articles

img

களம் பல கண்ட இளைஞர் படையின் மாநாடு - எஸ்.பாலா

தமிழக புரட்சிகர இளைஞர் இயக்கத்தின் இன்னொரு மைல்கல்லாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17 வது மாநில மாநாடு கள்ளக்குறிச்சியில் செப்டம்பர் 11,12,13 தேதிகளில் நடைபெற இருக்கிறது. கடந்த 4 ஆண்டுக் காலத்தில் ஒன்றிய பாஜக அரசு மற்றும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து போராட்டக் களத்தில் வாலிபர் சங்கம் பெற்ற வெற்றிகள் ஏராளம்.

1

மின்வாரியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருந்தன. இதில் பத்தாயிரம் பணியிடங்களை கேங்மேன் பணியிடங்களாக அறிவித்து தேர்வு நடத்தியது. இதில் முதற் கட்டமாக 15000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் நியமன உத்தரவை வழங்க மறுத்தது. அதன் மூலம் தங்களுக்கு சுய லாபம் கிடைக்கின்ற முயற்சிகளில் ஈடுபடத் துவங்கினர். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பத்தாயிரம் கேங்மேன்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மூன்று கட்ட போராட்டங்களை முன்னெடுத்தது. அதனுடைய விளைவாக கேங் மேன்கள் பத்தா யிரம் பேர் மின்சார வாரியத்தில் பணி உத்தரவை ஒரு பைசா செலவு இல்லாமல் பெற்றனர்.   வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தினால் வேலை கிடைத்திடுமா என்று கேட்டவர்களுக்கு பதில் கூறும் விதமாக, வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே இத்தகைய வேலை வாய்ப்புகள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கிடைத்தது என்ற பெருமைக்குரிய செய்தியாகும்.

2

ஒன்றிய மோடி அரசாங்கம், வட மாநிலங்க ளைச் சேர்ந்தவர்களை தென்னக ரயில்வேயில் பணியமர்த்தும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டது. தென்னக ரயில்வேயில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் பட்டு இருந்தனர். அவர்களை விட்டுவிட்டு கோரக் பூரில் தேர்வானவர்களைக் கொண்டு நிரப்புகின்ற முயற்சியை மேற்கொண்டது. இதனால் 52 பேர் தகுதி இருந்தும் பணி கிடைக்க முடியாத சூழல் உரு வானது. இத்தகைய தென் மாநிலங்களின் உரிமைப் பறிப்புக்கு எதிராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் கோரிக்கையை முன் வைத்தனர். அதன் தொடர்ச்சியாக தென்னக ரயில்வே தலைமை அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தி மனு அளிக் கப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்லாயி ரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரச்சாரத்தையும் முன்னெடுத்தது. இத்தகைய தொடர் முயற்சியின் பலனாக இன்றைக்கு ரயில்வேயில் அசிஸ்டன்ட் லோகோ பைலட்டாக தென்னகத்தைச் சேர்ந்த 52 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  போராட்டங்களுக்கு என்ன விளைவு ஏற்படும் என்று கேட்டவர்களுக்கு போராடாமல் வெற்றிகள் கிட்டு வதில்லை; உரிமைகள் பெறப்படுவதில்லை என உரத்துச் சொல்லும் உதாரணமாகும் இது. இதைப்போலவே திருச்சியில் ரயில்வே அப்ரெண்டிஸ்சாக வட மாநில இளைஞர்கள் மட்டும் நிய மிக்கப்படுவதை கண்டித்து வலுவான தொடர் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது.

3

ஒன்றிய பாஜக அரசின் வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஏர்க்கலப்பை போராட்டம், மண்வெட்டி போராட்டம், மாட்டு வண்டி ஊர்வலம் உட்பட ஆர்ப்பாட் டம், மறியல் என பல்வேறு விதமான இயக்கங்களை வாலிபர் சங்கம் மேற்கொண்டது. தில்லியில் நடை பெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். விவசாயிகளின் சாதி, மதம்,மொழி கடந்த ஒற்றுமை மிக்க போராட்ட மும், பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் மோடி அரசை மண்டியிடச் செய்தது. இச்சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.

