காசா போர் நிறுத்தம்- அமெரிக்க பாசாங்கு!
அமெரிக்க ஆதரவுடன், 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேலின் இனப்படுகொலை தொடர்கிறது. அமெரிக்காவும், இஸ்ரே லும் போர் நிறுத்தம் குறித்து, ராஜாங்க ரீதியிலான பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கும்போதே, இஸ்ரேலின் தாக்குதலும் தொடர்கிறது.
அமெரிக்க அமைச்சர் ஆண்டனிபிளிங்கன், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகூவை, ஆகஸ்ட் 19-இல் நேரில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை இஸ்ரேலுக்கும் ,ஹமாசுக்கும் இடையே இடைவெளியை குறைக்கும் என அமெரிக்கா கூறுகிறது. நேதன்யாகூ ஒப்புக்கொண்டாராம்! ஹமாஸ் தான் இந்த ஆலோசனையை ஏற்க வேண்டுமாம்! ஆகஸ்ட் 20இல் எகிப்துக்கு சென்று, பிளிங்கன் எகிப்தின் ஜனாதிபதி அப்துல் பட்டாஃ ஆல் சிசியை சந்தித்து பேசினார் .போர் நிறுத்தம் ,கைதிகள் பரிமாற்றம் அடிப்படையில் உடன்பாடு ஏற்படுவதை பட்டாஃ ஆல் சிசி வலியுறுத்தினார். காசா யுத்தம் பிராந்திய அளவில் பரவும் என சிசி எச்சரிக்கை செய்தார். சர்வதேச ரீதியாக பாலஸ்தீன அரசு அங்கீகரிக்கப்பட வேண்டும்; இரண்டு நாடுகள் என்ற தீர்வுதான் நிலையான தீர்வை ஏற்படுத்தும் எனவும் சிசி கூறினார்.
ஒன்பதாவது முறையாக, காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சியில், ஆண்டனி பிளிங்கன், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயம் செய்துள்ளார் .இந்த விஜயங்களின் நோக்கம், பேச்சு வார்த்தைக்கு ஹமாஸ் தடையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான, அமெரிக்காவின் பாசாங்குத்தனம், என்ற ஐயம் எழுகிறது. நிரந்தரப் போர் நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வாபஸ் பெறுதல் என்பவைகளை நேதன்யாகூ ஏற்கவில்லை என ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது. எகிப்து- காசாவின் ரஃபா எல்லை உள்பட தொடர்ந்து சில பகுதிக ளின் மீது இஸ்ரேலின் கட்டுப்பாடு தொடர வேண்டும் எனவும் நேதன்யாகூ கருதுகிறார். இஸ்ரேல் தனது இனப்படுகொலையை தொடர வசதியாக, அமெரிக்கா கூறிய ஆலோசனைகள், காலம் கடத்தும் சூழ்ச்சியானவை என ஹமாஸ் கூறுகிறது. ஜோ பைடனின் இஸ்ரேல் ஆதரவு கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அதிகரித்து வருவதால், நவம்பர் ஜனாதிபதி தேர்தல் வரை காலம் கடத்தும் சூழ்ச்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆகஸ்ட் 19இல் சிகாகோவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்ற இடத்திற்கு வெளியே, ஆயிரக்கணக்கா னோர் தெருக்களில் காசா யுத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநாட்டில் ஜோ பைடன் பேசும்போது ,ஆர்ப்பாட்டக்கா ரர்கள் கூறுவது போல், இருதரப்பிலும் அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றார். அதே நேரம், ஹமாஸ் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்குவதாகவும் கூறிக்கொண்டார். பைடனின் பேச்சு தவறானது என ஹமாஸ் வர்ணிக்கிறது.
தாய்லாந்தில் புதிய பிரதமர்!
தாய்லாந்தில் மிகப்பெரிய கட்சி ‘மூவ் பார்வர்டு கட்சி’ (Move Forward Party). தாய்லாந்தில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இதை எந்த வடிவில் விமர்சித்தாலும் , அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாம்! இந்த சட்டத்தில் திருத்தம் வேண்டும் என மூவ் பார்வர்டு கட்சி கூறியதால், 10 ஆண்டுகளுக்கு கட்சி செயல்பட தடை விதிக்கப்பட்டது.
தாய்லாந்து நாடாளுமன்றத்திற்கு ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற தேர்தல் மூலம், ஷினவத்ரா என்ற 37 வயது பெண், 31ஆவது பிரதமராக தேர்வானார். புதிய அரசில் ராணுவமும், அரச குடும்பமும் வலுவாக செல்வாக்கு செலுத்துகிறது. 2001 -2006 இல் ஷினவத்ராவின் தந்தை தக்ஷின், 2011- 2014இல் அவரது அத்தை யிங்லுக் பிரதமராக இருந்தனர். இருவ ருமே,ராணுவத்தினாலும், நீதிமன்றத்தா லும் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட னர். இருவரும் வெளிநாடு சென்று தஞ்சமடைந்தனர்.
