articles

img

தடைகளை உடைத்து தலை நிமிர்ந்து நிற்கும் கியூபா - ஐ.ஆறுமுக நயினார், மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

தடைகளை உடைத்து  தலை நிமிர்ந்து நிற்கும் கியூபா

சுதந்திரத்தை, ஜனநாயகத்தை, சோச லிசத்தை விரும்புகிற யாரும் சோசலிச கியூபாவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் தயக்கம் காண்பிப்பதில்லை. சமூக மாற்றம் என்பது அவரவர் நாடுகளில் புரட்சிகள் மூலமாக ஏற்பட்டு, தங்கள் தேசமும் சோசலிச நாடாக மலர வேண்டும் என்று உலகத்தின் பெரும்பகுதி உழைக்கும் மக்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இன்று சோசலிச கியூபாவுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, அவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல், அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் எதுவும், சோசலிசம் என்ற சமூக அமைப்புக்கு ஏற்பட்ட பிரச்ச னைகள் அல்ல. சோசலிசம், கம்யூனிசம், சமூக மாற்றம் என்பதை விரும்பாத, லாபத்தை மட்டுமே குறிக்கோ ளாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ நாடுகள் சோசலிசத்தை எதிர்க்கின்றன. ஏற்கெனவே பரிணமித்துவிட்ட சோசலிச நாடுகளை கருவறுக்க விரும்புகின்றன. எனவேதான் இந்த தாக்குதல்கள்.

ஒரு தீவின் வீரக் கதை

சின்னஞ்சிறு கியூபா 1953-இல் தொடங்கி 1959 வரை நடத்திய மிகப்பெரிய தேச விடுதலைப் போராட்டத் தின் விளைவாக சோசலிச நாடாக மலர்ந்ததை உலக மறியும். அதன் முப்பது மைல் தொலைவில் இருக்கும் அமெரிக்கா, சோசலிசம் என்ற சித்தாந்தத்துக்கு எதிராக ஒரு மிகப்பெரிய பொருளாதார யுத்தத்தை தொடுத்து வருகிறது.

ஏகாதிபத்தியத்தின் கொடிய முகம்

1962-இல் தொடங்கி இன்று வரை ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்து கியூபா நாட்டை  தனிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி வருகிறது அமெரிக்கா. 1960-களில் சோசலிசத்தின் கொடியை உயர்த்திய கியூபா, அமெரிக்காவின் நிறுவனங்களையும், நிலங்க ளையும், சொத்துக்களையும் தேசியமயமாக்கியபோது தொடங்கியது இந்தச் சண்டை. 1962-இல் கென்னடி தலைமையில் இருந்த அரசு, “எதிரிகளுடன் வியாபா ரம்” (Trade with Enemies Act) நடத்துவதற்கான தடை சட்டத்தை முன்னிறுத்தி, கியூபாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி மீது தடைவிதித்தது. அதன் பின்னர் தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக வர்த்தக தடை, நிதித்துறை பரிவர்த்தனைகளில் தடை, போக்குவரத்து மற்றும் பயணங்களுக்கு தடை என தொடங்கி, 1996-இல் ஹேம்ஸ் பர்ட்டன் ஆக்ட் என்ற சட்டத்தை உருவாக்கியது. இந்த சட்டத்தின் மூலம் அந்நிய நாட்டு கம்பெனிகள் எவரும் கியூபாவோடு எந்த வர்த்தகத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு வைத்துக் கொள்பவர்கள் மீது அமெரிக்கா தடை விதிக்கும் என்ற கொள்கையையும் உருவாக்கி, அதன் மூலம் இன்று வரை அவர்களு டைய பொருளாதாரத்தை அமெரிக்கா முடக்கி வைத்தி ருக்கிறது.

ஒபாமாவின் நம்பிக்கை,  டிரம்ப்பின் தாக்குதல்

2009-இல் இருந்து 8 ஆண்டு காலம் பாரக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது சில தடைகள் மறு பரிசீலனை செய்யப்பட்டன. சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இருந்தபோதும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கொள்கைகளில் தொடர்ச்சி என்ற முறை யில் 2017 முதல் - அதாவது முதல் டிரம்ப் ஆட்சி,  பின்னர் ஜோ பைடன் ஆட்சி, தற்போது மீண்டும் டிரம்ப் ஆட்சி - ஆகிய 9 ஆண்டுகளாக இந்தத் தடை மற்றும் பொருளாதாரத் தடைகள் தீவிரமாக் கப்பட்டிருக்கின்றன.

