காலத்தை வென்ற கம்யூனிஸ்ட் தியாகிகள் புனித பூமி வெண்மணி
எர்ணாகுளத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 ஆவது அகில இந்திய மாநாட்டிலிருந்து திரும்பும் வழியில் ஜனவரி 2ஆம் தேதி (1969) நான் வெண்மணி கிராமத்திற்கு சென்றிருந்தேன். தோழர் ஞானசம்பந்தமும் மற்ற தொழிலாளர் தலைவர்களும், என்னோடு இந்த புனிதமான இடத்திற்கு வந்தனர். இப்போது இந்த இடம் புனித ஸ்தலமாகிவிட்டது. நான் செல்லும் பாதையெல்லாம் லாரி லாரியாக போலீஸ் படையினர் “உஷாராக” இருந்தனர். இவர்கள் 144 ஆவது பிரிவு தடைச் சட்டத்தை அமல் நடத்துவதற்காக நின்று கொண்டிருப்பதாக தோழர் ஞானசம்பந்தம் என்னிடம் கூறினார். இந்த அநியாயத்தை - தங்கள் மனைவி மக்களை உயிரோடு கொளுத்திய மாபாவிகளைக் கண்டித்து தொழிலாளர் கிளர்ச்சி செய்வதை தடுக்கவே இந்தப் போலீஸ் படை இருப்பதாகவும் கூறினார். சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்றுவதில் காட்டிய அக்கறையைத் தவிர இந்த திமுக அமைச்ச ரவை, பெண்டு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து தொழி லாளர் கிளர்ச்சி செய்யும் உரிமைகளைக் கூட அங்கீகரிக்கவில்லை. நிரபராதி களையும் அபலைகளையும் கொன்று குவித்த நிலப்பிரபுக்கள் தங்கள் மாளிகை களில் உல்லாசமாக இருப்பதை பாதுகாப்பதற்காக இந்த போலீஸ் படை இருந்தது. இதுதான் அடிப்படை உரிமையாம்! தமிழகத்தின் நலன்களை காப்பாற்று வதாம்! இதையெல்லாம் கேட்டு ஆத்திரத்துடன் நான் அந்தக் கோரச் சம்பவம் நடந்த இடத்தை அடைந்தேன். வழியில் பல குடிசைகள் முழுவதும் எரிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.
ஒரே ஒரு குடிசை எரியாமல் இருந்தது. விசாரித்ததில் இது நிலச்சுவான்தார்களு டன் சேர்ந்து விவசாயத் தொழிலாளிகளை எதிர்த்த ஒரு கருங்காலியினுடைய குடிசை அது என்று அறிந்தேன். பெண்களும் குழந்தைகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட தோழர் ராமையாவின் குடிசைக்கு எதிரில் நின்றேன். அந்த குடிசை இரண்டு அறைகள் கொண்டது. ஒரு சிறிய உள்அறையும் கொஞ்சம் பெரிய வெளி அறையும் கொண்டது. அந்தக் குடிசையிலிருந்த எல்லா பொருட் களும் சாம்பலாக்கப்பட்டன. மண்சுவர்கள் மட்டும் இந்த புனித பூமிக்கு காப்பாக நின்றன. எட்டடி நீளமும் 6 அடி அகலமும் உள்ள சிறிய அறையில் பெண்களும் குழந்தைகளும் உட்பட 44 பேர் அடைந்து கிடந்ததைச் சிந்திக்கவே எனக்கு வியப்பாயிருந்தது. இங்கு தான் அவர்கள் சிறையிடப்பட்டனர். இந்த குறுகிய இடத்தில் அவர்கள் நிற்பதற்குக் கூட இடமில்லை. இந்த இடத்தில் தான் மனித உருக்கொண்ட மிருகங்கள் இவர்களை தீயிட்டுப் பொசுக்கின.
