மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகள், சிலவகை பூச்சிகள், பாம்பு, மீன், சில தாவரங்கள் போன்ற பல உயிரி னங்களில், வாரிசுகளின் பாலை (ஆணா, பெண்ணா என்று) தீர்மா னிப்பது தாய் மற்றும் தந்தையின் இனப்பெருக்க மரபணுக்களின் குறிப்பிட்ட இணைப்பே. இவற் றில் தாயின் இனப்பெருக்க மர பணு XX எனவும் தந்தையின் மரபணு XY எனவும் உள்ளது. தாயிடமிருந்து ஒரு மரபணுவும் தந்தையிடமிருந்து ஒரு மரபணு வும் இணைந்து குழந்தை உரு வாகிறது. எக்ஸும் எக்ஸும் இணைந்தால் பெண் குழந்தையும் எக்ஸும் ஒய்யும் இணைந்தால் ஆணும் பிறக்கும். இப்போது அறிவியலாளர் கள், விந்து உற்பத்தி மற்றும் கருத்தரிப்பில் தொடர்புடைய ஒய் குரோமோசோமின் கட்ட மைப்பை அறிந்துள்ளனர். ஏற்க னவே ஆய்வு செய்யப்பட்ட ஒய் குரோமோசோம்களுடன் இப் போது கட்டமைத்துள்ள 3 கோடி டிஎனஏக்கள் சேர்க்கப்பட்டு ஒரு முழுமையான வடிவம் கிடைத்துள்ளது. மனித உடலில் உள்ள 46 குரோமோசோம்களில் ஒய் குரோ மோசோம் மிகச் சிறியது. இது வாரி சின் பாலை தீர்மானிக்க மட்டுமே பயன்படுகிறது என்று இதற்கு முன் கருதப்பட்டது. ஆனால் அது அதற்கு மேலும் சில பணிகளை செய்கிறது. சில ஆண்கள் தங்க ளின் சில செல்களிலிருந்து ஒய் குரோமோசோம்களை இழக்கி றார்கள். இது புற்று நோய், அல்ஸெமியர் மற்றும் பல நோய்க ளுக்குள்ளாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறதாம்.
தற்போது ஒய் குரோமோசோமின் முழு கட்ட மைப்பும் கண்டறியப்பட்டுவிட்ட தால் அதன் பணிகளை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். சிறியதாக இருந்தாலும் ஒய் குரோமோசோம், திரும்ப திரும்ப அடுக்கப்பட்ட ஏராளமான துண்டு களைக் கொண்டதால் ஆய்வா ளர்கள் அது குறித்து ஆய்வு செய்ய தயங்க வேண்டியதிருந் தது என்கிறார் இந்த ஆய்வின் தலைவரும் அமெரிக்க தேசிய மனித மரபணு ஆய்வு நிறு வனத்தை சேர்ந்தவருமான உயிர் தகவிலயல் ஆய்வாளர் ஆடம் பிஃலிப்பி. இந்த குரோமோஸோ மின் அடுக்குகள் ஒரே மாதிரியான முடிவில்லாத புதிர் துண்டுகள் (puzzle pieces) போல இருக்கின் றன. சில அடுக்குகள் தலைகீழாக வும் சில இரண்டு பக்கத்திலிருந் தும் ஒரே மாதிரியாகவும் (பாலின்ட்ரோம்) காட்சியளித்தன. மேலும், ஒரு மரபணுவின் நகல் கள் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தன. எனவே இதை ஆய்வு செய்வது கடினமாக இருந்தது. வெவ்வேறு இனத்தை சேர்ந்த 43 நபர்களின் ஒய் குரோமோ ஸோம்களை ஆய்வு செய்ததில், அவை அவற்றின் நீளத்தில் நப ருக்கு நபர் மாறுபடலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. அதேபோல் இவற்றிலுள்ள TSPY2 எனும் ஜீன்களின் இடமும் மாறுபடலாம். ஆகவே இதன் கட்டமைப்பு துல்லியமாக அறியப்படும்போது, விந்துக்களின் உற்பத்தி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதற்கான விடைகள் கிடைக்கும். கருத்த ரிப்பு சிகிச்சையில் மேம்பட்ட புரி தல்கள் கிடைக்கும். ஆனால் அவையெல்லாம் தொலைவில் உள்ளன.