சென்னை, ஆக.7- பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி யினர் துணைத் திட்டங்கள் வரைவுச் சட்டம் திங்களன்று (ஆக.7) சென்னையில் வெளியிடப்பட்டது. 2022-ஆம் ஆண்டு ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கைப்படி, இந்திய அளவில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின ரின் வருமானம் ஏனைய மக்களின் வரு மானத்தை விட 41 விழுக்காடு குறைவாக இருக்கிறது. ஏனைய ஆய்வுகளும் இத னையே உணர்த்துகின்றன. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வசிக்கும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங் குடியினரில் ஏறக்குறைய 92 விழுக்காட்டி னருக்கு சொந்தமாக நிலம் இல்லை. இம்மக்களில் 80 சதவீதத்துக்கும் அதிக மானவர்கள் விவசாயக் கூலித் தொழிலா ளர்களாகவும் இதர உதிரித் தொழிலா ளர்களாகவும் உள்ளனர். பட்டியல் சாதி யினருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வேலை களில் கடந்த 10 ஆண்டுகளாக 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.
தேசிய, மாநிலங்கள் அளவிலும் மேற்கொள்ளப்படுகிற ஆய்வுகளும் எதார்த்தமும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கும் இதர பகுதி யினருக்கும் இடையில் அனைத்து துறை களிலும் ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடு களும் இருப்பதை படம் பிடித்துக் காட்டு கின்றன. இந்நிலையை மாற்ற 49 ஆண்டு களுக்கு முன்னர் பழங்குடியினர் துணை திட்டமும், 44 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டி யல் சாதியினர் சிறப்பு உட்கூறுத் திட்டமும் கொண்டு வரப்பட்டன. சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களின் பங்களிப்பும் இதற்குக் காரணமாக இருந்தது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மக்களில் தனி நபர்கள், குடும்பங்கள், வாழ்விடங்கள் ஆகியவற்றில் மேம்பாடு களை ஏற்படுத்துவது; கல்வி, வேலை வாய்ப்புகள், தொழில், வர்த்தக வாய்ப்பு கள், திறன் மேம்பாடு என்பனவற்றையெல் லாம் இலக்காகக் கொண்டு இத்திட்டம் மாபெரும் கனவுத் திட்டமாக வடிவமைக் கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு சிறப்பு உட்கூறுத் திட்டம் என்பது ‘துணை திட்டமாக’ பெயர் மாற்றம் பெற்று, தற்போது ஒன்றிய அர சினால் ‘பட்டியல் சாதியினர் மேம்பாட்டுக் கான நிதி’ என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றங்கள் திட்டத்தின் உள்ளார்ந்த செயல் திறனையே பாதிப்பதாக உள்ளது. எஸ்சி/ எஸ்டி துணை திட்டங்களின் அமலாக்கத்தை பரிசீலித்த இந்தியத் திட்டக் குழு, 2013-இல் வெளி யிட்ட அறிக்கை, திட்டத்தின் இலக்குகள் அடைய முடியாத நிலையை நம் கண் முன்னே நிறுத்துகிறது.
திட்டத்தின் பிரதான நோக்கமான பட்டி யல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மக் கள் தொகைக்கு குறைவில்லாது நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒதுக்கிய நிதியை சிறப்புத் திட்டங்களின் மூலமாக செயல்படுத்திட வேண்டும். ஒதுக்கிய நிதி வேறு பொதுத் திட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படக் கூடாது. தொழில், வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும். வெளிப்படைத் தன்மையோடு நிதி செலவு செய்யப்பட வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்திலி ருந்து பணி நிறைவடைகிற வரை மிக வலி மையான கண்காணிப்பும் செயலாக்க முக மைகளும் இருந்திட வேண்டும் என்கிற இவை அனைத்தும் ஒன்று விடாமல் மீறப் பட்டுள்ளதையும் திட்டம் தனது இலக்கை அடைய முடியாமல் போனதையும் 2013 அறிக்கை உணர்த்துகிறது. இந்நிலையில் தான், நாடு முழு வதும் சமூக நீதியில் அக்கறை கொண்ட வர்களின் கோரிக்கை அடிப்படையில், துணைத் திட்டத்தை வரைமுறைப்படுத்து வதற்கான சட்டம் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் இயற்றப்பட்டது. இதனால் அதை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு வருகிறது. இதில் இடைவெளி கள், ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் அதனை சட்டரீதியாக கேள்விகளுக்கு உட்படுத்த முடியும்.
