articles

img

சுதந்திரப் போராட்ட பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

இன்றைய நவீன காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்கு 75 ஆண்டு காலம் என்பது போதுமான அளவிற்கு ஒரு நீண்ட காலமேயாகும். இந்தியா சுதந்தி ரம் பெற்ற 75ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் அதே சமயத்தில், இப் போது நாட்டின் நிலை என்ன என்பது குறித்தும், நாம் செல்ல வேண்டிய திசை வழி என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்கும் இது சரியான தருணமாகும்.

முதல் மைல்கல்

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றமை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காலனியாதிக்கத்தை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் வரலாறு படைத்திட்ட முதல் மைல் கல்லாகும். இந்தியாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற புதிய ஆளும் வர்க்கங்கள், மிகவும் வறுமையுடனும், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியும், எழுத்தறிவற்றும் வாழ்ந்து வந்த மக்கள் மத்தியில் ஒரு நவீன முத லாளித்துவ அமைப்புமுறையைக் கட்டி எழுப்ப முன்வந்தார்கள். இருநூறு ஆண்டு கால காலனித்துவ ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி மிகவும் மந்த நிலையி லேயே இருந்தது. சுதந்திரத்திற்கு முந்தைய அரை நூற்றாண்டு காலத்தில் விவ சாயிகளின் ஆண்டு வருமானம் என்பது மிகவும் மோசமான அளவில்தான் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான சாதனை என்பது 1950இல் அரச மைப்புச்சட்டத்தை நிறைவேற்றியதும், ஒரு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையை அமைத்ததுமாகும். சுதந்திரம் பெற்ற பின்னர் ஆரம்ப ஆண்டுக ளில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசின் பொதுக் கொள்கையாகக் கூறி வந்தது: “நாம் எந்தவொரு கொள்கையை முன்வைப்பதாக இருந்தாலும், அது பொருளா தாரக் கொள்கையாக இருந்தாலும் சரி அல்லது அரசியல் கொள்கையாக இருந்தாலும் சரி, அல்லது வேறெந்தக் கொள்கையாக இருந்தாலும் சரி, அது நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த அளவிற்கு பயனளித்திடும் என்பதைப் பொறுத்தே அமைந்திடும்.”

அதிகரிக்கும் சமத்துவமின்மை

ஆனாலும் அவருடைய தொலைநோக்குப் பார்வை, அதில் அவர் எவ்வளவு தான் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தாலும், வளரும் முதலாளித்து வத்தின் வர்க்க எதார்த்தங்கள் மீது கட்டமைக்கப்பட்டதாகவே இருந்தன. நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் மூலம் விவசாய உறவுகளில் முழுமை யான ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவந்து, சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்குமான ஒரு பொருளாதார அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பதில் அவர் தோல்வி அடைந்தார். கடந்த எழுபத்தைந்து ஆண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முத லாளித்துவப் பாதையிலான வளர்ச்சி ஏகபோகங்கள் வளர்வதற்கும், நாட்டின் சமத்துவமின்மை அதிகரிப்பதற்கும் இட்டுச் சென்றிருக்கிறது. முப்பதாண்டுக ளுக்கு முன் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாறியதன் மூலமாக,  பணக்காரர்கள் மேலும் அதீத பணக்காரர்களாக (super-rich) மாற்றுவதற்கு இட்டுச் சென்றது. ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த கொள்கைகள் பெரு முதலாளி கள் மற்றும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அந்நிய நிதி மூலதனத்திற்கும் அடிபணிந்திருக்கும் விதத்தில் இருப்பது அதிகரித்துக் கொண்டிருந்தது. கடந்த எட்டாண்டுகளாக மோடி அரசாங்கம் மிகவும் அரக்கத்தனமான முறையில் பின்பற்றிவந்த நவீன தாராளமயக் கொள்கைகள் நிலைமை களை மேலும் மோசமாக்கியுள்ளன. 2011இல் 55 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 2021இல் 140ஆக உயர்ந்திருக்கிறது. இந்த பில்லியனர்களின் செல்வம் சுமார் 596 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி-யில்) 19.6 விழுக்காடாகும்.

