நேர்த்தியாகவும் இளமையாகவும் தோற்றமளிக்க தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுவது இயற்கையே. இது இன்றைய வாழ்வியலில் அங்கீகரிக்கப்பட்ட நியாயமும் கூட. அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு விற்பனை இன்று இந்தியாவில் மிகப் பெரும் விற்பனைச் சந்தையாக மாறி உள்ளது. 95% பெண்கள் சராசரியாக ஒரு பெண் வெவ்வேறு வேதியல் பொருட்கள் கொண்ட 12 தனிப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அழகுசாதனப் பொருட்களின் சந்தை அளவு 2023 இல் 1.35 பில்லியன் டாலர்களாகவும் இது 2028 ஆம் ஆண்டில் 2.27 மில்லியன்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையின் 90 விழுக்காடு இன்று பன்னாட்டு நிறுவனங்களிடம் உள்ளது.
அதே சமயத்தில் நவீன அழகுசாதனப் பொருட்களில் செயற்கை வேதியல் பொருட் களின் பயன்பாடு சருமத்திற்கு சேதம் விளை விப்பதோடு ஒவ்வாமையையும் சில அபாய கரமான எதிர்வினையையும் ஏற்படுத்தும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவ தில்லை. கெடுவாய்ப்பாக நமது நாட்டில் பன் னாட்டு நிறுவனங்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இப்பொருட்களை உற்பத்தி செய்து தவறான பிம்பங்களை பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம் ஏற்படுத்தி விற்பனை செய்கின்றன. பாடி ஸ்ப்ரே, குளியல் சோப்புகள், வாசனை திரவியங்கள், டால்கம் பவுடர்கள், சவரத்திற்கு பிறகு பயன்படுத்தப்படும் திர வம், ஷாம்புகள், ஷவர் ஜெல், ஷேவிங் கிரீம்கள், பாடி லோஷன்கள் போன்ற பொருட் களுக்கு பிரபல திரைக் கலைஞர்கள், விளை யாட்டு வீரர்கள், பெருந்திரள் மக்களுக்கான நல அறிவியல் பற்றிய அக்கறையின்றி சந்தைத் தூதுவர்களாக விளம்பரப் பணி யாற்றுகின்றனர். எனவே தொண்டு நிறு வனங்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பள்ளி -கல்லூரி மாணவிகள், உழைக்கும் பெண்களிடம் அழகு சாதனங்கள் உரு வாக்கும் கேடுகளைப் பற்றிய விழிப்பு ணர்வை கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2010 இல் வெளியிடப்பட்ட ஒரு தோல் மருத்துவ ஆய்வில், 900 க்கும் மேற்பட்ட ஆய்வின் பங்கேற்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அழகுசாதனப் பொருட்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ஒவ்வாமை எதிர்வினை யைக் கொண்டிருந்தனர் (ஆதாரம் webmd). சருமத்தை ஒளிரச் செய்யும் பல கிரீம்களில், சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் சேதப் படுத்தும், அதிக அளவு பாதரசம் மற்றும் ஹைட்ரோகுவினோன் உள்ளது. என சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. டைபுடைல் பித்தலேட் மற்றும் டோலு யீன் போன்ற தீங்கு விளைவிக்கும் வேதி யியல் கூறுகள் கொண்ட சில நக பாலிஷ் களை பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். பலருக்கு நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளது. அவர்களுக்கு இது பிரச்ச னையாக மாறும். வாய்ப்பு உள்ளது. சில அழகு சாதனப் பொருட்கள் ஆர்சனிக், காட்மி யம், ஈயம், பாதரசம் மற்றும் நிக்கல் உள்ளிட்ட கன உலோகங்களின் கூறுகளை கொண் டவை.
