articles

img

பட்ஜெட் தயாரிப்புக்கு முன் பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள்

ஒன்றிய பட்ஜெட்டில் பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களும், துறைவாரியான சம்மேளனங்களும் கூட்டாக ஒன்றிய நிதி அமைச்ச ருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளன. அதன் விவரம் வருமாறு: “நாட்டின் அரசமைப்புச்சட்டம் மற்றும் ஜனநாயகத் தின்மீது நம்பிக்கைகொண்டு, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்களாகிய தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் பட்ஜெட்டுக்கு முன் நடை பெற்றுவந்த கலந்தாலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம்.

இந்திய தொழிலாளர்  மாநாட்டை கூட்டவில்லை

எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது கடந்த பத்தாண்டுகளில் முத்தரப்பு அமைப்பான ஐஎல்சி எனப்படும் இந்தியத் தொழிலாளர் மாநாட்டை (ILC-Indian Labour Conference) கூட்ட வில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் கூட்டப்பட்ட ஒரே ஐஎல்சி மாநாடு என்பது முந்தைய மாநாடுகளில் பரிந்துரைக்கப்பட்டவற்றை அமல் படுத்த வேண்டும் என்பதற்காகவே கூட்டப்பட்டதா கும். எனினும் அவை கேளாச் செவியினரிடம் கூறியவை போன்றே ஆயிற்று. அவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை.

அபராதத் தொகை  விகிதம் குறைப்பு

நாங்கள் கூறிய பரிந்துரைகளை இந்த அரசாங்கம் உதாசீனம் செய்தது மட்டுமல்ல, இவற்றுக்கு நேரெதி ரான நடவடிக்கைகளிலேயே அது இறங்கியுள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம், ஊழியர் வைப்பு நிதிக்கு (EPM-Employees Provident Fund) முத லாளிகள் அளிக்க வேண்டிய பங்கினை அவர்கள் செலுத்தாவிட்டால் அதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தண்டத் தொகையின் விகிதாச்சாரத்தைக் கடுமை யாகக் குறைத்திருப்பதாகும். இது தொடர்பாக தொழிற் சங்கங்களுடன் எவ்விதக் கலந்தாலோசனையையும் இந்த அரசாங்கம் செய்திடவில்லை. இப்போது புதிதாக அமைந்துள்ள தேசிய ஜனநாய கக் கூட்டணி அரசாங்கம், அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு,  நாட்டில் பெரிய அளவில் ஏற்றத் தாழ்வைக் கொண்டுவரக் காரணமான, வேலை யில்லாத் திண்டாட்டம், பசி-பட்டினிச் சாவை அதி கரித்திடக் காரணமான,  இத்தகைய கொள்கைக ளைக் கைவிடும் என நம்புகிறோம். நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திட உரிய நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2024-25 பட்ஜெட்டு க்குக் கீழ்க்கண்ட பரிந்துரைகளை அளிக்கிறோம்.

கார்ப்பரேட் வரியை உயர்த்துக

1   நிதி வருவாயைப் பெருக்கிட: நிதி வருவாயைப்  பெருக்குவதற்காக, சாமானிய மக்கள் பயன் படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் மீது ஜிஎஸ்டி போன்ற வரிகளை  சுமத்தாது, அதற்கு மாறாக கார்ப்பரேட் வரி, செல்வ வரி முதலியவற்றை அதிகரித்திடுக. பல நாடுகளில் இருப்பதுபோல பாரம்பரிய வரி (inheritance tax)யை அறிமுகப்படுத்துக. கடந்த பல ஆண்டுகளாக கார்ப்பரேட் வரி அநியாயமாகக் குறைக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு மாறாக சாமானிய மக்கள் மீது மறைமுக வரி அதிகரிக்கப்பட்டு வந்திருக்கி றது. இது சரிசெய்யப்பட வேண்டும். பெரும் பணக்கா ரர்கள் மீது ஒரு விழுக்காடு பாரம்பரிய வரி விதித்தாலே அது நிதி வருவாயைப் பெரிய அளவில்  உயர்த்திடும். இதன் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகத் துறைகளுக்கு நிதி வசதியை ஏற்படுத்திட முடியும். எனவே, அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உடனடியாகக் கடுமை யாகக் குறைத்திட வேண்டும்.

2    ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி தள்ளு படிக்கான உச்ச வரம்பை உயர்த்திட வேண்டும். அவர்களின் பணிக்கொடை தொகையையும் கணிசமாக உயர்த்திட வேண்டும்.,

சமூகப் பாதுகாப்பு நிதியம் உருவாக்குக!

3 அணி திரட்டப்படாத தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்காக சமூகப் பாது காப்பு நிதியம் (Social Security Fund) அமைக்கப்பட வேண்டும். அதிலிருந்து குறைந்த பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் உட்பட அனை வருக்குமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வரையறுத்திட வேண்டும். மேலும் மருத்துவம், கல்வி பயன்பாடுகளையும் அளித்திட வேண்டும்.அணிதிரட்டப்படாத தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ வசதிகளை அளித்திட வேண்டும்.

வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்

4 ஒன்றிய அரசாங்கம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலும், அவுட்சோர்சிங் முறை யிலும் வேலைக்கு ஆள் எடுக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். மாறாக நிரந்தர முறையில் வேலைக்கு ஆள் எடுக்கும் முறையை உத்தரவாதப்படுத்திட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் அளித்திட வேண்டும்.  அக்னிவீர், ஆயுத்வீர், கொய்லாவீர் போன்ற நிரந்தரமற்ற வேலைவாய்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி  வைத்திட வேண்டும். மாறாக இதிலும் நிரந்தரமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். ‘ஸ்கில் இந்தியா’ (‘skill India’)  என்ற பெயரில் தனியார் முதலாளிகள் பயன் அடையும் விதத்தில் அரசாங்கத்தின் செலவினத்தில் அப்ரண்டிஸ் முறை யை அமல்படுத்துவதற்கும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிரந்தர தொழிலாளர்களாக்கப்பட வேண்டும்.

200 நாள் வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் (MNREGS) கீழ் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை அளிக்கப்படுவதை உத்தர வாதப்படுத்திட வேண்டும். இதற்கான குறைந்த பட்ச ஊதியத்தையும் அதிகரித்திட வேண்டும்.  இதனை நகர்ப்புறங்களுக்கும் நீட்டித்திட வேண்டும். நிலுவைத் தொகைகள் அனைத்தையும் உடனடியாக அளித்திட வேண்டும்.இதற்கு உரிய பட்ஜெட் ஒதுக்கீட்டை ஏற்படுத்திட வேண்டும். சாலையோர வியாபாரிகள் சட்டத்தின்கீழ் சாலை யோர வியாபாரிகளுக்கு உரிய உரிமங்கள் அளித்திட வேண்டும்.

5 புதிய ஓய்வூதியத் திட்டம் கிழித்தெறியப்பட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்திட வேண்டும்.

6 8ஆவது ஊதியக் குழு உடனடியாக அமைத்திட வேண்டும். 

தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்

7லேபர் கோடுகள் (Labour Codes) என்று கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டங்கள் நான்கும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். முன்பிருந்த 29 தொழிலாளர் நலச் சட்டங்களும் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்திட வேண்டும். இந்தியத் தொழிலாளர்  அமைப் பின் 144ஆவது கன்வென்ஷன் கேட்டுக்கொண்ட தற்கிணங்க இந்திய தொழிலாளர் மாநாட்டை உட னடியாக நடத்திட வேண்டும்.

தனியார் மயத்தை கைவிடுக

8 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும். ரயில்வே துறை, ராணு வம், நிலக்கரி, பிஎஸ்என்எல், ஆர்ஐஎன்எல் (விசாக்  ஸ்டீல் பிளாண்ட்) போன்ற அரசுத் துறைகளைப் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். மின்சார வாரியத்தைத் தனியார்மயப்படுத்திடும் நடவ டிக்கைகளைக் கைவிட வேண்டும். மின்சார சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும். ஸ்மார்ட் பிரி-பெய்ட் மின்சார மீட்டர் திட்டத்தைக் (Smart Pre-paid Electricity Meter Scheme) கிழித் தெறிய வேண்டும். கழிவுப் பொருள்களை வீட்டுக்குவீடு வந்து எடுத்திடும் முறையைத் தனியாரிடம் தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். இதில் அதிநவீன தொழில்நுட்ப முறைகளைக் கொண்டுவர  வேண்டும்.

9 பொதுத்துறை வங்கிகளைச் சூறையாடுவதை நிறுத்த வேண்டும். ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும் பொது இன்சூரன்ஸ் துறைகளைத்  தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான முயற்சிகளைக் கைவிட வேண்டும்.

தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்

10  உணவு/ஊட்டச்சத்து உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூகப் பாதுகாப்புத்துறைகளை தனியாருக்கு கொடுப்பதைக் கைவிட வேண்டும். குடிதண்ணீர், துப்புரவு,வீட்டு வசதி போன்றவற்றிற்குப் போதுமானஅளவிற்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும். தலித்/பழங்குடியினருக்கான துணைத் திட்டத்திற்கும், பாலின சமத்துவத்திற்கும் போதிய பட்ஜெட் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.  
11  ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
12 விலைவாசியைக் கட்டுப்படுத்திட வேண்டும். இதற்குப் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளையும், அத்தியாவசியச் சேவைகள் மீதான வரிகளையும் குறைத்திட வேண்டும். ஊகவர்த்தகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்திட வேண்டும்.  
13  அங்கன்வாடி, மதிய உணவுத் திட்டம், ‘ஆஷா’போன்ற திட்டப் பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக்கிட வேண்டும். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், ஓய்வூதியம் ஆகிய திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்.
14   ஊழியர் வைப்பு நிதியத்தில் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை ரத்து செய்திடவேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம்ரூபாய் அளித்திட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் இத்திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
15  வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்திட வேண்டும்

.”இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன. 



 

;