எனவேதான், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2008-ல் துணைத் திட்டங்க ளுக்கான சிறப்பு மாநாடு, 2009-இல் பல்லா யிரம் பேரை திரட்டி சென்னையில் பேரணி, 2010-ல் கோரிக்கை சாசன உருவாக்கப் பயி லரங்கம், 2011-ல் ‘பட்டியலின மக்களின் பங்கைக் கொடு’ என்கிற கோரிக்கை சாசன வெளியீடு என தொடர்ச்சியாக செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் துணை திட்டங்களை வரைமுறைப்படுத்துவதற்கான சட்டம் எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இயற்றப்படும் என்று முதலமைச்சர் அறி வித்தார். துணைத் திட்டங்களை வரை முறைப்படுத்துவதற்கான சட்ட வரைவு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கியது. சட்டங்கள் களத்தின் தேவைகளில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சென்னை ஆகிய நகரங்களில் தோழமை அமைப்புகளை யும் ஒருங்கிணைத்து கலந்தாய்வுக் கூட் டங்கள் நடத்தி, அந்தக் கருத்துக்களை யும் உள்ளடக்கி சட்ட வரைவு உருவாக் கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கும் இடதுசாரி, பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய விழுமியங்களால் மேம்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை மேலும், ஒரு படி உயர்த்திட ‘தமிழ்நாடு மாநில பட்டி யல் சாதியினர் சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் துணைத் திட்ட நிதி ( நிதியாதாரத்திற்கான திட்ட மிடல் ஒதுக்கீடு மற்றும் அமலாக்கம்) சட்டம் 2023’ எனும் வரைவுச் சட்டம் வெளியிடப்பட்டது. 6 அத்தியாயங்கள் கொண்டதாக இந்த வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டி ருக்கிறது. முதல் அத்தியாயத்தில் சட்டத் தின் வரையறை நோக்கம் ஆகியவை தெரி விக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது அத்தியாயத்தில் திட்டத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாக ஏற்பாடுகள், குறிப்பாக, மாநில அளவி லான வழிநடத்தும் குழு திட்டத்தை செயல் படுத்துவதற்கான முகமை, அந்த முகமை யின் பணிகள் அதிகாரங்கள் இவைகளை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் நிதி துறையில் செய்யப்பட வேண்டிய மாற் றங்கள், மாவட்ட அளவில் இதனை செயல்படுத்துவதற்கான நிர்வாக ஏற்பாடு கள் ஆகியவை தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அத்தியாயம் மூன்றில், திட்டமிடல், குறிப்பாக பட்டியல் சாதியினரின் தனி நபர்கள், குடும்பங்கள், வாழிடங்கள், திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்புத் திட்டங்களை உருவாக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் நான்கில், திட்டங்களை ஆய்வு செய்வது, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் ஐந்தில், திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் செயல் படுத்துவதற்கான அரசுத்துறையின் ஆணைகள் வெளியீடு போன்றவை தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்தியாயம் ஆறில், திட்டத்தை செயல் படுத்தும்போது இருக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை, பொறுப்புகள், ஊக்கத்தொகை, தண்டனைகள், கண்கா ணிப்பு முறைகள் ஆகியவை தெரிவிக் கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்விற்கு முன்னணியின் துணைச் பொதுச்செயலாளர் கே.சுவாமி நாதன் தலைமை வகித்தார். பொருளாளர் இ.மோகனா, துணைப் பொதுச்செயலாளர் ப.செல்வன், கே.திருச்செல்வன் (சிஐ டியு), வீ.அமிர்தலிங்கம் (விதொச), செந் தில்குமார் (விவசாயிகள் சங்கம்), பி.சுகந்தி (மாதர் சங்கம்), சார்நாத் (விசிக), உத யக்குமார் (ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்), சந்துரு (வாலிபர் சங்கம்), இரா. சரவணன் (மலைவாழ் மக்கள் சங்கம்), அரவிந்த்சாமி (மாணவர் சங்கம்), பேரறி வாளன் (தமிழ்ப்புலிகள் கட்சி), கோவை ரவிக்குமார் (ஆதித்தமிழர் பேரவை), வ.ரமணி (சாதி ஒழிப்பு முன்னணி), சி. வெண்மணி (திராவிடர் தமிழர்க் கட்சி), வி.பி.வேல்முருகன் (தியாகி இம்மானு வேல் பேரவை), டி.ஜி.சம்பத் (பன்னி யாண்டிகள் சங்கம்), லெனின் கென்னடி (தமிழர் உரிமைக் களம்), பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப்பள்ளிக்கான மாநில மேடை) உள்ளிட்டோர் பேசினர். முன்னணியின் மாநிலச் செயலாளர் கா. வேணி நன்றி கூறினார். முன்னதாக மாநிலச் செயலாளர் வி.ஜானகிராமன் வரவேற்றார்.
