நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!
விசைத்தறித் தொழிலாளர் சம்மேளனக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல், ஏப்.27- மே 20 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத் தை வெற்றி பெறச் செய்வோம் என சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சம்மேளனக்குழு (சிஐடியு) கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விசைத்தறித் தொழி லாளர் சம்மேளனத்தின், மாநிலக்குழு கூட்டம் ஞாயிறன்று, குமார பாளையத்தில் சம்மேளன மாநிலத் தலைவர் முத்து சாமி தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம்.அசோகன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து மக்கள் விரோத கொள்கை களை தீவிரமாக அமலாக்கி வருகிறது. தாங்க முடியாத விலை உயர்வால் உழைக்கும் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகின்றனர். 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுருக்கி, தொழிலாளர் உரிமைகளை பறித்துள்ளது. இதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், மே 20 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நடத்த போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வேலை நிறுத்த மாவட்ட கருத்தரங்கம், மே மாதம் தெருமுனை கூட்டம், ஆலை வாயிற் கூட்டம், பிரச்சார இயக்கம் போன்றவை நடைபெற உள்ளது. வேலைநிறுத்த மறியல் போராட்டத் தில் தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறித் தொழிலாளர்களை முழுமையாக பங்கேற்க செய்வது, வீடு வீடாக சென்று வேலைநிறுத்தம் குறித்த நோட்டீஸ் கொடுத்து, வேலை நிறுத்தத்தை வெற்றியடைய செய்வது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.