இந்த அழகு சாதனப் பொருட்களின் நீண்டகால பயன்பாட்டில் அவை சில புற்று நோய்கள், இனப்பெருக்கம் மற்றும் நரம்பி யல் பாதிப்புகள் மற்றும் வளர்ச்சி தாமதங்கள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்ச னைகளை உருவாக்குகின்றன. இந்த வேதிப்பொருட்கள் தோல் மூலம் கிரகிக்கப் படுதல், உள்ளிழுத்தல், உட்செலுத்துதல் மூலம் உடலுக்குள் நுழைகின்றன. இவை உணவு விஷத்தை (Food Poison) போன்ற அதே அபாயங்களையும் ஏற்படுத்துகின்றன. எல்லா அழகு சாதன ஒப்பனை பொருட்க ளும் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே தோலின் பளபளப்பு நிறம், கேசத்தின் நிறம் மற்றும் மினுமினுப்பு போலியாக நீடித்தி ருக்கும். பயன்படுத்துவதை நிறுத்தினாலோ குறைத்தாலோ தோல் உலர்ந்து சுருக்கம் தோன்றி, நிறம் மற்றும் மினுமினுப்பு மறைந்து வித்தியாசமான, விகாரமான, வயது மூப்ப டைந்த தோற்றம் கூட உருவாகலாம். மேலும் இவை பயன்படுத்துவோரில் பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளையும் இதன் தொடர்ச்சியாக தன்னம்பிக்கை தளர்ந்து, கவலை, கோளாறுகள் உட்பட உளவியல் பிரச்சனைகளையும் உருவாக்கு கின்றன. ஏராளமான அழகு சாதனப் பொருட்களை மூன்று வகைகளாக குறிப்பாக பிரிக்கலாம். ஒன்று வாசனை (Fragrances), இரண்டு பதப்பொருள் (Preservatives), மூன்று சாயங்கள் (Dyes).
வாசனைப் பொருட்கள்
கொலோன் ஒப்பனை வாசனை கிரீம், வாசனை திரவியங்கள், பாடி லோஷன்கள் போன்ற தயாரிப்புகளில் நறுமணப் பொருட்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படு கின்றன. வாசனைப் பொருட்களில் ஹைட்ரோசைசோஹெசைல் 3 சைக்லோ ஹெக்சின் கார்பாக்ஸால்டிஹைடு போன்ற பொருட்கள் வல்லுனர்களால் ஒவ்வாமை கொண்டதாகக் கருதப்படுகிறது. ஒவ்வாமை யால் தொடு தோல் அழற்சி அறிகுறிகளில் சிவத்தல், வீக்கம், அரிப்பு மற்றும் படை நோய் ஆகியவை அடங்கும். தோல் சிவப்பு மற்றும் பச்சை நிறமாகவும் மாறலாம். முகம், உதடு கள், கண்கள், காதுகள் மற்றும் கழுத்தில் அடிக்கடி இதன் ஒவ்வாமை வினைகள் நிகழ்கிறது என்றாலும், உடலின் எந்தப் பகுதி யிலும் இவைகள் ஏற்படலாம்.
பதப்பொருள்
பாராமினோபென்சோயிக் அமில எஸ்டர்கள் (பாரபென்ஸ்) போன்ற வேதிப் பொருட்கள் டியோடரண்டுகள், மாய்ஸ்சரை சர்கள், ஷாம்புகள், பாடி வாஷ், வியர்வை எதிர்ப்பு (antiperspirant) போன்ற அழகு சாதனப் பொருட்கள் சிதையாமல் நீண்ட காலம் நீடித்திருப்பதற்கு பதப்படுத்தும் பொருளாக (Preservatives) பயன்படுத்தப் படுகிறது. இந்த வேதிப் பொருட்கள் மார்பகப் புற்று நோய்க்கான வாய்ப்புகளை அதி கரிக்கிறது. இதன் வேதியியல் கட்டமைப்பு ஈஸ்ட்ரோஜனைப் போன்றது மற்றும் இது சிறிய அளவுகளில் கூட புற்றுநோயாக உரு வாக்கலாம் என்றும் தகவல்கள் கூறு கின்றன.
