articles

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களும் கொடூரமும் அதிகரிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களும் கொடூரமும் அதிகரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது மாநாடு, பாஜக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவது குறித்து மிகுந்த கவலை யை வெளிப்படுத்துகிறது. தேசிய குற்ற ஆவ ணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) ‘இந்தியாவில் குற்றம்’ அறிக்கைகளின் தரவுகளின்படி, பெண் களுக்கு எதிரான புகாரளிக்கப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 2014ல் 3.37 லட்சத்தில் இருந்து 2022ல் 4.45 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும். குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன், அதன் கொடூரமும் அதிகரித்துள்ளது என்பது வருந்தத்தக்கது. தலித் பெண்கள் மற்றும்  குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு இந்த காலகட்டத்தில் தலித் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்துள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். என்சிஆர்பியின் புள்ளிவிவரங்களின்படி, 2015 முதல் 2020 வரை தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் 45 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2020 (7,397 சம்ப வங்கள்) மற்றும் 2021 (15,855 சம்பவங்கள்) ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் இரட்டிப்பாகி நிலைமை மோசமடைந்தது. மிகவும் கவலையளிக்கும் விதமாக, தலித் சிறுமிகளுக்கு எதிரான பாலி யல் வன்புணர்வு சம்பவங்கள் 2020 (1,055 சம்பவங்கள்) ஐ விட 2021ல் (1,285 சம்பவங்கள்) 21.8% அதிகரித்துள்ளது. 2021ல் என்சிஆர்பி தெரிவித்ததன்படி, ஒவ்வொரு நாளும் 10க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படுகை யில், 24 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்ட னைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் வாரியாக குற்ற விகிதம் 2021 என்சிஆர்பி அறிக்கையின்படி, பாஜக ஆளும் மாநிலங்கள் மிக மோசமான குற்ற வாளிகளாக இருந்தன: உத்தரப் பிரதேசம் (1,554 வழக்குகள்) அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்தது, அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (1,274 வழக்குகள்), மத்தி யப் பிரதேசம் (1,222 வழக்குகள்), மகாராஷ்டிரா (862 வழக்குகள்), பின்னர் ஹரியானா (543 வழக்குகள்). கடத்தல் மற்றும் பாலின தேர்வு கருக்கலைப்புகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல் மற்றும் பாலின தேர்வு கருக்கலைப்பு களும் அடங்கும். பிசிபிஎன்டிடி சட்டம் நிறைவேற் றப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகும், அர சாங்கத்தின் எதிர்மறையான பிரச்சாரத்தையும் மீறி, 2024ல் இந்திய பாலின விகிதம் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 943 பெண்கள் என்று  உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்க ணக்கான பெண்களுக்கு அடிப்படை உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுவதைக் குறிக்கிறது. மனித கடத்தல் அதிகரிப்பு இந்தியாவில் பெண்கள் கடத்தல் அதிக ரித்துள்ளது. 2016ல் இந்தியாவில் சுமார் 20,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் மனித கடத்தலுக்கு பலியாகியுள்ளனர், இது முந்தைய ஆண்டை விட சுமார் 25 சதவீதம் அதிகரிப்பு ஆகும். (இந்திய அரசின் தரவு). 