articles

img

வீழ்ச்சியின் பிடியில் அமெரிக்கா! - பேரா.ரிச்சர்டு டி.உல்ப்

உலக நாடுகள் மீது பொருளாதார ஆதிக் கம் செலுத்தி வந்த அமெரிக்கா சமீப காலமாக சரிவை சந்தித்து வருகிறது. தற்போதைய உலகப் பொருளாதார நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட ஜி-7 நாடுகளின் பங்களிப்பை விட பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பின் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) பங்களிப்பு மூன்றில் ஒரு பங்காக இருக் கிறது.இது அமெரிக்காவின்  ஆதிக்கத்திற்கு மாறாக ஆக்கப்பூர்வமான ஒரு மூன்றாவது உலக நாடுகளின் கட்டமைப்பு வலுப்பெறுவதைக் காட்டுகிறது. ரஷ்யாவை தனிமைப்படுத்த உக்ரைன் போர் உட்பட அமெரிக்கா மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கை கள், சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த தோடு அது பிரிக்ஸ் கூட்டணிக்கு மேலும் வலுசேர்த்து  அமெரிக்காவை உலகளவில் தனிமைப்படுத்தி வருகிறது. 

இந்தப் பின்னணியில், உலக பொருளாதார வளர்ச்சியில் தவறான அணியில் அங்கம் வகித்து விட் டோம் என ஜி-7 கூட்டமைப்பில் உள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் வெளிப்படையா கவே கருத்து தெரிவித்துள்ளார். தெற்கு உலக நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வழங்குவதில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டா ளிகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றிற்கு நேரடி சவால்களை விடுத்து சீனா கடன் வழங்கி வருகிறது.இதனால் ஆத்திரமடைந்த அமெ ரிக்கா, கடன் வாங்கிய நாடுகளை சீனா கபளீகரம் செய் கிறது என போலிப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. ஆனால் பல நாடுகள் சீனாவின் கடன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு,  கடன் பெற்றுள்ள செய்தி அமெரிக்காவின் பொய்ப்பிரச்சாரத்தை உடைத்துள்ளது. வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதாரம், அரசி யல் கலாச்சார ரீதியிலான தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது. உதாரணமாக ரஷ்யா- உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டில் சீனாவுடன் இணக்கமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகள்  நடுநிலை வகிக்கின்றன.

டாலரிலிருந்து  விலகிக் கொள்வது

உலகப் பொருளாதாரத்தில் டாலர் பரிவர்த்தனை யில் இருந்து  பல நாடுகள் விலகி வந்து சொந்த கரன்சி அல்லது பிற நாடுகளின் கரன்சியை பயன்படுத்தி வரும் செய்திகள் தொடர்ந்து வருவது உலகப் பொருளாதா ரத்தில் ஒரு மாற்று அணி உருவாகியுள்ளதைக் காட்டு கிறது. ‘டாலரில் இருந்து விலகிக்கொள்வது’ (டி-டால ரைசேஸன்) புதிய உலக பொருளாதாரத்தைக் கட்ட மைப்பதில் முதன்மை பங்கு வகிக்கிறது.2000 ஆண்டு துவங்கியது முதல் பெடரல் வங்கியில் இருந்த அமெரிக்க டாலரின் இருப்பு சரிபாதியாக சரிந்துள்ளது; மேலும் சரிந்து வருகிறது. தற்போது பெட்ரோடாலர் பொருளாதாரத்தை தீவிர மாக பின்பற்றிய சவூதி அரேபியாவும் டாலர் வழி வணி கத்தில் பின்வாங்கி வருகிறது.டாலருக்கு பதிலாக மாற்று பண வர்த்தகத்தினால் அமெரிக்கா மிக நீண்ட பாதிப்புகளை சந்திக்கும் எனத் தெரிகிறது. சீனாவின் சில முன்முயற்சிகள், குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்டவை சர்வதேச அளவில் மிகவும் வரவேற்பு பெற்றது.இத்தகைய சர்வதேச முக்கி யத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் அமைதி ஏற்படுத்த தலையீடு செய்யும் வகையில் உயர்ந்துள்ள  சீனாவின் பலத்தை இரண்டு வகையில் மதிப்பிடலாம்.

ஒன்று உலகளவிலான வர்த்தகம், குறைந்த வட்டி யில்  கடன் கொடுப்பது,பிறநாடுகளில் வளர்ச்சி திட்டங்க ளுக்கு முதலீடு செய்யும் வகையில் பெரும் வளத்தை  சீனா கொண்டுள்ளது.இரண்டாவது, முப்பது ஆண்டு களில் சீனா யுத்த பொருளாதாரம் இல்லாமல் அமைதி யான முறையில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தது. அமெரிக்காவோ, இரு நாடுகளுக்கிடையே பிரச்ச னைகளை உருவாக்கி அதன் மூலம் ஆயுத விற்ப னையை அதிகரிப்பது; போர் நடவடிக்கைகள் மூலம் பிறநாடுகளை மிரட்டுவது என மேலாதிக்கம் செலுத்தி வந்தது. மாறாக சீனா, நாடுகளுக்கிடையிலான பிரச்ச னைகளை அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பது என்ற பாதையில் செல்கிறது. தனியார் துறை அரசுத்துறைகளை இணைத்து நவீன தாராளமயத்தை பயன்படுத்தி  தனித்துவ பண்பு களைக் கொண்டு சீனா உலகப் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.சீனப் பண்புகளு டன் கூடிய சோசலிசத்தை நோக்கிய வர்க்க கட்ட மைப்பில் சீனா முன்னேறுகிறது.

தமிழில் சுருக்கம்: சேது
 

;