நெருக்கடியின் பின்னணி

இதன் மூலம் கியூபாவுக்கு கிடைக்க வேண்டிய எரிபொருள், மருந்துகள், உணவுப் பொருட்கள் ஆகி யவை கிடைப்பதில்லை. வெளிநாட்டு மூலதனம் இல்லாததன் காரணமாக பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு இருக்கிறது. இணைய தள வசதி உட்பட நவீன தொழில்நுட்பங்கள் அவர்களுக்கு மறுக்கப்படு கின்றன. குடிபெயர்ந்தவர்கள், வேலை தேடி நாட்டை விட்டு வெளியே செல்வது போன்ற பல்வேறு காரணங்க ளால், கியூபாவின் தேசிய வளர்ச்சி குறைந்து போயி ருக்கிறது. எனவே சமீப காலமாக எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பொருள் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரண மாக மக்கள் அதிருப்தியை சந்திக்க நேரிட்டுள்ளது. ஆனால், அதை அமெரிக்கா பெரிதுபடுத்தி கியூபா வில் சோசலிசத்துக்கு எதிராக கலவரங்கள் நடக்கின் றன என்று உலகளாவிய அளவில் கியூபாவுக்கு எதிராக, சோசலிசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

ஏகாதிபத்தியத்தின் இலக்கு -  ஏன் கியூபா?

உண்மையிலேயே நடப்பது என்ன? அமெரிக்கா ஜான் கென்னடி தலைமையில் இருந்தபோது, கியூபா, சர்வாதிகாரி பாடிஸ்டாவை தோற்கடித்தபோது அமெரிக்காவோடு நல்லுறவு இருந்தது. ஆனால் 1962-இல் அது சோசலிச நாடு என்று அறிவித்த பின்னர், அது சோவியத் ரஷ்யாவோடு இணைந்து தன்னு டைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட பின், அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதலை கியூபா மீது தொடுக்கத் தொடங்கியது. 1823-இல் தொடங்கிய மன்றோ தத்துவம் முதல் மெக்கார்த்தியிசம் வரை, ஏகாதிபத்தியம் சோச லிசத்துக்கு எதிரான ஒரு தத்துவார்த்த போராட் டத்தை நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தின் தாக்கு தல் கூர்முனை அனைத்தும் கியூபாவுக்கு எதிராக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் அன்று சோச லிச சோவியத் ரஷ்யா மீது தாக்குதல் தொடுக்க முடிய வில்லை; மக்கள் சீனத்தின் மீது தாக்குதல் தொடுக்க முடியவில்லை; வியட்நாம் மீது போர் தொடுத்து தன் கையை உலகளாவிய அளவில் அவமானப்பட்டு சுட்டுக் கொண்டார்கள் என்பது வரலாறு. வடகொரியா அவர்களுக்கு இன்றும் சிம்ம சொப்பனமாக இருக்கிறது. எனவே, உலகளாவிய முறையில் சோசலிச எதிர்ப்பை அவர்கள் கியூபாவுக்கு எதிராக கூர்முனைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த தாக்குதலை தாக்குப்பிடித்து கியூபா தனது நாட்டின் சொந்த பலத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது. பல நெருக்கடிகளை சந்தித்தாலும் கியூப மக்களின் சோசலிசத்தின் மீதான உறுதி எள்ளளவும் குறையவில்லை.

சோசலிசத்தின் சாதனைகள்

கியூபாவில் இன்றும் அனைவருக்கும் வீடு உள்ளது. அனைவருக்கும் கல்வி கிடைக்கிறது. ஒரு பைசா  கூட செலவழிக்காமல் அனைவருக்கும் பொது மருத்துவ வசதி கிடைக்கிறது. அந்த நாட்டின் மருத்து வர்கள் தன்னலமற்ற தியாக உணர்வோடு உலகம் முழுவதும் சேவை செய்து வருகிறார்கள்.  சோசலிச கியூபாவின் மருத்துவர்கள் கோவிட் காலத்தில் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பணி புரிந்ததை உலகமே பாராட்டியதை நாம் பார்த்தோம்.