2025 ஜனவரி யில், இந்தியாவின் உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்த விபரத்தின் படி, 2018 மற்றும் 2022க்கு இடையில் 10,659 கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன, இந்த வழக்குகளில் சந்தேகத்திற்குரியவர்களில் சுமார் பத்தில் ஒரு பகுதியினர் மட்டுமே தண்டிக்கப் பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களின் எண்ணிக் கையில் உள்ள முரண்பாடு வழக்குகளின் தவறான பதிவு காரணமாகும். ஐ.நா அறிக்கை யின்படி, உலகில் கடத்தப்பட்ட ஆறு பெண்க ளில் ஒருவர் இந்தியப் பெண். பிரச்சனையின் தீவிரமும் அரசாங்கத்தின் முழுமையான அணு குமுறை போதாமையும் அதிர்ச்சியளிக்கிறது. பணியிட வன்முறைகள் பணியிடங்களில் ‘வேலை செய்யும் பெண்க ளுக்கு’ எதிரான குற்றங்களும் கொடூரங்களும் அதே அளவு கவலைக்குரியவை. இத்தகைய பல சம்பவங்களில், சமீபத்திய ஆர் ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ரிஷிகேஷில் உள்ள ஒரு இல்லத்தில் அங்கிதா வழக்கு ஆகியவை வெளிப்படையான சம்பவங்க ளாகும். பொழுதுபோக்குத் துறையிலும் இத்த கைய வழக்குகள் பதிவாகியுள்ளன; இது ஹேமா குழு அறிக்கையில் காணப்படுகிறது. மனுவாத கொள்கைகளின் பங்களிப்பு மனுவாத வலதுசாரி கருத்தியலுக்கு உறுதி யளிக்கும் ஓர் அரசாங்கத்தின் ஆட்சியை, பெண்களுக்கு எதிரான கொடூரங்களில் இந்த தீவிர நிலைமைக்கு நிச்சயமாக பங்களித் துள்ளது. பாஜக உள்ளிட்ட சங் பரிவார், ஆணா திக்க கருத்துக்களையும் கொள்கைகளையும் ஊக்குவிக்கிறது; எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்கள், பாலியல் வன்புணர்வு கயவர்கள் மற்றும் கொலையாளிகள் உள்ளிட் டோர் சங்பரிவாரத்தினரின் தொடர்ச்சியான ஆத ரவையும் பாதுகாப்பையும் பெறுவது தற்செய லானது அல்ல. இது பில்கிஸ் பானு வழக்கு, ஹாத்ரஸ் பாலியல் வன்புணர்வு வழக்கு, பிரிஜ்  பூஷண் சரண் சிங் வழக்கு, பிஎச்யு கும்பல் பாலியல் வன்புணர்வு வழக்கு, ராம் ரஹீம் வழக்கு மற்றும் மிகவும் கொடூரமான பிரஜ்வால் ரேவண்ணா வழக்கு போன்றவற்றில் மீண்டும் மீண்டும் காணப்பட்டுள்ளது. இன்னும் கவலைக் குரிய விஷயம் என்னவென்றால், திருமணம் என்ற -  புனிதமாக்கப்பட்ட நிறுவனத்தை பாது காக்க அவசியமானதாக அவர்களால் ஆத ரிக்கப்படும் திருமண வன்புணர்வு உட்பட பல்வேறு வகையான குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு ஆகும். பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு அமைப்புகளின் சிதைவு மத்திய மற்றும் சில மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட வர்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்காக கிடைக்கக்கூடிய சட்ட மற்றும் நிர்வாக உள் கட்டமைப்புகளை வேண்டுமென்றே குறை மதிப்பு செய்கின்றன அல்லது திரும்பப் பெறு கின்றன. இவ்வாறு, நீதி பெறும் அவர்களின் உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. மாநாட்டின் கோரிக்கைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது மாநாடு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது: 1.    பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குக ளில் திறம்பட வழக்குத் தொடராதது மற்றும் கடமை தவறியதற்காக குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். 2.    பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்ட உதவி வழங்குவதை உறுதி செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்பு மற்றும் பிற தேவைகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும்; மேலும் அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவ முன்வர வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரைவு விதிமுறைகள் 2025க்கு எதிர்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது மாநாடு, இந்திய கல்வி வளாகங்களை மையப்படுத்தவும் கார்ப்பரேட்மயமாக்கவும் மற்றொரு முயற்சியாக உள்ள ‘வரைவு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகள் 2025’ஐ கடுமையாக எதிர்க்கிறது. ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் திருத்தப்பட்ட விதிகள் துணைவேந்தர்களை தேர்வு செய்வதில் மாநில ஆளுநர்களுக்கு அதிக அதிகா ரத்தை வழங்குகின்றன. முதன்முறையாக, தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பொதுத்துறை முன்னோடிக ளை இந்த பதவிகளுக்கு கருத்தில் கொள்ள புதிய வரைவு விதிமுறைகள் அனுமதிக்கின்றன. இது கல்வியா ளர்களை மட்டுமே நியமிக்கும் நீண்டகால நடைமுறையிலிருந்து விலகி, கல்வித் துறையில் கார்ப்பரேட் செல்வாக்கை அறிமுகப்படுத்துகிறது. ஆசிரியர்களின் வேலைப்பளு அதிகரிப்பு மேலும், வரைவு விதிமுறைகள் ஆசிரியர்களுக்கான ஒரு வாரத்திற்கான அதிகபட்ச நேரடி கற்பித்தல் மணி நேரங்களை குறிப்பிடவில்லை, இது வேலைப்பளுவை அதிகரிக்க ஒரு ஆபத்தான சூழ்ச்சியைக் குறிக்கிறது. வரைவு விதிமுறைகள், கற்பித்தல் பதவிகளில் இடஒதுக்கீடு குறித்தும் மௌனம் சாதிக்கின்றன. ஆராய்ச்சியில் இருந்து அரசின் வெளியேற்றம் ஆராய்ச்சியில் இருந்து தனது சொந்த பொறுப்பை விலக்கி, கல்வித்துறையில் தனியார் துறையினரின் நுழைவுக்கு வழிவகுப்பதன் மூலம், அரசாங்கம் கல்வி அமைப்பை சந்தை சார்ந்த, கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் உள்ள மாதிரிக்கு தள்ளுகிறது. பாகுபாட்டை ஒழிக்க தவறும் விதிமுறைகள் வரைவு யுஜிசி விதிமுறைகள் 2025, உயர் கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டு பிரச்சினையை கையா ளத் தவறுகின்றனர். மாறாக, ஏற்கனவே உள்ள வழிமுறைகளை, குறிப்பாக உயர் கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட வழிமுறைகளை நீர்த்துப்போகச் செய்து பலவீனப்படுத்துகின்றன. சாதி பாகுபாடு குறித்த மௌனம் இந்த விதிமுறைகள் பல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்து மௌனம் சாதிக்கின்றன. கூடுதலாக, சில விதிகள் புகார் அளிப்பவர்களையே பாதிக்கும் வழிகளை உருவாக்குகின்றன. மத்திய அரசின் கைகளில் அதிகாரக் குவிப்பு இந்த விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலிலிருந்து நிறுவனங்களை நீக்க யுஜிசிக்கு அதிகாரம் அளிக்கின்றன. விதிகளை பின்பற்றாததற்காக நிதி வழங்குவதைத் தடைசெய்யவும், விஷயம் அடிப்படையில் கூடுதல் தண்டனை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரம் அளிக்கின்றன. இது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தை மேலும் குவிக்கும், இது மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களை கட்டுப்படுத்த இட்டுச்  சல்லும். மாநாட்டின் கோரிக்கைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது மாநாடு ஒன்றிய அரசுக்கு பின்வரும் கோரிக்கைகளை வைக்கிறது: 1.