நீதிபதி து.அரிபரந்தாமன்
இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட வர்களில் ஒருவரான சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் குறிப்பிடு கையில், ‘‘மாநில அரசுகள் துணைத் திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கின்றன. மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்குவதற்கு சட்டவடி வம் தர இந்த வரைவு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. இதேபோன்று ஒன்றிய அரசும் துணைத் திட்டங்களுக்கு சட்ட அங்கீகாரம் தர வேண்டும். போதியநிதி ஒதுக்க வேண்டும், அவற்றை முழுமையாக பயன்படுத்த வேண் டும், நிதியை மடைமாற்றம் செய்யக்கூடாது, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு ஏற்ப நிதி யை செலவிட வேண்டும். இதற்கு அரசமைப்புச் சட்டம் 38, 46-வது பிரிவுகள் இதற்கு வழிவகை செய்கின்றன. தமிழக அரசு இந்த சட்டத்தை நிறை வேற்றும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
கே.சாமுவேல்ராஜ்
இந்த அறிக்கையை முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டு பேசுகையில், ‘‘தமிழகத்தில் துணைத் திட்டங்க ளுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செல விடப்பட வேண்டுமென்றால் சட்டம் தேவை. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு வழங்க துணைத் திட்ட நிதியை மடைமாற்றம் செய்துள்ளது பொருத்த மற்றது; விதிகளுக்கு முரணானது; ஏற்புடைய தல்ல. அரசு அறிவிக்கும் பொதுத் திட்டங்க ளுக்கு துணைத் திட்ட நிதியை பயன்படுத்து வதை தடுக்க சட்டம் அவசியமாகிறது. தமிழக அரசு கொண்டு வர உள்ள சட்டம் எந்த அடிப்ப டையில் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மாக இந்த வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டுள் ளது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண் டும்’’ என்றார்.
நாகை மாலி எம்எல்ஏ
வரைவு அறிக்கையை பெற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன் றக் குழுத்தலைவர் வி.பி.நாகைமாலி, ‘‘பட்டி யலின மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை, ஆழமான வார்த்தைகள் கொண்ட வரைவு அறிக்கையாக தயாரித்துள்ளனர். சட்டங்களை அமலாக்க ஆட்சியாளர்களுக்கு தைரியம் இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் இருந்தாலும், காவல் நிலையங்களிலேயே அந்த சட்டத்தை நீர்த்துப்போகச் செய்கின்றனர். காவல்துறையும் சாதியவாதத்திற்குள் சிக்கி இருக்கிறது. இந்த வரைவு சட்டத்தை நேரடியாக முத லமைச்சர், துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இதர சட்டமன்ற உறுப்பி னர்களையும் ஒருங்கிணைத்து, அடுத்து கூட உள்ள கூட்டத்தொடரிலேயே சட்டமாக்க நிர்ப் பந்திப்போம். எந்தவகையில் வாய்ப்பு கிடைத்தா லும் இந்த வரைவு சட்டத்தை சட்டமாக்க வற் புறுத்துவோம்’’ என்றார்.
எஸ்.கே.மகேந்திரன்
‘‘சமச்சீர் கல்விக்கான சட்டம் கொண்டு வரப்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டி ருந்தால், அதன்பின்னால் ஏற்பட்ட பிரச்சனை யை அரசு தவிர்த்து இருக்கலாம். எனவே, முன்னணி உருவாக்கியுள்ள இந்த வரைவு சட் டத்தை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்று முன்னணியின் சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் குறிப்பிட்டார்.
த.செல்லக்கண்ணு
முன்னணியின் தலைவர் த.செல்லக்கண்ணு பேசுகையில், ‘‘மக்களின் உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையில் 4 நகரங்களில் ஆலோசனை நடத்தி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள் ளது’’ என்றார்.
உ.நிர்மலாராணி
‘‘சாமானிய மக்கள் சட்டங்களை புரிந்து கொள்ள முடியாத வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்ற முதலாளித்துவ விதியை உடைக்கும் வகையில் இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்புகள் அதிகமாகும்போதுதான் சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. தலித் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதால்தான், அம்பேத்கர் மறைந்த பிறகும் அவரது எழுத்துக்கள் உயிர்ப்போடு இருக்கிறது. அதேபோன்று, எஸ்சி, எஸ்டி மக்க ளின் உணர்வுகளின் அடிப்படையில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்று வழக்க றிஞர் உ.நிர்மலாராணி குறிப்பிட்டார்.