காவு கொடுக்கப்படும் மக்கள் நலன்

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறை நடைமுறையிலிருப்பதால், ஆளும் வர்க்கத்தின் கட்சிகள் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண் டும் என்பதற்காக, தேர்தல்கள் நடைபெறும் சமயங்களில், மக்களின் போராட் டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக சில மக்கள் நல நடவடிக்கை களையும் வறுமை ஒழிப்புத் திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டிய கட்டா யத்திற்கு ஆளாகி இருக்கின்றன. இவை பொது விநியோக முறை போன்று மக்க ளுக்கு ஏதோ கொஞ்சம் நிவாரணம் அளித்திருக்கக்கூடிய அதே சமயத்தில், ஒட்டுமொத்தத்தில் பார்க்கும்போது, முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ நலன்க ளின் பலி பீடத்தில் பொதுவாகவே மக்களின் நலன்கள் காவு கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றின் விளைவாக, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்தியாவில் ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்குவது என்பது 35.5 விழுக்காடு அளவிற்குக்கூட இல்லை. அதேபோன்றே பெண்கள் மற்றும் குழந்தைகளின் மத்தியிலே ரத்தச் சோகை இருப்பது என்பதும் உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் அதிகமாகும். இவ்வாறு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதற்கான காரணம், பொது சுகாதாரம் மற்றும் பொதுக் கல்வி முறை விரிவாக்கத்திற்கு போதிய அள விற்குத் திட்டங்கள் தீட்டப்படவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. சுதந்தி ரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னரும், பொது சுகாதாரத்திற்கு ஆட்சியாளர் கள் செலவிடும் தொகை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காடு அல்லது அதற்குச் சற்றுக் கூடுதலான அளவேயாகும். இது மிகப் பெரிய ஊழலாகும். உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதா ரத்தைப் பெற்றிருக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் தங்களைப் பீற்றிக்கொள் கிறார்கள். ஆனால், 2021ஆம் ஆண்டு மனிதவள வளர்ச்சி அட்டவணை அறிக்கையில், உலகில் உள்ள 188 நாடுகளில் இந்தியாவின் இடம் 131க்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

அம்பேத்கரின் எச்சரிக்கை

பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகம் உண்மையாக நிறைவேற வில்லை என்றால் நாம் பெற்றுள்ள அரசியல் ஜனநாயகமும் வெற்றி பெறாது என்று 1949ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபையில், அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வரைவை நிறைவேற்றிக்கொண்டிருந்த சமயத்தில் டாக்டர் அம்பேத்கர் நம்மை எச்சரித்தார். நவீன தாராளமயக் கொள்கைகளின் கீழ், மக்களுக்கு  பொருளாதார மற்றும் சமூக நீதி அப்பட்டமாக மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கி றது, அரசியல் ஜனநாயகமும் சிதைக்கப்பட்டு,  அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மோடி யின் ஆட்சியின் கீழ், தேர்தல் ஜனநாயகம் படும் பாட்டைப் பார்த்துக் கொண் டிருக்கிறோம். பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்துகொண்டிருக்கிறது. ஆளும் கட்சிக்கு, கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்கு, தேர்தல் பத்திரம் என்னும் புதிய மார்க்கத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே கட்சி ஆட்சி என்னும் குறிக்கோ ளுடன் எதிர்க்கட்சிகள் மீதும், எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்கள் மீதும் நேரடியா கவே தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் பணமோசடித் தடைச் சட்டம் போன்ற கொடுங்கோன்மை யான சட்டங்கள் எதிர்க்கட்சிகளை நசுக்கவும், தங்களை எதிர்த்துக் குரல் கொடுப் போரை நசுக்கவும் பயன்படுத்தப்பட்டு அவை எதேச்சதிகாரத்தின் முத்திரைச் சின்னங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட எந்தவொரு நிறுவனமும் இவர்களின் நாசகரமான தாக்கு தல்களிலிருந்து தப்பவில்லை.

