும் மழைநீர் என்றால் ஆச்சர்யமாய் இருக்கிறதுதானே? காரணம் அங்கக உணவுகள். ஏராளமாய் உணவின் மூலப்பொருட்கள் குறிப்பாக கார்பன்டை யாக்சைடு. டைனோஸ் என்றால் சூரிய ஒளியிலிருந்து ஆற்றலைப்பெறுவது. சூரிய ஒளியையும், கார்பன்டையாக்சைடையும் பயன்படுத்தி தனக்கென உணவைத் தயாரித்துக் கொள்ளும். 

உணவு அதிகமாய்க் கிடைப்பதால் அதன் இனப்பெருக்க மும்மித மிஞ்சிய அளவில் இருக்கும். அதனால்தான் கடலின் வண்ண மும் மாறுகிறது. கூடவேஇதுவெளியிடும் நச்சும். அதனால்தான் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் மரணிக்கின்றன. இந்த நிகழ்வைத்தான் கடல் பகுதியில் காண்கிறோம். கூடவே லூசிஃபெரின் என்ற ஒளிரும்நொதியைச்சுரக்கிறது. குளோ ரோஃபில்(பச்சையம்) களிலிருந்து உருவாகி றது. சூரிய ஒளியின்காரணமாக பகலில் மட்டுப்பட்டு இரவில் நீலநிறத்தில் ஒளிர்கிறது. இராமேஸ்வரத்தில்வாழும் இந்த டயனோபிளாஜெல்லேட்டுகளின்சிற்றினப் பெயர் நாக்டி லூகாசின்டிலன்ஸ்.  பொதுவாக இவற்றை உண்ணும் கோப்பி பாடுகள் டயனோபிளாஜெல்லேட்டுகளின் மிதமிஞ்சிய உற்பத்தியின் காரணமாக உருவாக்கப்படும் விசத்தினால் மரணித்துப் போவதுண்டு. கோப்பிபாடுகள் தான் மீன்க ளின் உணவு. சிறுமீன்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அது மாத்திரமல்ல, டயனோபிளாஜெல்லேட்டுகள் ஆக்சிசனை யும் குறைத்து விடுவதால் இறந்து விடு கின்றன. அதன் விளைவாய் பெரிய மீன்க ளுக்கு சிறிய மீன்கள்தான் உணவு. அதனால் அவையும் இறந்து விடுகின்றன. உணவு வலையின் சரடுகள் ஸ்தம்பித்துப் போய் விடுகிறது. இது ஒவ்வொரு வருடமும் நிகழக் கூடியதே. அங்குள்ள மீனவர்களுக்கு இது தெரியும். ஆனால் புதிதாயப் பார்க்கும் மக்க ளுக்குத்தான் அது அபூர்வமாய்ப்படுகிறது. அப்பாத்தீவு, தலயாரித்தீவு, வாலைத்தீவு, முத்துப்பேட்டை, கீழக்கரை ஆகியவற்றில் மழைப் பொழிவையடுத்த நாட்களில் இயல் பாய்க் காணலாம். அலையாத்திக்காடுகளி லும் இந்நிகழ்வைக்காணமுடியும். இக்காடு களைச்சார்ந்த நுண்ணுயிர்க் கூட்டம் வைட்டமின் பி12 ஐக் கொடுக்கிறது.அலை யாத்திக் காடுகள் பினாலிக் மூலக்கூறுகளைக் கொடுப்பதால் இவை இன்னும் கூடுதலாக இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகுகிறது. இந்தநிகழ்விற்கு HAB (Harmful Algal Blooms) என்றுபெயர். 

கட்டுரையாளர்:  தமிழ்நாடு 
அறிவியல் இயக்கத் தலைவர் 

;