ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவான போராட்டக் களத்தில் நிற்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 140 கோடிக்கும் அதிகம் என்றால் அதில் 28 கோடி பட்டியல் சாதி, பழங்குடி மக்கள் இருப்பார்கள். அதுபோலவே தமிழ்நாட்டில் 8 கோடி மக்கள் தொகையில் 20% பேர் தலித் மக்கள். ஆனால், சுதந்திர இந்தியாவின் குடிமக்கள் அனை வரும் சமமாக நடத்தப்படுகிறோமா என்றால் இல்லை என்பது தான் உண்மை நிலை. அப்படி ஒடுக்கப்படுகிற பட்டியலின மக்களுக்கு ஆதரவான போராட்டத்தில் களத்தில் நிற்கும் முன்னணி அமைப்பு தான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. செங்கொடி மண்ணில் இது முன்னணியின் 5ஆவது மாநில மாநாடு. இது நடைபெறும் இடம் சாதிய ஒடுக்குமுறைப் போராட்டங்களை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியின் தலைமையில் களம் கண்ட மண். இங்கு நமது அமைப்பின் மாநாடு நடைபெறுவது என்பது மிகப்பொருத்தமான ஒன்றாகும். அதிகாரம் மற்றும் உரிமை மறுப்பு என்பது காலம் காலமாக ஒடுக்கப்படும் மக்களுக்கு நடக்கும் அநீதி ஆகும். நான் கேரள தேவசம்போடு அமைச்சராக செயல்பட்டவன். எனது அனுப வத்தில் சொல்கிறேன், வேதபாடங்களும் கல்வி அறிவும் சாதியக் கட்டமைப்பில் மேல் கட்ட மைப்பில் இருப்பவருக்கானது என பொது சமூ கத்தின் ஆழ்மனதில் ஊறிப்போய் இருக்கும் நிலை யில் தான், பட்டியல் சாதியினர் ஆகம வேதம் படித்து கோவில் கருவறைக்குள் செல்லலாம் என்ற அரசாணையை கேரள அரசும் தமிழ்நாடு அரசும் பிறப்பித்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது ஒரு வரலாற்று நிகழ்வு. சாதியத் தீண்டாமை யிலிருந்து தலித் மக்கள் விடுதலை பெறுவ தற்கான ஒரு முன்னேற்றப்படி. காக்கையும் கொக்கும் நமக்கெல்லாம் தெரியும், திரைமறைவில் குருவை பார்த்து வில்வித்தையை கற்ற “ஏகலை வன்” பிறப்பால் சத்ரியன் அல்லாததால் அவனின் “கட்டை விரலை” கேட்ட துரோணாச்சாரியர்களை போற்றும் சாதிய அமைப்புகள் கெட்டிப்படுத்தப் பட்ட நாடு தான் இந்திய நாடு. இந்திய சாதிய அமைப்பில் நாம் சமத்துவத்தை நிலைநாட்ட கல்வி உரிமை, அரசியல் அதிகாரம் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றிற்கான போ ராட்டத்தை முன்னெப்போதும் விட பாசிச மனோ பாவம் கொண்ட பாஜக ஆளும் காலத்தில் இன்னும் வீரியத்துடன் நடத்திட வேண்டியுள்ளது. அதற்கு சாதி, மத, நிறவெறி பாகுபாடுகளை நாம் அடை யாளம் கண்டு ஒவ்வொன்றையும் முற்றிலுமாக களைய வேண்டும். எங்கள் ஊரில் விளையாட்டாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “காக்கை குளித்தால் கொக்கா குமா என?”. இது ஒரு நிறப்பாகுபாட்டுடன் கூடிய பழமொழி. நான் அவர்களிடம் கேட்பேன் ஏன் “கொக்கு குளித்தால் காக்கை ஆவதில்லை என?!” அதாவது, “கருப்பு” என்பது தீண்டாமையின் நிற மாக வெறுப்பின் நிறமாக, உருவகப்படுத்தப் பட்டால் நாம் அதனை மாற்றி “கருப்பு” தீண்டாமை நிறமல்ல, அது உழைக்கும் வர்க்க உரிமையின் நிறம் என கருத்தாக்கம் செய்ய வேண்டும். இப்படி யாக நாம் பொதுச் சமூக மனநிலையில் இயல்பாக சாதிய பாகுபாட்டு கருத்துக்கள் உள்ள நிலையில் அதனை மீள்ஆய்வுக்கு உட்படுத்தி அறிவியல்பூர்வ மாக சமத்துவ பார்வையை வலுப்படுத்தவேண்டும். அதிகரிக்கும் தாக்குதல்கள் இந்திய நாட்டின் தேசிய குற்ற ஆவண காப்ப கத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின் படி, இந்துத்துவ பாசிச பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரித்துள்ளன. அவற்றுள் கொ டூரமான கொலைகள், பாலியல் வன்கொடுமை கள், கும்பல் கொலைகள், வீடுகள் எரிப்பு, வாழ்வா தாரங்களை அழித்தல் போன்றவைகள் அடங்கும். அதேபோல, இன்னொரு புள்ளிவிவரத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் (2024) 105ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மொத்தம் 127 நாடுகளில் மதிப்பீடு செய்யப்பட்ட இந்த குறியீட்டில் இந்தியா தொடர்ந்து பின்தங்கிக் கொண்டிருக்கிறது. நாம் கவனிக்கவேண்டிய முக்கிய புள்ளி வறுமை, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றில் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பட்டி யலின மற்றும் பழங்குடியின மக்கள் தான். ஆக, நேரடியான வன்கொடுமைகளோடு சேர்த்து இப்படியான பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீதான மறைமுக தாக்குதல்களையும் நாம் வெளிக்கொண்டு வர வேண்டும். அவற்றை பற்றியும் அதிகம் பேச வேண்டும். அண்ணல் அம்பேத்கர் போன்ற ஆளுமைகள் இடஒதுக்கீடு கிடைக்க, வலுப்பெற நடத்திய போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வா தார மேம்பாட்டிற்காக நடந்தேறியவை. ஆனால், ஆளும் பாசிச முதலாளித்துவ பாஜக அரசு 2014, 2019, 2024 என மூன்று முறை ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் வாயி லாக படிப்படியாக உழைக்கும் மக்களின் தொழில் மற்றும் தொழிலாளர் உரிமைகளை வெட்டி பெரும்பாலான துறைகளை தனியார்மயமாக்கி, ஒப்பந்த முறையில் வேலைவாய்ப்புகளைத் திணித்து, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வை அடித்தட்டு அத்தக்கூலிகளாக மட்டுமே மாற்றியுள்ளனர். இது தான் அவர்களின் ஆகச்சிறந்த சாதனை. ஆர்.எஸ்.எஸ் திட்டம் 1925 ஆம் ஆண்டு துவங்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு 2025 ஆம் ஆண்டு. மத வாத சர்வாதிகார கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்திய நாட்டை சூறையாடிக்கொண்டி ருக்கிறது இந்தக் கூட்டம். “ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு கட்சி” என்கிற ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவை தமிழ்நாட்டிலும் நிறுவ தீவிர முயற்சியில் அவர்கள் உள்ளனர். ஆனாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டில் வெல்ல முடியாமல் இருப்பது நல்ல அறிகுறி. அதனை நாம் பாதுகாக்க வேண்டும். சமீபத்தில் முதலமைச்சர்களின் பதவிகளை பறிக்கும் வகையில் ஒரு மசோதாவை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. ஒரு மாத கால சிறை வாசத்தை அனுபவிக்கும் முதல்வர்கள் இனி பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். இதன் மூலமாக தன்னுடைய தேசிய அமைப்புகளை வைத்து பொய் வழக்குகள் மூலமாக இதனை சாத்தியப்படுத்த லாம் என அவர்கள் நினைக்கிறார்கள். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாக ஏற்கனவே நெருக்கடி கொடுக்கும் பாஜக அரசு, இனி தனக்கு வேண்டாத முதல்வர்களையும் நீக்கிவிட திட்டமிட்டுள்ளனர். இதை எல்லாம் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். தமிழ்நாடும் கேரளாவும் ஏனெனில், அண்மையில் கேரள அரசு தமிழ்நாடு முதல்வரை அழைத்து நடத்திய வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு கொண்டாட் டத்தில் தமிழ்நாடு முதல்வர் கலந்து கொண்டு பெரியார் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டங்க ளைப் பற்றியும் சமூகநீதிப் பார்வையையும் விளக்கிப் பேசினார். இன்றும் அத்தகைய ஆலய