வளாகங்களில் சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராட ரோஹித் வேமுலா சட்டத்தை இயற்ற வேண்டும். 2.அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குழுவை (GSCASH) அமல்படுத்த வேண்டும். 3.வளாக ஜனநாயகத்தை உறுதிசெய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும். 4.பல்கலைக்கழகங்களில் சிறுபான்மையினர் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவுகளை வலுப்படுத்த வேண்டும். யுஜிசியால் வெளியிடப்பட்ட தற்போதைய வரைவு விதிமுறைகள், அவற்றின் குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்கு சேவை செய்யவிதில்லை. மாறாக, அவை பல்கலைக்கழகங்களை அழுத்துவதற்கான கருவியாக செயல்படுகின்றன. கட்சி மாநாடு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் தன்னாட்சியை குறைக்கும் இத்தகைய முயற்சிகளை யுஜிசி தவிர்க்க வேண்டும் என்றும், அரசியலமைப்பு ஏற்பாட்டின் உணர்வை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

பொது மின்சாரத் துறையின் மீதான  தனியார்மயமாக்கல் தாக்குதல்களை எதிர்ப்போம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது மாநாடு, அனை த்து பொது மின்சார நிறுவனங்களையும் தனியார்மயமாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. அவர்கள் அதிக லாபகரமான, திறமையான மற்றும் குறைந்த கட்டண விகிதம் கொண்ட சண்டிகர் மின்சார நிறுவனத்தை முறைகேடான முறையில் பலவந்தமாக தனியார்மயமாக்கினர். இதேபோன்ற தனி யார்மயமாக்கல் தாக்குதல்கள் உத்தரப் பிரதேச மின்சார நிறுவ னங்களின் மீதும் நடத்தப்பட்டுள்ளன, அங்கு ஊழியர்கள் கடந்த 130 நாட்களாக போராடி வருகின்றனர். ஒன்றிய அரசின் அவசர நடவடிக்கைகள் மாநில மின் விநியோக நிறுவனங்களை (டிஸ்காம்) தனியார்மய மாக்க மத்திய அரசு உண்மையிலேயே அவசரப்படுகிறது. மின்சாரத் துறையில் தனியார்மயமாக்கல் செயல்முறையை உருவாக்க, பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் 2025 பிப்ரவரி 20 அன்று ஒரு தனித்துவமான பிராந்திய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் மின்சார திருத்த மசோதாவின் புதிய வரைவை கொண்டு வருகிறது. ஆனால் இந்த தாக்குதல்கள் மத்திய அரசின் பல்வகை தனியார்மயமாக்கல் முயற்சிகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. தனியார் கைகளில் மின் உற்பத்தி ஏற்கனவே, இந்தியாவின் மின் உற்பத்தி திறனில் 52 சதவீதம் தனியார் கைகளில் உள்ளது. கூடுதலாக, உள்நாட்டு விலையை விட மூன்று மடங்கு அதிக விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஏற்பாடுகள் கட்டாயம், அரசுக்கு சொந்தமான நிறுவ னங்களை ஆபத்தில் தள்ளுகிறது. இன்று, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம், தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றுக்காக மோடி அரசு வரம்பற்ற நிலப்பரப்புகளை வாரி வழங்குகிறது, ஒன்றன்பின் ஒன்றாக ஊக்கத்தொகை திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை எளிதாக்க லித்தியம், கோபால்ட் போன்ற முக்கிய கனிமவளங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறது. தேசிய பணமாக்கல் திட்டத்தின் விளைவுகள் தேசிய பணமாக்கல் திட்டத்தின் (நேஷனல் மானிட்டைசேஷன் பைப்லைன் ஸ்கீம்) கீழ், தேசிய அனல் மின் கழகம் (NTPC) மற்றும் தேசிய நீர்மின் கழகம் (NHPC)  ஆகியவற்றால் தொடங்கப்பட்ட அரசின் புதுப்பிக்கத்தக்க திட்டங்கள் கூட தனியார் நிறுவனங்களிடம் ஒப்ப