போராட்டக்காரர்களை சுட உத்தரவிட்ட ஷேக் ஹசீனாவின் பழைய உரையாடல் வெளியாகி அதிர்ச்சி
டாக்கா, ஜூலை 10- ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்தாண்டு வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த போது மாண வர்களை ஒடுக்க ஆயுதங்களை பயன் படுத்தவும், போராட்டக்காரர்களை சுடவும் பாதுகாப்பு படைக்கு அவர் உத்தரவிட்ட உரையாடல் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் போராட்டம் கலவரமாக மாற்றப்பட்டு நிலைமை மிக மோசமான நிலையை அடைந்தவுடன் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அதன் பிறகு அமைக்கப்பட்ட முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மாணவர் போராட்டங்களை ஒடுக்க மனிதாபிமான மீறல் குற்றங்களை செய்துள்ளதாக ஷேக் ஹசீனா மீது வழக்குப் பதிவு செய்தது. மேலும் அவருக்கு கைது உத்தரவும் பிறப்பித்துள்ளது. சமீபத்தில் அவருக்கு 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த உரையா டலும் வெளியாகியுள்ளது. அந்த உரை யாடல் 2024 ஜூலை 18 அன்று வங்கதேச பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபவனில் இருந்து செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின்போது பதிவு செய்யப்பட்டது என கூறப்படுகிறது. இந்த அழைப்பிற்கு பிறகே டாக்கா முழுவதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப் பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.