சாயங்கள்
தலைமுடி அலங்காரத்திற்கு பயன் படுத்தப்படும் பல சாயங்களில் ஈசின், ரோஸ் பெங்கால், மெத்திலீன் நீலம், ஆந்த்ராகு வினோன் ஆகிய பாதிப்பை ஏற்படுத்தும் வேதியியல் பொருட்கள் உள்ளன . இவை நச்சுப் பிரதிபலிப்பான ஃபோட்டோடாக்ஸிக் அல்லது ஒளி ஒவ்வாமை போன்ற எதிர்வினை களை ஏற்படுத்தும் பொருட்கள் ஆகும். இந்த அழகு சாதன ஒப்பனை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே தோலின் பளபளப்பு நிறம் கேசத்தின் நிறம் மற்றும் மினுமினுப்பு போலியாக நீடித்தி ருக்கும். பயன்படுத்துவதை நிறுத்தினாலோ குறைத்தாலோ தோல் உலர்ந்து சுருக்கம் தோன்றி நிறம் மற்றும் மினுமினுப்பு மறைந்து விகாரமான வித்தியாசமான வயது மூப்ப டைந்த தோற்றம் கூட உருவாகலாம்.. மேலும் இவைகள் பயன்படுத்துவோரில் பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளையும் இதன் தொடர்ச்சியாக தன்னம்பிக்கை தளர்ந்து கவலை கோளாறுகள் உட்பட உளவியல் பிரச்சனைகளையும் உருவாக்குகின்றன.
இவைகளுக்கு எது மாற்று?
இப்படி சிந்திக்கத் துவங்கினாலே நிச்சயம் அது ஒரு நல்ல மாற்றத்திற்கான ஆரம்பமாக இருக்கும். நிறம் மற்றும் சரும பளபளப்பிற்கு (complexion and skin glow) கடலை மாவு பேஸ்ட், பாலாடையில் கலந்த பயத்த மாவு பேஸ்ட் போன்றவை நமது அம்மா, பாட்டி காலத்து அற்புத அருங் கொடைகளாகும். கேசப் பராமரிப்பிற்கு எந்த காலத்திற்கும் பொருத்தமான சிகைக்காயை பயன்படுத்தலாம். ஹோமியோ பதி பயன்பாட்டில் பக்க விளைவுகள் இல்லாத ஹோமியோபதி அழகுசாதனப் பொருட்கள் ஏராளம் உள்ளன. ஹோமியோ வில் கோதுமை எண்ணெய் மற்றும் கற்றாழை யுடன் கூடிய சோப், சுருக்கங்களுக்கு கற்றாழை, வெள்ளரி மற்றும் பப்பாளியுடன் கூடிய சுருக்க எதிர்ப்பு கிரீம், அர்னிகா, ஷிகா காய், பிராமி, ஆம்லாவுடன் மருதாணி தூள் போன்ற அழகுசாதன பொருட்கள் உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் சந்தைப்படுத் தும் அழகு சாதனப் பொருட்களால் வரும் ஒவ்வாமைகளான முகப்பரு, முடி உதிர்தல், தோல் பிரச்சனைகளை குணமாக்க பக்க விளைவுகள் இல்லாத ஹோமியோ மருந்து கள் நிறைய உள்ளன. மேலும் காஸ்மெடிக்ஸ் எதிர்வினைகளை குணமாக்கி ஹோமியோ பதி மூலம் அழகும் உளஆளுமையையும் பெற லைகோபோடியம், நக்ஸ் வோமிகா, பல்சட்டிலா போன்ற நிறைய மருந்துகள். ஹோமியா மருத்துவத்தில் உள்ளன. இவை களை பொருத்தமான அளவுடன் பெற தகுதி பெற்ற ஹோமியோ மருத்துவரை அணுக லாம். எப்படியோ பன்னாட்டு நிறுவனங்கள் ஆசைகாட்டி நம் பணத்தை பறித்து நம் தலையில் கட்டும் கேடுதரும் இம்மேக்அப் பொருட்களிடம் எச்சரிக்கையாக இருப் போம். பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களுக்கு அடிமையாவதிலி ருந்து (Cosmetics addiction) விடுதலை பெறுவோம். சிந்தித்து நல எழில் வாழ்விற்கு இன்றே திரும்புவோம்.