ஷினவத்ராவை அரச குடும்ப உறுப்பி னர்களும், ராணுவ ஆதரவு எம்பிக்களும் ஆதரிக்கின்றனர். அவரது கட்சிக்கும், ராணுவம், அரச குடும்பத்திற்கும் இடையே ஒருவகை இணக்கம் உள்ளது. நாடாளு மன்றத்தில், ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற தேர்தலில் ஷினவத்ராவிற்கு ஆதரவாக 319 வாக்குகளும் ,எதிராக 145 வாக்குக ளும் பதிவாகின. 27 பேர் ஆப்சன்ட். மொத்த உறுப்பினர் 500 பேர். மூவ் பார்வர்டு கட்சி யின் 143 எம்பிக்களும், ஷினாவட்ராவிற்கு எதிராக வாக்களித்தனர் . லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில், அவரது தந்தைக்கு எட்டு ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இந்த வழக்கிலிருந்து மன்னர் அவருக்கு மன்னிப்பு வழங்கினார். 15 ஆண்டுகள் அயல் நாட்டிலே இருந்த பிறகு தக்ஷின் சென்ற ஆண்டு நாடு திரும்பி ஆகஸ்ட் 17 வரை சிறையில் இருந்தார். பதவி ஏற்ற பின், ஷினவத்ரா முக்கிய பிரச்சனைகளில் தனது தந்தையின் ஆலோசனையை பெறப்போவதாக அறிவித்தார்.
சென்றாண்டில் நடைபெற்ற தேர்த லுக்குப் பிறகு, ஷினவத்ரா கட்சியுடன், கூட்டணி அமைத்து, நாடாளுமன்றத்தில் மூவ் பார்வர்டு கட்சி பெரும்பான்மை பெற்றது .ஆனால் அரசு குடும்பமும், ராணு வமும் கூட்டணி அரசை தடுத்தது. நாடாளு மன்றத்தின் மேலவையான செனட்டிலும் பெரும்பான்மை இருந்தால்தான் அரசு அமைக்க முடியும். செனட்டின் 250 உறுப்பினர்களில் கிட்டத்தட்ட அனைவ ருமே ராணுவம் அல்லது அரச குடும் பத்தால் நியமிக்கப்படுகின்றனர்.
மன்னராட்சியை விமர்சித்தால் 15 ஆண்டு சிறை தண்டனை என இருப்பதை எதிர்த்து, 2020- 21 இல் மாணவர்கள் போராடினர். மூவ் பார்வர்டு கட்சி 10 ஆண்டு களுக்கு இயங்க முடியாது என்ற நிலை யில், மக்கள் கட்சி என ஆகஸ்ட் 9 இல் பெயர் மாற்றிக்கொண்டு செயல்பட துவங்கி உள்ளது. சட்ட சீர்திருத்தம் கோரி தொடர்ந்து போராட முடிவு செய்தது.
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா போர்ப் பயிற்சி!
ஆகஸ்ட் 19 முதல் 29 வரை, கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவும் தென் கொரியாவும் மேலும் ஒரு போர்ப் பயிற்சியை கூட்டாக மேற்கொண்டுள்ளன. இதனால் இப்பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இம்மாத துவக்கத்தில் அமெரிக்கா, தென் கொரியாவின் செய்தி தொடர்பாளர்கள் கூறியது:- ‘இந்த போர்ப் பயிற்சி, அணு ஆயுத வடகொரியாவிற்கு எதிராக, கூட்டுப் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தும் நோக்கம் உள்ளது’. அணு யுத்த ஒத்திகையும் நடத்தப்படுகிறது.
வான்வெளி, கடல்வழி, தரைவழி பயிற்சிகள் 48 வகையானவை மேற்கொள்ளப்படுகின்றன. இப்பயிற்சியில் 19,000 தென் கொரியப் படைகள் பங்கேற்கின்றன. அமெரிக்காப் படைகள் எவ்வளவு பேர் என அறிவிக்கப்படவில்லை. இப்பிராந்தியத்தில் ஏற்கனவே உள்ள அமெரிக்க யுத்த கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தொலைதூரம் வீசக்கூடிய குண்டுகளை அமெரிக்கா போர்ப் பயிற்சியில் பயன்படுத்தும் என வடகொரிய அயல் நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல பத்தாண்டுகளாக , இப்பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் வடகொரியாவை இலக்காகக் கொண்டு, அமெரிக்கா ,தென்கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சிகளும் பலமுறை இந்த பிராந்தியத்தில் நடத்தப்பட்டுள்ளன.