நுழைவுப் போராட்டங்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சலிக்காமல் ஓயாமல் நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும், பெரியாரின் சமூக நீதிப் பார்வையானது சாதி ஒழிப்போடு தொடர்பு டையது. அதன் வேர் தமிழ்நாடு. சனாதன பாஜக அரசிற்கு சமூகநீதி, சமத்துவக் கொள்கை அடிப்ப டையில் பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் இணைந்து செயல்படுவது எரிச் சலை ஏற்படுத்துகிறது. இப்படியான பதவி பறிப்பு மசோதாக்களை அவர்கள் கொண்டு வருவதற்கு இதுவெல்லாம் காரணம். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1836இல் அய்யா வைகுண்ட சாமிகளின் மத நல்லிணக்க இயக்கம் தொடங்கியது. அவர்களின் முக்கிய முழக்கமானது, “ஒரு உலகம், ஒரு தெய்வம், ஒரு மனிதன்” என்பது. கிட்டத்தட்ட கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவான ஒரு சமத்துவ முழக்கமது. இப்படியான வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு. “காலனி” என்னும் சொல்லானது பிரிட்டிஷ் அரசு களால் உருவாக்கப்பட்ட ஒரு சொல். ஆனால், அது அடிமைத்தனத்தின் குறியீடாக மாறியதை நாம் அறிவோம். அதன் நீட்சியாகவே இன்றும் பட்டியலின மக்களை “காலனி மக்கள்” என்றும் அவர்கள் வாழும் பகுதி “காலனி பகுதி” என்றும் குறிக்கப்பட்டது. அதனை தகர்த்த வரலாறு கேரள மண்ணிற்கும் தற்போது தமிழ்நாட்டு முதல்வரின் அறிவிப்பினால் தமிழக மண்ணிற்கும் உரித் தாகிறது. சமத்துவம் தேவை இறுதியாக, ஒரு கதையோடு நான் நிறைவு செய்ய விரும்புகிறேன். பொதுவாக பள்ளியில் வகுப்பறையில் இறுதி வரிசை இருக்கையில் அமரும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் அல்லது அவர்களை கல்வி அறிவில் பின் தங்கியவர்கள் என முன்தீர்மானத் தோடு அணுகுவார்கள். ஒருநாள் ஒரு வகுப்பறை யில் கணித ஆசிரியர், ஒருவர் 200 ரூபாய் 5 பேருக்கு கொடுத்தால் மொத்தம் எத்தனை ரூபாய் கொடுக்க வேண்டும்? என ஒரு கேள்வி கேட்கி றார். முதல் இருக்கையில் அமர்ந்திருக்கும் மாண வர் ஒருவர் 2000 ரூபாய் என பதிலளிக்கிறார், அவருக்கு அருகில் பின்புறமாக அமர்ந்திருக்கும் மாணவர் ஒருவர் 500 ரூபாய் என பதில் சொல்கி றார். இந்த பதில்களை மட்டும் கேட்ட ஆசிரியர் வகுப்பறையை விட்டு கிளம்புகையில், பின்வரி சையில் அமர்ந்து இருக்கும் ஒரு மாணவி அந்த ஆசிரியரை நிறுத்தி கேட்கிறார். நமது அரசியல மைப்பு சட்டம் நமக்கு சொல்லும் பாடம் என்ன? என. அதற்கு ஆசிரியர் சமத்துவம் அதாவது இந்திய அரசியலமைப்பு என்பது “சாதி, மத, பாலின, மொழி, வாழிடம் என எந்த அடிப்படையிலும் பாகுபாடு கூடாது மற்றும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்” என பதிலளித்தார். உடனே அந்த மாணவி அரசியலமைப்பு அப்படி யான ஒரு சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது எனில், “கடைசி இருக்கையில் இருக்கும் என்னி டம் கேள்வி கேட்கப்பட்டு எனது பதில் ஏன் பெறப்படவில்லை?” நான் ஏன் இந்த வகுப்பறை யில் சமத்துவமாக நடத்தப்படவில்லை? எனக் கேட்டார். அந்த மாணவியைப் போலவே, கடைக்கோடி விளிம்புநிலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் பட்டிய லின மற்றும் பழங்குடியின மக்களின் குரல் எப்போது கேட்கப்படுகிறதோ, எப்போது சமத்து வம் நிறுவப்படுகிறதோ அதுவரையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் களப்போராட்டம் ஓயாது. தமிழ்நாடு மண்ணில் சாதிய மதவாத சக்திகளை முறியடித்து நாம் ஓரணியில் திரண்டு முன்னேறு வோம்.