4

பெருந்தொற்றுக் காலத்திலும் ஜனநாயகத்தின் மீது பெரும் தாக்குதலை நடத்தியது எடப்பாடி அரசு தான். சாத்தான் குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை-மகனை காவல் நிலை யத்திற்கு இழுத்துச் சென்று ‘பிரண்ட்ஸ் ஆப் போலீ சுடன்’ கூட்டாக சேர்ந்து தாக்கி, காவல் படுகொலை அரங்கேற்றப்பட்டது. இந்நிலையில் பிரண்ட் ஆப் போலீஸ் எனும் அமைப்பை தடை செய் என்ற கோரிக் கையை வாலிபர் சங்கம் முன் வைத்தது. தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தது. வாலிபர் சங்க போராட்டத்தின் விளைவாக பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது.

5

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம், தஞ்சை, மயிலாடுதுறை, மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் போராட்டம், ஸ்டெர்லைட் டை மூடு என்ற போராட்டம் ஆகிய போராட்டங்க ளை தமிழகத்தில் வாலிபர் சங்கம் தீவிரமாக முன் னெடுத்தது; அதன் வெற்றிகளில் வாலிபர் சங்கத்தின் ஆயிரமாயிரம் புரட்சிகரப் போராளிகளுக்குப் பங்கு உண்டு. பங்குள்ளது.

6

தமிழக இளைஞர்களின் வேலைக்காக முதன் முறையாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வரலாற்றில் மூன்று நாள் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தியது. இப்போராட் டத்தை முறியடிக்கும் நோக்கோடு சென்னையிலே மறியலில் பங்கேற்றவர்களை கைது செய்து தலை வர்களை சிறையில் அடைத்தது. தேனியிலும் இத்த கைய அராஜகம் மேற்கொண்டது. ஆனாலும் சிவ கங்கை மாநில மாநாட்டின் முடிவை அமல்படுத்தக் கூடிய முறையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மறியல் களம் புகுந்தனர்.  தமிழக பத்திரிகைகளில் மூன்று நாட்கள் தொடர் விவாதப் பொருளாக வேலை வாய்ப்புக் கோரிக்கை மாறியது.

பேரிடர் காலத்திலும்...

கொரோனா பேரிடர் காலத்தில் உலகமே ஸ்தம்பித்திருந்த சூழலில் மக்கள் நலனுக்காக ஊரடங்கு காலத்திலும் முடங்காமல் செயல்பட்ட இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். கொரோனா முதல் அலையின் போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் மூன்று தோழர்கள் ரத்த தானம் செய்தார்கள்.  கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த வர்களை அடக்கம் செய்தல், ஆட்டோ ஆம்புலன்ஸ், சானிடைசர் தயார் செய்வது, உணவு தயாரித்து வழங்கு வது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவு வது, தன்னார்வலர்களாக செயல்படுவது, அரசு மருத்துவமனைகளில் தேவையான உதவிகளை மேற்கொள்வது என பல்வேறு சேவை நடவடிக்கை களை தமிழகம் முழுவதும் தன்னலமற்ற முறையில் மேற்கொண்டனர் வெண்கொடியின் தொண்டர்கள்.

புதிய சூழலில்  புதிய முயற்சிகள்

சுனாமி, புயல், வெள்ள நிவாரணப் பணிகளை கடந்த காலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மேற்கொண்டிருக்கிறது. அதில், ஒரு பேரிடர் நிகழ்ந்த பிறகு அங்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் கொரோனா பேரிடர் காலம் அப்படிப்பட்டதல்ல. உயிர்க்கொல்லியான கொரோனா பரவல் காலத்தில்  தங்களையும் பாதுகாத்துக் கொண்டே தான் சமூகத்தில் மக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அப்படிப்பட்ட துயரம் நிறைந்த காலத்தில் உலகமே ஸ்தம்பித்திருந்த சூழலில் புதிய நெருக்கடியை நம் சமூகம் சந்தித்தது. அத்த கைய சூழ்நிலையிலும் செயல்படுவதற்கான அறிவியல் பூர்வமான ஆலோசனைகள், நவீன தொழில்நுட்ப பயன்பாடு, நிர்வாகத்தின் ஒத்துழைப்பு என அனைத்தையும் ஒருங்கிணைத்து நிவாரணப் பணிகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மேற்கொண்டது. தகவல் தொடர்பு ஹெல்ப்லைன் உருவாக்கி அதன் மூலமாக உதவி தேவைப்படுபவர்களுக்கு பிரத்யோக மான பணிகளை மேற்கொண்டது. மருத்துவமனைகளில் மருந்து, ரத்தம் ஆகிய வற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில் ரத்ததான முகாம்களை 2020 ஏப்ரல் 23 தியாகி லீலாவதி நினைவு தினத்தில் துவக்கி தொடர்ந்து மேற்கொண்டது. இப்படி எண்ணற்ற பணிகளை பட்டியலிட முடியும். இத்தகைய செயல்பாட்டிற்கு காரணம் மக்கள் மீதான வாலிபர் சங்கத்தினரின் பேரன்பு தான்.

