articles

img

ராஜஸ்தான் அணுசக்தி ஆலை தேர்தல் சிஐடியு தொழிற்சங்கம் அபார வெற்றி- ஆர்.கே.சாமி,

ராவத் பாட்டா ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர்கர் மாவட்டத்தில் ராவத் பாட்டாவில்(RA WATBHATA) அமைந்துள்ள அணு சக்தி ஆலையில் செப்டம்பர் 4 அன்று  (புதன்) சங்க அங்கீகாரம் மற்றும் உரிமைக்கான தேர்தல்ந டைபெற்றது. 

மொத்தம் 1169 வாக்காளர்க ளில் 1123 பேர் வாக்களித்தனர். அதில் மூன்று வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. 

பதிவான வாக்குகள் புதனன்று எண்ணப்பட்ட நிலையில், தொ டக்கம் முதலே முன்னிலையில் இருந்த சிஐடியு தொழிற்சங்கம் (CITU) - 469 வாக்குகளும், பிஎம்எஸ் (BMS) - 374 வாக்குகளும், ஐஎன்டி யுசி (INTUC) - 259 வாக்குகளும், சுயேச்சைகள் - 18 வாக்குகளும்  பெற்றன. வாக்கு எண்ணிக்கை  முடிவில் சிஐடியு தொழிற்சங்கத் தின் அணுசக்தி ஆலை தொழி லாளர்கள் யூனியன் (பரமாணு வித்யுத் கர்மாச்சாரி யூனியன் - PA RAMANU VIDHYUT KARMACHARI UNION)  95 வாக்குகள் வித்தியா சத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பிஎம்எஸ் யூனியனை வீழ்த்தி ராவத் பாட்டா அணுசக்தி ஆலையின் அங்கீகாரம் பெற்ற சங்கமாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு சிஐடியுவின் துணைத்தலைவர் ஏ.கே.பத்ம நாபன், பொருளாளர் சாய்பாபா, செயலாளர் கருமலையான் ஆகி யோர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

நள்ளிரவு வரை  வெற்றிக் கொண்டாட்டம்

வாக்கு எண்ணிக்கை முடிவை தொடர்ந்து புதனன்று இரவு 8 மணியளவில் அணுசக்தி தொழி லாளர் குடியிருப்பில் நூற்றுக்க ணக்கான தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கூடி  பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் நடனமாடிக் கொண்டா டினர். மேலும் ஊர்வலமாகச் சென்று குடியிருப்பு முழுவதும் வெற்றி கோஷங்கள் முழங்கினர்.நள்ளிரவு 12.30 மணி வரை இந்த வெற்றிக் கொண்டாட்டம் நீடித்தது. இறுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செய லாளர் ஆர்.கே.சாமி, சித்தூர்கர்  மாவட்டத் தலைவர் சஞ்சய்  செங்கர், யூனியன்  தலைவர் விகாஷ் சௌகான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். யூனியன் பொதுச்செயலாளர் பாபு லால் மீனாவின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் முடிவடைந்தது.

ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பிரிவினை வாதம் முறியடிப்பு 

கடந்த 2022இல் பிஎம்எஸ் தொ ழிற்சங்கம் 15 வாக்குகள் அதிகம் பெற்று அங்கீகாரம் பெற்றது. இந்த 15 வாக்குகள் வித்தியாசமும் ஐஎன்டியுசியின் ஒரு பிரிவை தன்னுடன் (விலைக்கு வாங்கி) இணைத்து கொண்டு சிஐடியுவை தோற்கடித்தது. அதே போல தற்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திலும் சாதி, மதம், இனம் மற்றும் அனைத்து விதமான பிரி வினை வாதம், அரசியல் ஆசையும் காட்டி தொழிலாளர்களை ஈர்க்க பிஎம்எஸ் முயன்றது. மேலும் பாஜக வின் சட்டமன்ற, மக்களவை உறுப்பினர் (மாநிலத் தலைவரும் கூட), மக்களவைத் தலைவர் ஆகி யோரின் முழு உதவிகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் அள்ளிக்கொட்டினர். ஆனால் சிஐடியுவின் நேர்மையான வேலைப்பாடுகள் தொழிலாளர் நலக் கொள்கைகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டங்க ளின் வலிமையால் இந்த வெற்றி கிட்டியது.

கன நீர் ஆலையில் 42 ஆண்டுகாலம் வெற்றிக் கொடி...

ராவத்பாட்டா அணுசக்தி ஆலை இந்தியாவில் முக்கிய மான ஒன்றாகும். இங்கு 6 உலைக ளில் உற்பத்தி நடக்கிறது. 7 மற்றும் 8ஆவது உலைகளின் கட்டுமா னப்பணிகள் முடிவடையும் நிலை யில் உள்ளது.

இங்கு அமைந்துள்ள கன நீர்  ஆலையில் (HEAVY WATER PLANT)  சிஐடியு கடந்த 42 ஆண்டுகளாக அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்க மாக செயல்படுகிறது. இதில் பிஎம்எஸ் (BMS) மற்றும் ஐஎன்டியுசி (INTUC)  தொழிலாளர்கள் ஏற்க னவே சிஐடியுவில் சேர்ந்து விட்ட தால் அங்கு ஒரே ஒரு யூனியன் மட்டுமேயுள்ளது.

ஆர்.கே.சாமி, 
செயலாளர், சிஐடியு, ராஜஸ்தான்.