கொரிய பிராந்தியத்தில் நேட்டோவின் ஆசியப் பிரிவைத் துவங்க அமெரிக்கா முயற்சிக்கிறது என சீனாவும் வடகொரியாவும் குற்றம் சாட்டியுள்ளன. ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியாவின் ஒருங்கிணைந்த அணுயுத்த தாக்குதலை, ராணுவ ரீதியாக சந்திக்க பைடன் நிர்வாகம் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது .
ஆகஸ்ட் 19இல் தென்கொரியாவில் இந்த போர்ப் பயிற்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு போர்ப் பயிற்சி பெரிதாக நடத்தப்படுகிறது. வட கொரியாவின் தலைநகரம் பியாங்யாங்கை கைப்பற்றும் ஒத்திகையும் நடத்தப்பட்டதாக வடகொரியா கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள கொரிய நாட்டினர் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் மாநகரம் உள்பட பல மாநகரங்களில் ,அமெரிக்காவின் போர்ப் பயிற்சிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வலதுசாரிகளால் ஏற்பட்ட வறுமை
தென் அமெரிக்கா நாடான அர்ஜெண்டினாவில் 8 மாதங்களாக வலதுசாரி ஜனாதிபதி ஜேவியர் மிலே ஆட்சி செய்து வருகிறார். அர்ஜெண்டினாவின் கத்தோலிக்க பல்கலைக்கழகம் தெரிபித்துள்ள விவரப்படி, அங்கு வறுமை அதிகரித்துள்ளது.
ஜேவியர் மிலே ஜனாதிபதியாகும் முன்னர், தாராளமயக்கொள்கைக ளை அமலாக்கி,பொருளாதார, நிதி நெருக்கடியில் இருந்து அர் ஜெண்டினாவின் பொருளாதா ரத்தை மீட்கப் போவதாக கூறினார் .அதாவது விலைகளுக்கு கட்டுப்பாடு இருக்காது; பொருளாதாரத்தில் அரசு கட்டுப்பாடு குறைக்கப்படும்; அரசின் பொதுத்துறை கம்பெனிகள் தனியாருக்கு தாரைவாக்கப்படும். ஆனால் ஜேவியர் மிலே அமலாக்கிய கொள்கைகளால் ,எந்த பலனும் ஏற்படவில்லை.
கத்தோலிக்க பல்கலைக்கழக அறிக்கைப்படி, 2024 முதல் காலாண்டில், 54.6 % குடும்பங்களின் மாத குடும்ப வருமானம் 210 டாலர் மட்டுமே. குடும்பங்களின் ஊதியம் குறைந்தது .இதனால் ஆயிரக்கணக்கான குறைந்த வருமானம் உள்ள நடுத்தர வர்க்கம், வறுமைக் கோட்டிற்கு கீழ் வருமானம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. தலைநகரத்திலேயே 56.7% மக்கள் ஏழைகள், குழந்தைகளிடையே வறுமை நிலை உயர்ந்தது.
கிட்டத்தட்ட அர்ஜெண்டினாவின் 75% மக்கள் அரசு பின்பற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் மேலும் வறுமையில் தள்ளப்பட்டனர்.
பிரேசிலில் X அலுவலகத்தை மூடிய எலான் மஸ்க்!
முன்னாள் ட்விட்டர், தற்போது x சமூக ஊடகத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி நடத்தி வருகிறார். ஆகஸ்ட் 17இல் பிரேசிலில் உள்ள அலு வலகத்தை எலான் மஸ்க் மூடிவிட்டார் .பிரேசில் நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டரே தி மொரேஷ் , X நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களை மிரட்டுவதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார் .பிரேசில் செய்தி நிறுவனம் 30 X ஊடக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தாகத் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 16இல், பிரேசிலில் உள்ள X ஊடக கம்பெனியின் சட்டப்பூர்வ பிரதிநிதி, நீதிமன்ற உத்தரவை அமலாக்காவிடில் கைது செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதி மிரட்டுவதாக X ஊடகத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஊடகத்தின் பல முறையீடுகளை உச்ச நீதிமன்றம் உதாசீனம் செய்ததால், பிரேசில் அலுவலகத்தை மூடி விடுவதாக X ஊடக நிர்வாகம் அறிவித்தது. எலான் மஸ்க் X சமூக ஊடகத்தை வாங்கும் வரை ,100 பேர் பிரேசிலில் பணி புரிந்து வந்தனர். 2022இல் அனைவருக்கும் லேஆப் விடப்பட்டது .எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்கள் குறித்து X சமூக ஊடகத்தில் தவறான தகவல்கள் பரப்பியது குறித்து, உச்சநீதி மன்ற நீதிபதி மொராயிஸ் விசாரணை நடத்தி வருகிறார். இவர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தி, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எலான் மஸ்க் தனது ஊடகம் வாயிலாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.