இளமை எனும் பேராற்றல்

இந்திய மக்களின் சராசரி வயது 29 ஆகும். தமிழ கத்தின் இளைய தலைமுறை புதிய சிந்தனையும் பேராற்றல் கொண்டதாகவும் திகழ்ந்து வருகிறது. நவீன தொழில்நுட்பமும், அரசியல் விவாதங்க ளும், புதிய கண்டுபிடிப்புகளின் மீதான ஆர்வமும், ஊக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 21ஆம் நூற்றாண்டில் பிறந்த இளம் தலைமுறை 2கே கிட்ஸ்களின் சிந்தனையும் செயல்பாட்டு வேக மும் முன்பை விட அதிகம். தேவையற்ற காரண காரியங்களுக்கு காத்தி ருக்காமல் உரிமைகளைப் பெற வேண்டும் என்ற முனைப்பும் உள்ள தலைமுறையாகும். இந்த புதிய தலைமுறை இளைஞர்களின் வேகத்திற்கு ஏற்ப செயல்பாட்டை மேற்கொள்வது, அரசியல் ரீதியாக அமைப்பாக்குவது குறித்து பிரதான விவாதத்தை கள்ளக்குறிச்சி மாநாடு மேற்கொள்ள இருக்கிறது.

ஏகாதிபத்தியத்தின்  போர் வெறிக்கு எதிராக...

எண்ணெய் வளமிக்க நாடுகளை ஆக்கிரமிப்ப தற்கு சிரியாவில் தொடர்ந்த போர், வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள்;  பொலிவியாவில் தேர்ந் தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை நாடு கடத்தியது; உக் ரைன் போரைத் தூண்டி விட்டிருப்பது உட்பட அமெரிக் கா தலைமையிலான ஏகாதிபத்தியம் உலகைச் சூறை யாடி வருகிறது. தென் சீனக் கடலில் பதற்றத்தை உருவாக்குவது; இத்தகைய வல்லாதிக்கத்திற்கு எதி ரான குரலை உயர்த்திப் பிடிக்கிற இந்திய வாலிபர் சங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்.

ஒற்றை அதிகாரத்தை நோக்கி

நாடு முழுவதும் ஒற்றை அதிகாரத்தை நோக்கி மோடி அரசாங்கம் தன்னுடைய செயல்பாடுகளை கொடூரமாக மேற்கொண்டு வருகிறது. ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுபட்டு இந்த போர்க்களத்தை சந்தித்து வருகின்றன. நாடு முழுவதும் இருக்கக் கூடிய இளைஞர்களை ஒன்று திரட்டுகிற பணியை வாலிபர் சங்கம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தி லும் தேசத்தை பாதுகாக்கும் பணியில் இளைஞர்க ளை அணிதிரட்டுகிற முயற்சியை இடைவிடாது செய்து வருகிறது.  ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமாக வலுவான குரலை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய பணியை கள்ளக்குறிச்சி மாநில மாநாடு தீர்மானிக்கும்.

இடதுசாரி முற்போக்கு கருத்தியலை உயர்த்தி

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுத் தொன்மை யையும் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றையும் உள் வாங்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றோம். தமிழக வரலாறு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக் கூடிய கீழடியின் கண்டுபிடிப்புகள் முன்னுக்கு வந்த சூழலில் இன்னும் ஆழமான முறையில் அகழ் வாய்வுகள் நடந்து வருகின்றன. தமிழகப் பண்பாட்டின் தொடர்ச்சியாக முற்போக்கு இடதுசாரிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்லக் கூடிய முறையில் இளைஞர்கள் மத்தியிலே தீவிர பணி யாற்றுவதற்கான இலக்குகளை மாநாடு தீர்மானிக்க உள்ளது. தமிழக இளைஞர்களின் குரலை ஓங்கி ஒலிக்கக் கூடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநாட்டிற்கு அலை அலையாய் அணிவகுப்போம். இளம் தலைமுறை இளைஞர்களின் நம்பிக் கையைப் பெற்று தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவோம்!  

கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  


 

 

;