articles

img

கில்லி சாம்பியன் மோடியும் ராக்பெல்லர் அதானியும் - ப.தெட்சிணாமூர்த்தி

பாலிவுட் நடிகர்  அக்சாய் குமார்  ஒரு நேரிடை பேட்டிக்காக  நரேந்திர மோடியை  சந்தித்தார். ஒரு கேள்வி க்கு பதிலளிக்கும்போது   தனக்குப் பிடித்த விளை யாட்டு கில்லி தண்டா (நம்ம ஊர் கிட்டிப் புல்லுதான்)  என்று  மோடி கூறியிருந்தார். மோடியின் அபிமான விளையாட்டு கிரிக்கெட் என்பதாகவோ  அல்லது அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதாகவோ  எந்த தகவலும் கிடைக்கவில்லை.  குஜராத் அகமதாபாத்தின்  மொட்டேரா ஸ்டேடி யம்  ரூ.800 கோடி செலவில்  2020-இல் மறு நிர்மாணம் செய்யப்பட்டு    குஜராத் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்ற ஒரே   தகுதியில் மட்டும் நரேந்திர மோடி விளை யாட்டு அரங்கம் என மறு பெயரிடப்பட்டது. இதன் அதிநவீன அரங்கத்தை நிர்மாணிப்பதில் கணிசமான அளவு அதானி பங்களிப்பு செய்திருந்ததால் ( சாட்சாத் மோடியின் மூழ்காத ஃபிரெண்ட்ஷிப் சொந்தக்காரர்  கௌதம் அதானிதான்)   ஸ்பான்சர்ஷிப் அடிப்படையில் தென்முனை பெவிலியனுக்கு   அதானி  முனை என பெயரிடப்பட்டது.  

இதில்தான் 9.3.2023 அன்று  பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடை யிலான  நான்காவது  கிரிக்கெட் டெஸ்ட்  போட்டி நடை பெற்றது.இதன் முதல் நாள் போட்டியை காண்பதற் காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸை மோடி  அழைத்திருந்தார்.   அவரும் அகமதாபாத் வந்தி ருந்தார். முன்னதாக ஹோலி பண்டிகையை  குஜ ராத்தில் அல்பனீஸ் குதூகலமாகக்  கொண்டாடினார். சபர்மதி ஆசிரமம் சென்று வணங்கினார். 

அதானிக்காக பேட்டிங்

அனைத்து விதமான ஃப்ரெண்ட்ஷிப்  மேடைகள், அரங்கங்கள், பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரேலிய பிரத மருக்காக  பெரும்பகுதி குஜராத்தில் உருவாக்கப் பட்டன. நரேந்திர மோடியும் அந்தோணி அல்பனீசும்  ரவி சாஸ்திரியின்   புல்லரிக்கும் ஆரவார  வர்ணனை யின்  ஊடே நன்கு அலங்கரிக்கப்பட்ட திறந்த  ஜீப் ரதத்தில்  உலகின் மிகப்பெரிய  நரேந்திர மோடி விளை யாட்டரங்கை வலம் வந்தனர்.  அன்றே  ஹைதராபாத்தில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழ் இதற்கான வேறொரு வர்ண னையை இவ்வாறாக எழுதியிருந்தது. ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையின் வெளிப்பாடுகளின் நிதி விளைவுகளை எதிர்கொள்வதைத்தவிர , மற்ற நாடு களில் உள்ள எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புகளை சந்தித்து வரும்  தனது கார்ப்பரேட் கூட்டாளி  அதா னிக்காக மோடி பேட்டிங் செய்யத் தயாராகி வருகிறார் என்று பலர் கருதுகின்றனர். 

ஆஸ்திரேலியாவில் கார்மைக்கேல் சுரங்க நட வடிக்கைகளுக்கு  எதிராக தொடர்ந்து நீடித்து வரும் போராட்டங்களை சமாளிப்பதற்கு  அதானி குழுமத்தி ற்கு உதவிட  மோடி- அல்பனீஸ்  நட்புத்தழுவல்  மோடி யின் முயற்சியாகக் கருதப்படுகிறது என்று அந்த ஆங்கில நாளிதழ் எழுதியது. அதாவது ஆஸ்திரேலியா வில் அதானி குழுமத்திற்கு எதிராக நடத்தப்படும் பெரிய அளவிலான போராட்டங்களுக்கும், மோடியின் கிரிக்கெட் மீதான திடீர் காதலுக்குமான  தொடர்பையும் அந்த இதழ் கூறி இருந்தது. அதாவது இந்திய பொரு ளாதார அரசியலில் தனது பிரீமியர் லீக்  முதலாளி அதா னிக்காக வாழும்போதே தனது பெயரிடப்பட்ட ஸ்டேடி யத்தில்   சக்திமான்  மோடி  கிரிக்கெட் ஹெல்மெட்  பேட்டிங்,  லெக்   பேட்,   கார்டு கிளவுஸ்  சகிதம் கூட்டாளி அதானி பெவிலியன்  முனையிலிருந்து   தனது மட்டையை சுழற்றி யவாறு கிளம்பிவி்ட்டார் என நாம் பொருள் கொள்ள லாம். 