சாவுக்கிடங்கு
நான் உள்ளறையில் நுழைந்தேன். பெண்கள் குழந்தைகளுடைய எலும்பு கள் இங்குமங்குமாக சிதறிக்கிடந்தன. எரிந்த கத்தைகளும் உடைத்த பாத்தி ரங்களும் மனித எலும்புத் துண்டுகளும் சிதறிக்கிடந்தன. அயோக்கியர்களால் சிறையாக மாற்றப்பட்ட இந்தக் குடிசையில் பெண்களும் குழந்தைகளும் அலறித் துடித்ததை கண்முன் நிறுத்திய போது என்னால் உணர்ச்சிகளை அடக்க முடியவே இல்லை. மனிதத் தன்மை யற்ற, பாசிபிடித்துப்போன இந்த சமூகத்தை தீயிட்டுக் கொளுத்துவற்கு இன்னும் எத்தனை நாள் தான் நம் மக்கள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை! துக்கத்தால் நெஞ்சம் துடிக்க நாங்கள் வெளியே வந்ததும் சில பெண் தொழிலாளிகள் எங்களை நோக்கி வருவதை கண்டேன். அதில் ஒரு பெண் திக் பிரமை அடைந்திருந்தார். தனது குடும்பத்தில் பிள்ளைகள் பெண்கள் என்று பதினோரு பேரை இழந்தவர் அப்பெண். அந்த வீரத்தாய்க்கு யார்தான் ஆறுதல் சொல்ல முடியும்? ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் ஒருஅடிப்படை உரிமையும் அவருக்கில்லை. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியும் காங்கிரசும் அவருடைய துக்கத்தையும் துயரத்தையும் வருத்தத்தையும் புரிந்து கொள்ள வில்லையே! அந்தத் தாய், பொசுக்கப்பட்ட குடிசைக்குள் தன் வீட்டுக்குரி யோர் எவரேனும் திரும்பி வருவாரா என்ற முறையில் நோக்கிக் கொண்டி ருந்தாள். மீண்டும் தன் பேரக்குழந்தைகள் எரிந்து வெந்து மடிந்த சோகத்தை, துக்கத்தை அணு அணுவாக நினைத்து நினைத்து கதறி அழ ஆரம்பித்தாள். தரையில் விழுந்தாள். ஆகாயத்தை நோக்கினாள், மீண்டும் குடிசை நோக்கிப் பார்த்தாள். பல பெண்மணிகள் எங்களை பார்க்க நின்றிருந்தார்கள். எல்லோருமே துக்கத்தில் மூழ்கியிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவரான பொன்னம் மாள், இவர்களில் போராடும் சக்திக்கு உதாரணமாக விளங்கினார். குண்டர் களின் கொடுமைத் தாண்டவத்திற்கு பிறகு சில காங்கிரஸ் கைக்கூலிகள் வந்ததை தோழர் ஞானசம்பந்தத்திடம் எடுத்துக் கூறினார்.
அந்த கைக்கூலிகள் பொன்னம்மாளைக் கண்டு, “பார்! செங்கொடி உங்க ளுக்கு ஏற்படுத்தியுள்ள நாச விளைவுகளைப் பார்! உங்கள் கொடியும் - கட்சியும் உங்களுக்கு என்ன செய்துவிட்டது” என்று கூறினார்களாம்! அதற்கு இந்த வீரப் பெண்மணி கூறிய பதில்: “திரும்பி ஓடிப்போய் விடுங்கள்! எங்கள் ஸ்தாபனத்தையும் கட்சியையும் புனிதக் கொடியையும் பற்றி எங்களுக்குத் தெரியும். எங்கள் கொடியின் கீழ்தான் இறுதிவரை நின்று போராடுவோம்.’’ பொன்னம்மாளின் பதில் எங்களுடைய உணர்ச்சியையெல்லாம் தட்டி எழுப்பியது. இந்தக் கொடுமைகளை மன்னிக்க மாட்டோம். தொழிலாளர் களுக்காக எங்கள் கட்சி தொடர்ந்து வெற்றி கிடைக்கும் வரை போராடும் என்று நாங்கள் கூறினோம். கீழ்வெண்மணிக்குப் பிறகு நாகப்பட்டினம் சென்று அங்கு மருத்துவ மனையில் குண்டர்களால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் இருந்த 50 ஆண், பெண் தொழிலாளர்களை சந்தித்தோம். இதில் பலருக்கு உடம்பில் இருபது முப்பது குண்டுகளிலிருந்தன.
