சோசலிச கியூபாவுக்கு பேராதரவு அளிப்போம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24ஆவது மாநாடு, இந்த மிகவும் கடினமான காலகட்டத்தில் கியூபா வுடன் தனது முழுமையான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. சோசலிச கியூபா, ஏகாதிபத்தியத்தின் வலிமையை எதிர்கொள்ள வும், ஒரு சிறந்த உலகைக் கட்டமைப்பதற்கா கப் போராடவும் முடியும் என்ற நம்பிக்கையை யும் உதாரணத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. அமெரிக்க ஆதிக்கம் அமெரிக்கா எப்போதும் லத்தீன் அமெ ரிக்காவின் முழுப்பகுதியையும் தனது பின்புற வளாகமாகக் கருதியது;மேலும், எந்த வொரு நாட்டின் சிறிதளவு இறையாண்மை வெளிப்பாட்டையும் கூட அமெரிக்காவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கியூபப் புரட்சி, தன்னை சோசலிசமாக அறிவித்ததி லிருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூப மக்க ளின் உறுதியை உடைக்கவும், நாட்டின் வீழ்ச்சி யை உறுதி செய்யவும் கடுமையாக முயற்சி த்து வருகிறது. பொருளாதாரத் தடை 1962 முதல், கியூபா அமெரிக்காவால் இனஅழிப்பு பொருளாதாரத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் இந்த சின்னஞ்சிறிய தீவை பொருளாதார ரீதியாக மூச்சுத் திணறச் செய்வதாகும். இந்தத் தடை கியூப மக்களுக்கு ரூ.1,29,69,717.04 கோடி இழப்புகளை ஏற்படுத்தி அவர்களின் உற்பத்தி செயல்முறைகளைத் தடுத்துள்ளது. கியூபாவின் சாதனைகள் அவர்களின் பொருளாதாரத்திற்கு இத்த கைய பெரிய இழப்புகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு கியூபரும் இலவச கல்வி, இலவச சுகாதாரம் பெறுவதை கியூபா உறுதி செய்கிறது; மேலும்விளையாட்டு, கலைகள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கேற்ப பிற கலாச்சார துறைகளில் சிறந்து விளங்குகிறது. கியூபா தனது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை இயற்கை பேரழிவுகள் அல்லது பெருந்தொற் றுகளை எதிர்கொள்ளும் பொருட்டு உலகின் எந்த நாட்டிற்கும் அனுப்புகிறது. இது சர்வதே சியத்தின் மீதான கியூபாவின் கடப்பாடு மற்றும் மனிதகுலத்தின் மீதான அக்கறை, தானே துன்பப்படும் போதும் கூட நட்புக் கரம் நீட்டுகிற மாபெரும் பண்பாகும். தற்போதைய நெருக்கடி சட்டவிரோத பொருளாதாரத் தடையின் கார ணமாக, கியூபா ஒரு கடுமையான நிலையை கடந்து வருகிறது. அமெரிக்கா விதித்த பொரு ளாதாரத் தடையை கண்டிக்கும் ஐ.நா. பொதுச்சபையால் நிறைவேற்றப்பட்ட சுமார் 31 தீர்மானங்களை அமெரிக்கா புறக்கணிக்கி றது. மறுபுறம், அமெரிக்கா, கியூபா மீதான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாத சக்திகள் மற்றும் கியூபாவுக்கு எதிரான சக்திகளுக்கு நிதியளிக்க மில்லியன் கணக்கான டாலர் களைச் செலவிடுகிறது. தடையின் விளைவுகள் தடையின் காரணமாக, கியூபா மின்சார விநியோகத்தில் நீண்ட இடைவெளிகளை அனுபவிக்கிறது. கியூப மக்கள், மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். உணவு, எரிபொருள் மற்றும் மூலப்பொ ருட்களுக்கான கொள்முதல் வாய்ப்புகளை மறுப்பதன் மூலம் கியூபாவை நெரிக்க பொரு ளாதாரத் தடையின் திருகுகள் இறுக்கப் படுகின்றன. அடக்குமுறை நடவடிக்கைகள் கூடுதலாக, கியூபா தன்னிச்சையாக பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் போலியான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, இது அமெரிக்காவின் ஆணைகளுக்கு அடி பணிய மறுக்கும் நாடுகளுக்கு எதிரான பொரு ளாதாரப் போரின் ஒரு பகுதியாக செயல் படுத்தப்படும் பல ஒருதலைப்பட்சமான நிர்ப்பந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். கியூபாவின் எதிர்ப்பு கியூபர்கள், தங்களை அடிபணிய வைக்கும் அனைத்து முயற்சிகளையும் துணிச்சலுடன் எதிர்த்து வருகின்றனர். அவர்கள் தங்கள் நாட்டை வீரத்துடன் பாது காக்கின்றனர். இப்போது உலகம் கியூபாவுடன் ஒற்றுமையுடன் நின்று, ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட நெருக்கடியை சமாளிக்க உதவும் தருணமாகும். கியூபாவுடன் இருப்பது என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போ ராட்டத்தில் இணைவதும், சோசலிசத்தைப் பாதுகாப்பதும் ஆகும். அறைகூவல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24ஆவது மாநாடு, கியூபாவுடன் ஒற்று மையுடன் நிற்க தீர்மானிக்கிறது; தோழர் பிடெல் காஸ்ட்ரோவின் பிறந்த நூற்றாண்டு நிறை வான ஆகஸ்ட் 13, 2025க்கு முன்னர், அதிக பட்ச நிதி உதவியை திரட்டுவதற்கான கியூபாவு டனான ஒருமைப்பாட்டுக்கான தேசியக் குழுவின் அழைப்பில் இணைகிறது. நமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளையும் அணுகி, ரூ.10 முதல் ஒரு நாள் ஊதியம் வரை, அதற்கும் அதிகமாக - இல்லையெனில், எந்தத் தொகையையும் அளிக்குமாறு கேட்க வேண்டும். கியூபாவுக்கு மருந்துகள் மற்றும் மின்னாக்கிகளை வாங்க முடியும் என்பதால், நாம் மக்களை அணுகி நிதி உதவியைப் பெற வேண்டும். இது நமது ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணியின் ஒரு பகுதியாகும்.