ஆஸ்திரேலியாவில்  சக்திமான் 

இந்த டிராமா நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு 23.5.2023 அன்று  ஆஸ்திரேலியாவில்   நரேந்திர மோடிக்கு  ராக்ஸ்டார் வரவேற்பு அளிக்கப் பட்டது. 2014-ஆம் ஆண்டு  அமெரிக்காவின் நியூயார்க் வாஷிங்டன் ராக்ஸ்டார் வரவேற்புகள்,அதே ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் பிஜியில்  ராக்ஸ்டார் வரவேற்பு கள், 2015-இல் லண்டன் ராக்ஸ்டார் வரவேற்பு உள்பட மோடி எங்கெல்லாம் வெளிநாடுகளுக்கு செல்கிறாரோ அங்கங்கே உள்ள காவி அமைப்புகள் பிரம்மாண்ட  செலவில்  ஏற்பாடு செய்த வரவேற்புகள் ராக் ஸ்டார் வரவேற்புகள்  என்று அழைக்கப்பட்டன.  ஜெய் ஷா (அமித்ஷா மகன்தான்), நிகில் அக்கார், பிரகாஷ் மேத்தா, ராகுல் ஜேத்தி  போன்ற ஆர்.எஸ்.எஸ் விஎச்பி ஆட்களை கொண்ட ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் பாஜக-வின் வெளிநாட்டு நண்பர்கள்  குழு, புலம் பெயர்ந்தோருக்கான ஆஸ்திரேலியா அறக் கட்டளை போன்ற அமைப்புகள் ஏராளமான நிதியை திரட்டி சிறப்புப் பேருந்துகள்,  சிறப்பு விமானங்கள்,   சிறப்பு ரயில்கள் மூலம்  ஆஸ்திரேலியாவின் பல பகுதி களிலிருந்து ஆட்களை கொண்டு வந்து சிட்னியில் கொட்ட வரிந்து கட்டிக்கொண்டு  வேலை செய்தன. காவி அமைப்புகளின்  செல்லப்பிள்ளை செய்தி நிறுவ னங்களால்  மோடியின் வருகை பூதாகரமாக  பூஸ்ட் செய்யப்பட்டது.  சராசரி இந்தியர்களால் அல்லாமல் வலிந்து கூட்டப்பட்ட கூட்டத்தால் அன்று சிட்னி நகரமே பாட்டும் கூத்துமாக அல்லோகலப்பட்டது. 

உலகின் தன்னிகரற்ற  தலைவர் என்ற பிம்பத்தை பில்டப் செய்து தூக்கி நிறுத்த   வெளிநாடுவாழ்  காவி யிஸ்ட் தனவான்களின் அமைப்புகள் பகீரத பிரயத்த னங்கள் மேற்கொண்டன.  அவ்வாறே சிட்னியின்  மெகா ஜிகினா  வரவேற்பில்   பேசிய  ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் அமெரிக்க ராக் ஸ்டார் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுடன்  மோடியை ஒப்பிட்டு உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் உணர்வை ஆஸ்திரேலியா விற்கு மோடி  கொண்டு வந்ததாக  ஒரே போடாகப் போட்டார். இது எவ்வளவு அபத்தமானது,  போலியானது என்பதை  ஆஸ்திரேலிய அரசின் செய்தி நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் (Australian Broadcasting Corporation) வெளியிட்ட செய்தியி லிருந்து தெரிந்து கொள்ளலாம். 