முற்றுகைக்குள்ளான விழுமியங்கள்

விடுதலைப் போராட்டத்தின் மூலமாகவும் மற்றும் அரசமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள விழுமியங்களின் மூலமாகவும் மக்கள் அடைந்துள்ள சாதனை கள் இப்போது இந்துத்துவாவாதிகளின் ஆட்சியில் முற்றுகைக்கு உள்ளாகி யுள்ளன. ஆட்சியாளர்கள் இந்துத்துவா சித்தாந்தத்தைத் திணிப்பதன் மூலமும், சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்குவதன் மூலமும் மதச்சார்பின்மை யும் ஜனநாயகமுமே மிகவும் ஆழமான முறையில் அரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் மிகவும் வேடிக்கை வினோதம் என்னவெனில், சுதந்திரப் போராட்டக் காலத்தில் அதை எள்ளிநகையாடியவர்களே, இப்போது அதன் 75ஆவது ஆண்டு கொண்டாட்டங்களுக்குத் தலைமையேற்க முன்வந்திருப்பதாகும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் அதன் அங்கமாக இருக்க மறுத்துவிட்டது. ஏனெனில், அது இந்துக்களும் முஸ்லீம்களும் மற்றும் பல்வேறுதரப்பு மக்களும் இணைந்திருந்த ஓர் ஒன்றுபட்ட இயக் கத்துடன் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் இப் போது, ஆளும் கட்சியாக உள்ள ஆர்எஸ்எஸ்/பாஜக விடுதலைப் போராட்டத் தின் பாரம்பரியத்தைத் தனதாக்கிக்கொள்ளும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர்கள் சுதந்திரப்போராட்டத்தால் விளைந் துள்ள உண்மையான விழுமியங்களான, அரசமைப்புச்சட்டத்தில் பொறிக் கப்பட்டுள்ள, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தை ஒதுக்கிவைத்துவிட்டே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

புல்டோசர் தகர்ப்பு- எதிர்ப்புரட்சி

இவ்வாறு இந்தியா தன்னுடைய 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண் டாடும் அதே சமயத்தில், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் உள்ளீடான விழுமியங்களாக விளங்கியவற்றை ஆர்எஸ்எஸ்/பாஜக இடித்துத் தரைமட்டமாக்கும் ஓர் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை எதிர் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி பேசிவரும் புதிய இந்தியா என்பதில், அவர் கூறும் ‘புதிய’ என்பதன் பொருள், ஜனநாயகம் எதேச்சதிகாரமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதும், மதச்சார்பின்மை பெரும்பான்மைவாதத்திற்கும், ஆர்எஸ்எஸ்-இன் பாசிஸ்ட் பாணி முழக்கமான ‘ஒரே தலைவர், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ என்று கூறி இப்போதிருக்கும் பன்மைத்துவ சமூகத்தையே புல்டோ சர் கொண்டு தகர்க்கும் வேலைக்கும்,  வழிகோலிக் கொண்டிருக்கிறது என்பதுமாகும்.        சுதந்திரப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்க ளுக்கு எதிராக கோடானுகோடி மக்கள் – ஆண்களும் பெண்களும் பல்லாயி ரக்கணக்கில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள். அவ்வாறுதான் மிகப்பெரிய அளவில் நவீன வரலாற்றின் வெகுஜன மக்கள் இயக்கங்கள் போராடி இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தது.

எதேச்சதிகார இந்துத்துவா ஆட்சி

இப்போது நாட்டை ஆண்டுகொண்டிருக்கும், எதேச்சதிகார-இந்துத்துவா ஆட்சியாளர்களோ, இத்தகைய வரலாறு படைத்திட்ட போராட்டத்திற்கு நேரெதிராக இருந்தவர்களாவார்கள், வர்க்க சுரண்டலுக்கும் சமூக ஒடுக்கு முறைக்கும் எதிராக, சிறந்ததோர் வாழ்க்கைக்காகப் போராடிய மக்களின் அபி லாசைகளுக்கு நேரெதிராக இருந்தவர்களாவார்கள். எனவே, ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, சமூக நீதியை, பொருளா தார நீதியை மதித்திடும் அனைத்து அரசியல் கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும், குடிமக்களும் விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் சென்ற லட்சியங்களைத் தமதாக்கிக் கொள்ள முயலும் இந்துத்துவா-கார்ப்ப ரேட் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தகர்த்திட அவர்க ளுக்கெதிராக, ஓர் ஒன்றுபட்ட போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.  

தமிழில்: ச.வீரமணி
 






 

 

;