அடிப்படைத் தேவைகளை அடிப்படை உரிமைகளாக அங்கீகரிக்க வேண்டும்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநாடு, உணவு, தங்குமிடம், வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவை களை வழங்கும் பொது நலத் திட்டங்கள் என்பவை தர்மம் அல்ல, மாறாக ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படை உரிமை என்று உறுதியாக நம்புகிறது. நீதி மற்றும் சமத்துவத்தின் அடித்தளம் ஒவ்வொரு குடிமக்களுக்கும் நீதி மற்றும் சமத்துவத்தின் அடித்தளமாக விளங்கும் இந்த அத்தியாவசியத் தேவைகளை அணுகும் உரிமை உண்டு. பொருளாதார உரிமைகள் சமூக முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நலத் திட்டங்கள் மனித மூல தனத்தில் செய்யப்படும் முதலீடுகளாக செயல்பட்டு, அதிக உற்பத்தித்திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்கி, நீண்டகால பொருளாதார வளர்ச்சியை இயக்குகின்றன. நவதாராளவாத கொள்கைகளின் தாக்கம் நவீன தாராளவாதக் கொள்கைகளின் அறிமுகமானது, சமூகத் துறைகளின் மீது கருத்தியல் தாக்குதல்களுக்கு வழிவகுத்துள் ளது. அரசாங்கங்கள் இந்த துறைகளிலிருந்து விலகி, சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படைக் கோட்பாடாகும். மோடி அரசின் தாக்குதல்கள் பாஜக தலைமையிலான மோடி அரசு இந்த திட்டங்களை ரத்துசெய்யவும், மானி யங்களை குறைக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடி, சமூக நலத்திட்டங்களை ‘ரேவ்டி’ (இலவசங்கள்) என்று இழிவுபடுத்தி, அவை நாட்டின் வளர்ச்சி க்கு தீங்கு விளைவிப்பதாக அவதூறு செய்வ தில் முன்னணியில் உள்ளார். இந்த கூற்று, பாஜக ஒன்றிய அரசால் பின்பற்றப்படும் சந்தை சார்ந்த, புதிய தாராளவாதக் கொள்கைகளின் மோசமான விளைவுகளில் இருந்து பாதிக்கப் படக்கூடிய பிரிவினரை பாதுகாப்பதில் சமூக நலனின் முக்கியப் பங்கை புறக்கணிக்கிறது. பணப் பரிமாற்ற திட்டங்களின் ஆபத்து மானிய அடிப்படையிலான திட்டங்களுக்கு பதிலாக மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பரிமாற்ற திட்டங்கள், இறுதியில் அத்தி யாவசிய சமூக பாதுகாப்பு திட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, பின்னர் கலைக்க வழி வகுக்கும். இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகப் பிரிவினரை எப்போதையும் விட அதிக உதவியற்றவர்களாக ஆக்கும். அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு முரணான செயல்கள் இந்த அணுகுமுறை அரசுக் கொள்கை குறித்த அரசியலமைப்பின் வழிகாட்டு நெறி முறைகளுக்கு முரணானது. அரசியல மைப்பின் ஒரு பகுதியாக உள்ள இந்த நெறி முறைகள், சாதி, மதம் அல்லது பிற வேறுபாடு கள் இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதை வலியுறுத்துகின்றன. துரதிருஷ்டவசமாக, இவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த முடியாதவை. இவற்றை நீதிமன்றத்தில் நிலைநாட்டக்கூடிய வகையில், குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது. போலியான நிதி கட்டுப்பாட்டு வாதம் நவீன தாராளவாதக் கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கங்கள், நிதி கட்டுப் பாடுகள் காரணமாக இந்த உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது என்று வாதி டுகின்றன. இது போலியான வாதமாகும். கார்ப்பரேட் வரிகளை தொடர்ந்து குறைப்ப தும், கார்ப்பரேட்டுகளிடமிருந்து சட்டப்பூர்வ மாக செலுத்த வேண்டிய வரிகளை வசூ லிக்க மறுப்பதும் ஆட்சியாளர்களின் நிதிக் கொள்கையின் முக்கிய பகுதியாக உள்ளது. பாஜக அரசு தனது ஆட்சிக் காலம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த வரிகளை குறைத் துள்ளது. சீரமைக்கப்பட்ட வரி அமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும். மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவோம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநாடு, உணவு, தங்குமிடம், வேலை வாய்ப்பு, ஓய்வூதியம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான போராட்டத்திற்கு ஒன்றி ணைந்து அணிதிரளுமாறும், தற்போதைய பல்வேறு நலத் திட்டங்களை குறைக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை உறுதி யாக எதிர்க்குமாறும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.