உலக சமூகத்தின் ஆதரவு

இந்த தத்துவார்த்த தனிமைப்படுத்தும் போராட் டத்தில் கியூபா வெற்றி பெறும் வரை சர்வதேச சமூகம் அவர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேண்டிய  கடமை இருக்கிறது. 1992-இல் தொடங்கி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இதுவரை 2020 தவிர (கோவிட் பெருந் தொற்று காரணமாக) அனைத்து ஆண்டுகளிலும் கியூபாவின் மீதான தடையை கண்டித்து, தடையை நீக்க கோரிய 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இந்த தீர்மானத்தை எதிர்த்து இரண்டு நாடுகள் - ஒன்று அமெரிக்கா, இன்னொன்று இஸ்ரேல் - ஆகிய இருவரும் சளைக்காமல் 32 முறையும் எதிர்த்து வாக்களித்து தனிமைப்பட்டு இருக்கிறார்கள். சர்வதேச சமூகம் ஒரு அரசியல் தத்துவத்துக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஆயுதமாக பயன் படுத்துவதை கண்டித்து நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்களுடைய தொடர்ச்சி இன்றும் நீடித்துக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம்.

நமது கடமை

இன்றும் கியூபா தங்களுடைய சொந்தக்காலில் நிற்க விரும்புகிறது. நாம் அளிக்கிற நிதியும், உதவி யும் அவர்களின் தேவையின் ஒரு சிறு பகுதி யைத்தான் ஈடு செய்யும். இருந்தபோதும் அந்த  சகோதர ஆதரவை நாங்கள் தெரிவிக்க தயாராக இருக்கிறோம்; தோழமை உணர்வோடு உங்களோடு இருக்கிறோம் என்ற உண்மையை உலகிற்கு தெரிவிக்க வேண்டி இருக்கிறது. இரண்டாவதாக, உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த மாபெரும் யுத்தத்தில், இந்த ஆதரவு நடவடிக்கை மூலம் சோசலிச தத்துவத்தை உயர்த்தி பிடிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

பிடலின் நூற்றாண்டு விழா

அந்த முறையில் வருகிற ஆகஸ்ட் மாதம் கியூபா வுக்கு ஒரு மிகப்பெரிய நிதியைத் திரட்டி கொடுக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள ஜனநாயக சக்திகளும், இடதுசாரிகளும், அமைதியையும் சமா தானத்தை விரும்புபவர்களும் முடிவு எடுத்து உள்ளார்கள். 2025 ஆகஸ்ட் 13 அன்று தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்களுடைய நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அதற்குள் இந்த நிதி வசூலை நிறைவு செய்து இந்த நிதிகளை கியூபாவுக்கு கொண்டு சேர்ப்பது சர்வதேச சமூகத்தின் தலையாய கடமை. அதை நாம் வெற்றி கரமாக செய்வோம்.

தாராளமாக  நிதி வழங்குவீர்!  

கியூப மக்களுக்கு இந்திய மக்களின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் தாராளமாக நிதி வழங்குமாறு, கியூப ஆதரவு தேசியக் குழுவின் தமிழக அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி அவர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற கியூப ஆதரவு தேசியக்குழுவின் தமிழக அமைப்பை உருவாக்கும் கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கணிசமான நிதி வழங்கி, தமிழ கத்தில் நிதி திரட்டும் இயக்கத்தை துவக்கி வைத்தனர்.  நிதியை கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அமைப்பின் தலை வர்களில் ஒருவரான ஐ.ஆறுமுக நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார்:  NATIONAL COMMITTEE FOR SOLIDARITY WITH CUBA  கணக்கு எண்: 07621000431741  IFSC குறியீடு: PSIB0000762  MICR குறியீடு: 110023052  வங்கி: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாய் வீர் சிங் சாகித்ய சதன் கிளை  புதுதில்லி 110001 நெ ப்ட் அல்லது ஆர்டிஜிஎஸ் மூலமாக பணம் ட்ரான்ஸ்பர் ஜி பே மூலம் அனுப்பலாம் அனுப்பு கின்ற தோழர்கள்  அவர்களுடைய பெயர்/தொலைபேசி எண்/அனுப்பிய தொகை ஆகிய வற்றை  தமிழக அமைப்பின் இமெயில்  3apcsc @gmail.com மற்றும்  8072299431 என்ற மொபைல் எண்ணுக்கு விபரம் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.