பசுமை நிறைந்த இடங்களில் வாழ்பவர்களின் செல்கள் மெதுவாக முதுமையடைகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசுமை உள்ள சுற்றுப்பகுதிகளில் வாழ்வதால் மன அழுத்தம் குறைதல், இதயக்கோளாறுகள் குறைதல் போன்ற பல சுகாதார பயன்கள் ஏற்படுகின்றன என்று முந்தைய ஆய்வுகள் கண்டறிந்தன. ஆனால் இந்த புதிய ஆய்வு பூங்காக்கள், மரங்கள், பிற பசுமை இடங்கள் உள்ள பகுதிகளில் வாழ்பவர்களின் உடற் செல்கள் மெதுவாக முதுமையடைகின்றன என்று கூறுகிறது.
டெலோமர்கள்
பசுமையான பகுதிகளுக்கு அருகில் வாழ்ப வர்கள் நீண்ட ஆயுள் மற்றும் தாமதமாக முதுமை யடைய உதவும் நீண்ட நாள் வாழக்கூடிய டெலோ மர்களை (Telomeres) பெற்றுள்ளனர் என்று முழு மையான சூழல் அறிவியல் (Science of the Total Environment) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட் டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. டெலோ மெர்கள் ஷூ லேஸின் முனையில் இருக்கும் பிளாஸ்டிக் மூடி போன்ற அமைப்பை உடையவை. இவை ஒவ்வொரு செல்லின் 46வது குரோமோசோ மின் முனையிலும் காணப்படுகிறது.
டிஎன்ஏக்களும் டெலோமர்களும்
டிஎன்ஏக்கள் பெருக்கமடைய இவை உதவு கின்றன. இவை எந்த அளவு நீண்ட காலம் வாழ்கின்ற னவோ அந்த அளவிற்கு டிஎன்ஏக்கள் நகல் எடுக்க அதிக காலம் கிடைக்கிறது. டெலோமெர்களின் வாழ் நாள் குறையும்போது செல்களால் பகுப்படைய முடி வதில்லை. இதனால் செல்கள் இறந்து போகின்றன. முதுமை ஏற்படுகிறது.
டெலோமர்களின் மீது தாக்கம் செலுத்தும் காரணிகள்
நாம் எங்கே வாழ்கிறோம், எந்தச் சூழலில் வாழ்கி றோம், எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறோம், என்ன சாப்பிடுகிறோம் போன்ற ஒவ்வொன்றும் டெலோ மெர்களின் தரமிழக்கும் வேகத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் செல்கள் முதுமையடைவது தொடர்கிறது. இது இந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று வட கரோலினா ஸ்டேட் பல்கலைக்கழக பூங்காக்கள், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மேலாண்மைத் துறை பேராசிரியர் மற்றும் ஆய் வின் இணை ஆசிரியர் ஆரோன் ஹிப் (Aaron Hipp) கூறுகிறார்.
பயன் தரும் இளம் டெலோமர்
நீண்டகாலம் வாழும் ஒரு டெலோமர் உண்மை யில் ஒரு இளமையான டெலோமெர். இது செல் களுக்கு அதிக பாதுகாப்பு தருவது. முதுமையைத் தள்ளிப்போட உதவுவது. முதுமையடையும் செயல்முறையில் இருந்து இது செல்லைப் பாது காக்கிறது. பசுமை இடங்கள் உடலியல் செயல்பாடு களை மேம்படுத்துகின்றன. சமூக செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கின்றன. இவை இரண்டும் நலமான வாழ்விற்கு பெரிதும் உதவுபவை.
பசுமை நிறைந்த இடங்கள்
ஏராளமான மரங்கள், பசுமை இடங்கள் உள்ள பகுதிகள் குளிர்ச்சியானவை. வெள்ளப்பெருக்கைத் தடுத்து நிறுத்துபவை. ஒட்டுமொத்த காற்று மாசைக் குறைக்க உதவுபவை. என்றாலும் பசுமை குறைவாக உள்ள இடங்களில் வாழ்பவர்களை விட காற்று மாசு அதிகமுள்ள பசுமை இடங்களில் வாழ்பவர்களின் டெலோமெர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதில்லை என்று ஹிப் கூறுகிறார். ஆனாலும் பசுமை மிகுந்த இடங்கள் முக்கியமானவை. மக்கள் இத்தகைய இடங் களுக்கு செல்ல, பசுமையை அனுபவிக்கமுடியும்.
தரவுகளின் ஆய்வு
1999-2002 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான தேசீய மையத்தின் ஆய்வில் பங்கேற்ற 7,800 பேருக்கும் மேற்பட்டவர்களின் டெலோமர் நீளம் பற்றிய உயி ரியல் மாதிரிகள் மற்றும் ஆய்வு விவரங்கள் உள்ளிட்ட மருத்துவ ஆவணங்கள் இதற்காக ஆராயப்பட்டன. இந்த ஆய்வுத் தரவுகள் ஆய்வில் பங்கேற்றவர் ஒவ்வொருவரின் அருகாமையில் உள்ள பசுமை இடங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு ஆராயப்பட்டது.
டெலோமர்களின் நீளமும் பசுமைச்சூழலும்
பசுமையான சூழ்நிலை 5% அதிகமாக இருக்கும் இடங்களில் வாழ்பவர்களின் செல்கள் முதுமையடை வது 1% குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. பசுமை இடங்கள் அதிகமாகும்போது செல்கள் முதுமையடை யும் செயல்முறையின் வேகம் குறைகிறது. குறை வான வருமானம் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழ்வோரின் டெலோமர்களின் நீளத்தில் பசுமை இடங்கள் குறைவான தாக்கத்தை ஏற்படுத்து கிறது.
மாசுபட்ட சூழ்நிலை
இது சூழலிற்கும் ஆரோக்கியத்திற்கும் இடை யிலான தொடர்பை கேள்விக்குறியாக்குகிறது என்று எடின்பரோ பல்கலைக்கழகநில அமைப்பு மற்றும் நல வாழ்வு துறைப் பேராசிரியர் மற்றும் ஆய்வின் முன் னணி ஆசிரியர் ஸ்காட் ஆகல்ட்ரீ (Scott Ogletree) கூறுகிறார். காற்றுமாசு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி களில் வாழ்வது போன்றவை பசுமை இடங்களால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கியப் பயன்களை இல்லாமல் செய்துவிடுகின்றன.
பசுமைச்சூழலால் அதிகம் பயன்பெறுவோர்
பசுமை இடங்களுடன் தொடர்புகொள்ளும் வெவ்வேறு வயதினருக்கும் ஆரோக்கியப் பயன் ஏற்படுகிறது. நடுத்தர வயதில் இருப்பவரைக் காட்டி லும் சிறு குழந்தையாக இருக்கும் ஒருவர் பசுமை பகுதி களுடன் அதிகம் தொடர்புகொள்வதால் கூடுதல் பலன்கள் ஏற்படுகின்றன. முதுமையின் ஒரு உயிரி அடையாளமாக (biomarker) கருதப்படும் டெலோ மர் நீளம், பசுமை இடங்கள் மற்றும் முதுமைக்கும் இடையில் இருக்கும் புதிய தொடர்பை இது எடுத்துக் காட்டுகிறது என்று ஹார்வர்டு பல்கலைக்கழக சூழல் தொற்றுநோயியலாளர் பீட்டர் ஜேம்ஸ் (Peter James) கூறுகிறார். இயற்கை மனிதனுக்கு தரும்மகத்தான நன்மை களை இந்த ஆய்வு மீண்டும் நிரூபிக்கிறது.