புகார் அமைப்பைக் கூட  அணுக முடியா அவலம்

இந்தியாவின் மிக உயரிய ஒலிம்பிக் விளையாட்டில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் குற்றச் சாட்டுகள் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை எட்டியுள்ளன, இவர்களில்  பலர் விவசாயக் குடும்பங்க ளைச் சேர்ந்தவர்கள். வினேஷ் போகத் மற்றும் சாக்சி மாலிக் போன்ற  மல்யுத்த வீரர்கள் மற்ற விளையாட்டு களை விட இந்தியாவுக்காக அதிக பதக்கங்களை அளித்தவர்கள்.  இந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆதர வான நிலை இல்லை.  புகார் செய்வதற்கான அமைப்பைக் கூட  அணுக முடியாத அருவருப்பான (ugly under belly) நிலை உள்ளது. ஒலிம்பிக் மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் அடங்கிய குழுவை புதிய நாடாளுமன்றத்தை நோக்கி வரவிடாமல் தடுத்து வைக்கப்பட்டனர்.   தற்போதைய  நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தற்போதைய  தலைவரு மான  பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான முறைகேடு புகார்களை விசாரிக்க போலீஸ் மறுத்ததால்,  மல்யுத்த வீரர்கள் குழுவொன்று  உச்ச நீதிமன்றத்தி ற்குச் சென்று தலையிடக் கோரினர். விளையாட்டு வீரர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேசும் ஒரு போராட்டம் இந்தியாவில் எப்போதும் நடைபெற்ற தில்லை என்று அந்த ஆஸ்திரேலிய செய்தி நிறு வனம் (ABC -14.5.2023 ) கூறியிருந்தது. பாஜக-  ஆட்சியில் ஜனநாயகம் நீதி என்பது  எவ்வளவு சந்தி  சிரிக்கிறது என்பதை மகளிர் மல்யுத்த வீரர்களின்  போராட்டம் உலக அரங்கில் அம்பலப்படுத்தி யுள்ளதை  இச்செய்திகள்  தெரிவிக்கின்றன.  

உண்மை சொல்வது குற்றம்

 மே 22–24 ஆஸ்திரேலியாவில் மோடி இருந்த மூன்று நாட்களில்மோடிக்கு எதிரான பேனர்களும்  இயக்கங்களும் நடைபெற்றன. புலம்பெயர்ந்த இந்திய  ஆஸ்திரேலிய மக்களுக்குள்  பிளவு தெளிவாகத் தெரிந்தது. மோடி ஆஸ்திரேலியாவில் இருக்கும் போதே  குஜராத் இனப்படுகொலையின் போது  மோடி யின் நடவடிக்கைகளை ஆராயும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை புலம் பெயர்ந்த இந்தியர்கள் குழு, ஆம்னஸ்ட்டி  இண்டர்நேஷனல், ஹிந்துக்கள் மனித உரிமைகள் ஆஸ்திரேலியா & நியூசிலாந்து  பிரிவு மற்றும் முஸ்லீம் கலெக்டிவ் ஆகிய குழுக்கள்   கான்பெரா  நாடாளுமன்ற வளாகத்தில் திரை யிட்டன. பின்னர் நடைபெற்ற குழு விவாதத்தில் ஆஸ்தி ரேலிய க்ரீன்ஸ் கட்சியின்  செனட்டர்கள் டேவிட் ஷோபிரிட்ஜ், ஜோர்டான் ஸ்டீல்-ஜான், குஜராத்தில் சிறையிலடைக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மகள் ஆகாஷி பட் மற்றும் அம்னஸ்டி இந்தியாவின் முன்னாள் தலைவர் ஆகர் படேல் தெற்காசிய ஒற்றுமை குழுவின் டாக்டர் கல்பனா வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   செனட்டர் ஜோர்டான் ஸ்டீல்-ஜான் பேசும்போது  இந்தியாவில் மோசமடைந்து வரும் மனித உரி மைகள் நிலைமை குறித்து பிரதமர் மோடியுடன் பேசத் தவறிய பிரதமர் அல்பானிஸ் குறித்து குறிப்பிட்டார். செனட்டர் டேவிட் ஷோபிரிட்ஜ்.  “இந்தியாவில் உண்மை யைச் சொல்வது குற்றமாகும். இந்தியாவில் உள்ள மக்கள் என்ன  அனுபவிக்கிறார்கள் என்பதன் ஒரு உதாரணம்தான் இந்தப் படம்,” என்றார். இந்த செய்தி கள் எதையும் கூறாமல் வழக்கம்போல் பெரும்பான்மை இந்திய பத்திரிகைகள் மௌனம் காத்தன.

சரியும் சாம்ராஜ்யம்

இந்தியாவில் மோடியின் திடீர் கிரிக்கெட் காதல், ஆஸ்திரேலியா பயணம் ஆகியவை அடிப்படையில் இரண்டு முக்கியக் காரணங்களை கொண்டவை. ஒன்று  ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்க ளின் ஆர்.எஸ். எஸ். விஹெச்பி   தளத்தை எதிரிகளுக்கு எதிராக பலப்படுத்துவது. இரண்டு எப்பாடுபட்டாவது சரிவடைந்த அதானி சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்த சுரங்க அதிபர் ஜினா ரைன்ஹார்ட் போன்ற    ஆஸ்திரேலிய பெரு முதலாளிகளை சந்திப்பது.  அதானி, அம்பானிகளின் பிரம்மாண்ட வளர்ச்சி மோடி யின் அரசியல் வளர்ச்சியோடு  இணைந்தது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல அதானி சாம் ராஜ்யத்தின்  சரிவும்  மோடியின் அரசியல்   வீழ்ச்சியும் இணைந்தது என்பதும் உண்மைதான். 2024ஆம் ஆண்டு இதை நமக்கு உணர்த்தும்.



 

;