டைக்கப்படும். மேலும் பவர்கிரிட் நெட்வொர்க்கில் ஆறில் ஒரு பங்கு தனியார்மயமாக்கலுக்கு திட்டமிடப்படும். இது துணை மின்நிலைய மேலாண்மையை வெளி ஒப்பந்தத்திற்கு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து வருகிறது. மின்சார திருத்த மசோதா 2022 மற்றும் அதன் தாக்கங்கள் 2022 மின்சார திருத்த மசோதாவை நிறைவேற்றி அமல்படுத்த முடியாமல் போனதால், உற்பத்தியாளர்கள் மற்றும் மாநில விநியோக நிறுவனங்கள் மெய்நிகர் தனியார் சந்தை கட்டமைப்பிடம் சரணடைய மின் அமைச்சகம் ஒரு வழிமுறையை உருவாக்கியுள்ளது. இந்த மெய்நிகர் சந்தையில், மின் கட்டணங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை யாக இருக்கும்; தனியார் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும். இந்த  மெய்நிகர் சந்தையில், கட்டணம் அடிக்கடி ரூ.20/யூனிட்டை தொடுகிறது. டோடெக்ஸ் மாடல் - ஸ்மார்ட் மீட்டரிங் திட்டத்தின் ஆபத்துகள் இது பேரழிவு விளைவிக்கும் டோடெக்ஸ் (TOTEX) மாடல் முன் கட்டண ஸ்மார்ட் மீட்டரிங் திட்டத்துடன் இணைந்து பார்க்கப்பட வேண்டும். இறுதியில் ஒவ்வொரு நுகர்வோரும் தங்கள் மின் கட்டணங்களுக்காக சந்தை சக்திகளை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு தனிப் பட்ட நுகர்வோரும் 6-7 ஆண்டுகள் அதிகபட்ச ஆயுட்காலம் கொண்ட ஒவ்வொரு முன்கட்டண ஸ்மார்ட் மீட்டருக்கும் ரூ.8,000-12,000 செலுத்த வேண்டியிருக்கும். ஸ்மார்ட் மீட்டர் நிறுவப்பட்ட உடனேயே, அனைத்து நுகர்வோரும் நாள் நேர (டைம் ஆஃப் டே - ToD) கட்டண முறையின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். மாலை நேர உச்ச தேவை நேரத்தில் மின்சாரத்தின் விலை மிக அதிகமாக இருக்கும். குறுக்கு மானியம் நீக்கம் - விவசாயத்திற்கு பெரும் அடி இதனுடன், இந்தியாவில் நீண்ட போராட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட குறுக்கு மானியத்தை (அத்தியாவசிய சேவைகளுக்காக அரசு அளிக் கும் மானியம்) அரசாங்கம் நீக்க முயற்சிக்கிறது. குறுக்கு மானியம் இல்லாமல், பாசன செலவுகள் தாங்க முடியாத அளவுக்கு உயரும். நேரடி பணப் பரிமாற்றத்திற்கு (டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்ஃபர்) செல்வது என்ற திடீர் மாற்றம், உண்மையான விவசாயிகள், நிலமற்றவர்கள் மற்றும் குத்தகைதாரர்கள்/பங்குதாரர்களை பெரும் தொகையை இழக்க வைக்கும். இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிச்சயமாக, இந்தியாவின் பொது மின்சார விநியோகத் துறையின் மீதான இந்த இறுதி தாக்குதல் பெரும் அளவிலான மின்சாரம் இல்லாத நிலைக்கு இட்டுச் செல்லும். மேலும் நமது உணவு பாதுகாப்பு ஆபத்தில் தள்ளப்படும். இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதலாகவும் உள்ளது. மக்களின் எதிர்ப்புக்கு அழைப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது மாநாடு, இந்த தனியார்மயமாக்கல் தாக்குதல்களுக்கு எதிராக போராடும் மின்சார ஊழியர்களுடன் இணைந்து எதிர்ப்பை உருவாக்க நமது நாட்டு மக்க ளுக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய இந்தியாவில் தனியார்மய மாக்கலுக்கு எதிரான போராட்டம், தனியார் முற்றுரிமைக்கு எதிரான போ ராட்டத்தின் மையமாக உள்ளது என்பதை கட்சி மீண்டும் வலியுறுத்து கிறது. இந்த தனியார்மயமாக்கல் முயற்சிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த மற்றும் ஒற்றுமையான முறையில் செயல்படுவது நமது கடமையாகும்.