மக்கள் தொகை கணக்கெடுப்பு கால அட்டவணையை உடனே வெளியிடுக!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு நடை பெற்றபின் முதல் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் சனிக்கிழமையன்று புதுதில்லியில் நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கைவருமாறு: பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரின் மரணத்திற்கு அரசியல் தலைமைக்குழு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் உள்ள மக்களை அதற்கெதி ரான கண்டனத்திலும் துயரத்திலும் ஒன்றிணைத் துள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட கொலை யாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண் டும். இந்தத் தாக்குதல் பெரிய அளவிலான பாது காப்பு குறைபாட்டின் விளைவாகும். இது குறித்து விசா ரணை மேற்கொள்ளப்பட்டு, பொறுப்பு நிர்ணயிக்கப் பட வேண்டும். அப்போதுதான் இதன் மீதான தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீர் மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பும் கண்டனமும் தெரி வித்திருப்பதாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழு அடைப்புக்கு உள்ளானது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாத சக்திகளைத் தனிமைப்படுத்திட மக்கள் மத்தி யில் ஏற்பட்டுள்ள இந்த ஒற்றுமை உணர்வை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளின் வீடு களை இடிப்பது போன்ற, அப்பாவி குடும்பங்களையும் பாதிக்கும் மற்றும் மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படக்கூடாது. சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரி களுக்கு எதிராக நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சா ரத்தையும், தனிப்பட்ட குடிமக்கள் மீதான சில தாக்கு தல்களையும் அரசியல் தலைமைக் குழு கண்டிக்கிறது. இத்தகைய மதவெறிப் பிரச்சாரங்கள் மக்களைப் பிளவு படுத்தும் பயங்கரவாத நோக்கத்திற்கே உதவிடும். பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக அரசாங்கம் சில ராஜீய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அவர்களைக் கையாண்ட வர்களை அடையாளம் கண்டு, சர்வதேச சமூகத்தின் முன் வைக்க ஓர் ஆவணத்தைத் தயாரிப்பதற்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும். இந்த விஷயத்தை நிதி நட வடிக்கை பணிக் குழுவுடன் (FATF) எடுத்துக் கொண்டு பொருத்தமான தலையீட்டிற்காக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவா தத்தை ஒடுக்குவதற்கான நோக்கத்திற்கு இராணுவ நடவடிக்கை உதவுமா என்பதையும், அது தடுப்பு நட வடிக்கையாக செயல்படுமா என்பதையும் அரசாங்கம் தீவிரமாக ஆராய வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு, பொது மக்கள் தொகை கணக் கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது ஒரு நேர்மறையான முடிவு. நாம் இதை நீண்ட காலமாகக் கோரி வருகிறோம். சாதிவாரி தரவுகள் மற்றும் பிற விவரங்களை எவ்வாறு சேகரிக்கப் போகிறார்கள் என்பதற்கான வழிமுறைகள் இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பொது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அட்டவணையையும் அரசாங்கம் உடனடியாக அறிவித்திட வேண்டும். வக்பு சட்டம் மற்றும் வகுப்புவாத தாக்குதல்கள் பாஜக அரசு, 2024ஆம் ஆண்டு வக்பு (திருத்தச்) சட்டமுன்வடிவை நிறைவேற்றிய பிறகு, பல்வேறு நகரங்களில் சிறுபான்மையினர் மீது மதவெறித் தாக்கு தல்கள் நடத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் சொத்துக்கள் குறிவைத்து எரிக்கப்பட்டுள்ளன. மத ரீதி யாக மக்களைப் பிளவுபடுத்தவும், சிறுபான்மை யினரைத் தாக்கவும் பாஜக இந்தச் சட்டத்தை பயன்படுத்துகிறது. வக்பு சட்டமுன்வடிவுக்குப்பிறகு, தேவாலயங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர். இது அனைத்து சிறுபான்மை சமூகங்களின் சொத்துக்களையும் கைப்பற்றி, அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளைப் பறிப்பதே இவர்களின் உண்மையான நோக்கம் என்பதை அம்பலப்படுத்துகிறது. இந்துத்துவா வெறியர்கள் கிளப்பிவிடும் இத்தகு சூழ்நிலையை முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்திக்கொள்ள முயற்சித்து வருகின்றன. ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தி எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டைத் தடுக்க ஒன்றிய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பலத்த அடியாகும். ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை யும் உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்துள்ளது. மேலும் ஆளுநர்கள் அரசியல் முகவர்களாகச் செயல்படக் கூடாது என்றும், அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டுத லின்படிதான் செயல்பட வேண்டும் என்றும் அறி வுறுத்தியுள்ளது. தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கும், மாநில சட்ட மன்றங்களின் விருப்பங்கள் மதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் பதிலாக, மோடி அரசாங்கம் நீதிமன்றத் தின் உத்தரவுகளை ஆட்சேபணை செய்யமுடியுமா என்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இதை அனுமதிக் கக்கூடாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குடியரசுத் துணைத் தலைவரும், பாஜக-வின் சில தலைவர்களும் வெளியிட்ட சில அறிக்கைகள் உச்சநீதி மன்றத்தின் அதிகாரங்களுக்கே சவால்விடும் வகை யில் அமைந்துள்ளன. இவை கண்டிக்கப்படவேண்டும். ஆபரேஷன் காகர் சத்தீஸ்கரைச் சுற்றியுள்ள பகுதியில் மாவோயிஸ்டு களை ஒழிக்க ஒன்றிய அரசு தொடங்கிய ‘ஆபரே ஷன் காகர்’, ஆதிவாசிகளின் வாழ்க்கையில் பயங்கர நிலைமைகளை உருவாக்கி இருக்கிறது. மாவோ யிஸ்டுகள் அரசாங்கத்துடன் ஒரு பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ளனர். அரசுப் படைகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான மோதலில் அப்பாவி ஆதிவாசிகளின் உயிர்கள் இழக்கப்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதால், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்க வரிப் போர் அமெரிக்கா கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் மீதும் வரிகளை அதிகரித்துள்ளது. ஆனால் பின்னர் சீனாவைத் தவிர 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் அறி வித்து பின்வாங்கியது. அமெரிக்காவின் இந்தச் சட்டத்தை பல நாடுகள் எதிர்த்தன. சீனா, கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவி லிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மீதான வரிகளை அதிகரித்ததன் மூலம் பதிலடி கொடுத்தன. அவர்களைப் போலல்லாமல், இந்திய அரசாங்கம் இந்தியப் பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்பட்டதற்கு எதிராக எதிர்வினையாற்றவில்லை. மாறாக தானாக முன்வந்து வரிகளைக் குறைப்பதன் மூலம் டிரம்பை திருப்திப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்காக இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் அநேகமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து விவ சாயப் பொருட்களுக்கு இந்தியா தனது சந்தையைத் திறக்க வேண்டும் என்றும் காப்புரிமைச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. நமது விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் இத்த கைய அனைத்து முயற்சிகளையும் இந்தியா எதிர்த்திட வேண்டும். காசாவில் நடைபெறும் இனப்படுகொலை யுத்தம் காசா மற்றும் பாலஸ்தீனத்தில் தொடரும் போரை அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் உதவி வாகனங்களின் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, காசா மக்கள் பெருமளவில் பட்டினியால் பாதிக்கப் பட்டுள்ளனர். சர்வதேச சமூகம் உடனடியாக இஸ்ரேல் மீது போர் நிறுத்தத்தை அறிவிக்கவும், காசாவிற்குள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அணுக அனுமதிக்கவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். பீகாரில் தேர்தல் பீகாரில் மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் 2025 அக்டோபரில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தயாரிப்புகளை கட்சி தொடங்கும். “மகாகத் பந்தனில் “ உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்கனவே கலந்துரை யாடல்களில் ஈடுபட்டுள்ளது. மத்தியக் குழுக் கூட்டம் 24ஆவது அகில இந்திய மாநாட்டுக்குப் பின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் புதுதில்லியில் ஜூன் 3-5 தேதிகளில் நடைபெறும். - தமிழில்: ச.வீரமணி