மற்றவர்களுக்கு ஈட்டி காயமும் கருக்கரி வாள் காயமும் இருந்தன. தடியடிக் காயங்களோடு பெண்கள் இருந்தனர். ஒருசிறுவன், தடியடியால் மண்டை உடைந்து கிடந்தான். இவர்களில் தன் குடும்பத்தில் பதினோரு பேரை தீக்கு பலி கொடுத்த ஒரு தோழரும் தன் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த மற்றொரு தோழரும் இருந்தனர். இந்தக் கொடுமையை இவர்கள் வீரத்தோடு சகித்தி ருந்தாலும் அவர்கள் படும் வேதனையும் துக்கமும் அவர்கள் கண்களில் தெரிந்தது. சிக்கல் பக்கிரிசாமி இல்லத்தில் வரும் வழியில் சிக்கல் கிராமத்திற்குச் சென்று தோழர் பக்கிரிசாமியின் வீட்டிற்குச் சென்றேன். தோழர் 27 வயதான இளம் விவசாயத் தொழிலாளியாவார். எங்களைக் கண்டவுடன் அவர் மனைவி கதறி அழுதுவிட்டார். தோழர் பக்கிரிசாமியின் போட்டோவை என்னிடம் காட்டினார்கள். போட்டோவிலிருந்த படம் என்னை நோக்கியது. மறைந்த தோழருக்கு என்னு டைய அஞ்சலியை செலுத்தி விட்டு குடும்பத்தாருக்கு இயன்ற வரையில் ஆறுதல் கூறிவிட்டு நாங்கள் பொங்கும் உள்ளத்துடன் விடைபெற்றோம். ஆந்திர மாநிலத்தில் ஒரு அரிஜன சிறுவன் கொளுத்தப்பட்டதும், உத்த ரப்பிரதேசத்தில் ஒரு அரிஜனப் பெண்ணை நிர்வாணமாக நடுத்தெருவில் நிறுத்தி அங்கேயே அவளைப் புணரச் சொல்லி கணவனை போலீஸ் பல வந்தப்படுத்தியதும் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைகளும் யதேச்சை யாக நேர்ந்தவையல்ல. இது நிலச்சுவான்தார்கள், ஏழைகளை எதிர்த்து நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் வடிவமேயாகும். விவசாயத் தொழிலாளர் குடியிருப்புகளின் மீது நடத்தப்படும் தாக்குதல் புதிதல்ல. 1949இல் குமரப்பா குழு தஞ்சை மாவட்டத்தில் நடந்த இந்த தாக்கு தலின் கொடுமையையும் அவை எவ்வாறு குடிசைகளை தகர்த்து பயிர்களை யும் நாசம் செய்தன என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது. ‘‘காணச் சகிக்காத கொடுமை! அளவிலா மழை பெய்து கொண்டிருந்த போதும் சரிவர ஆடை இல்லாத பெண்கள், அரைப்பட்டினி பெண்கள், அழுது துடித்து தரையில் விழுந்து தங்களைக் காப்பாற்றுமாறு கமிட்டித் தலை வரை வேண்டினர்’’ என்று அந்த கமிட்டியின் அறிக்கையில் இருக்கிறது. மேற்சொன்ன கதை இருபதாண்டுகளுக்கு முன்! நிலச்சுவான்தார்களை பொறுத்தமட்டில் எந்த மாறுதலும் இல்லை.
பழி தீர்க்கும் நாள்
ஆம்! இப்போது பெண்கள் அழுது புலம்புகிறார்கள். ஆனால் எல்லா பெண்களும் அல்ல. பொன்னம்மாள் போன்ற வீராங்கனைகள் செங்கொடி ஏந்தி குண்டர்களை நோக்கி, ‘நீங்கள் அழிக்கப்படுவீர்கள்’ என்று அறுதி யிட்டுக் கூறுகிறார்கள். இதுதான் புதுமை! (உள்துறை அமைச்சர்) சவானின் அறைக்குள்ளே ஊறுகாய் போட்டு வைத்திருக்கும் அடிப்படை உரிமைகள் அல்ல; இந்தப் புதுமைதான், எல்லா பிற்போக்குக் கும்பல்களின் மூர்க்கத்தனத்தையும் கிளறி விட்டது. ஆனால் இந்த மாதிரி பயங்கரத்திற்கு வாய்ப்பளித்த இந்த நிலப்பிரபுத் துவ, முதலாளித்துவ அமைப்பையே ஒழித்துக்கட்ட ‘கீழ்வெண்மணி சம்ப வத்திற்கு பழிதீர்க்க வீரர்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.