articles

img

ஏகபோக மைக்ரோசாப்ட்டும் வேட்டு வைத்த ‘வேவு’ மென்பொருளும்! - அழகுநம்பி வெல்கின்

கிரவுட்ஸ்ட்ரைக் (Crowdstrike) என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்  கடந்த ஜூலை 19ஆம் தேதி தங்களுடைய ஃபால்கன்(falcon) என்ற மென்பொருள் மேம்பாட்டு பணியில் ஏற்பட்ட கோளாறினால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினிகள் நீலத் திரையில் பிழை செய்தியை காட்டி செயலற்றுவிட்டது.

ஃபால்கன் என்றால் என்ன?

ஃபால்கன் என்பது ஒரு இணைய பாது காப்பு மென்பொருள். அதை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமான கணினிகளில் நிறுவி நிறு வனத்தையும், நிறுவனத்தின் தகவல்களை யும் பல்வேறு இணைய தாக்குதலில் இருந்து தடுக்க பயன்படுத்துகின்றனர். இந்த மென்பொருள் “கடைநிலை பாதுகாப்பு” (endpoint protection) என்று வகைப்படுத்தப் படுகின்றது. அதாவது ஒரு பன்னாட்டு நிறு வனத்தில் கடைநிலையில் இருக்கும் கணினி களை பாதுகாக்க என்று கூறப்படுகின்றது. அந்த கடைநிலைக் கணினிகளை பெரும்பாலும் நிறுவனத்தின் ஊழியர்கள் தான் பயன்படுத்துகின்றனர். பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய தரவுகளை இணைய தாக்குதல்களில் இருந்து பாது காக்க ஊழியர்களின் கணினி முக்கியப் பங்கு வகிக்கின்றது என்று கருதி இந்த “கடைநிலை பாதுகாப்பு” மென்பொருள்களை நிறுவி “கண்காணிக்கின்றனர்”.

ஊழியர்களை வேவு பார்க்க...

ஆனால், இந்த ஃபால்கன் மென் பொருள் ஊழியர்களின் கணினியில் ஒரு  கண்காணிப்பு மென்பொருளாக செயல்படு கின்றது என்பது பெரும்பாலும் ஊழியர் களுக்கு தெரியாது. இதன்மூலம் ஊழியர் களின் பல்வேறு தனிப்பட்ட தகவல்களை யும் “கடைநிலை பாதுகாப்பு” என்ற பெய ரில் எந்தவித அறிவிப்பும் இன்றி சேகரிக் கின்றன. பெரும் நிறுவனங்கள் தங்களு டைய “இறையாண்மையை” - அதாவது, தங்களது ஏகபோக லாப வேட்டையில் ஒரு ஊழியரின் தனி முயற்சி அல்லது புது முயற்சி கூட தடையாகிவிடக்கூடாது என்ற வேட்கையை உறுதிசெய்ய தங்களுடைய ஊழியர்களை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு, ஒரு சிறு மென்பொருளை மேம் கடுத்தும் போது ஏற்பட்ட கோளாறுதான், இவ்வளவு பெரிய தாக்கத்தை உலகம் முழுக்க ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய ரகசிய கண்காணிப்பு மென்பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் அதனால் ஏற்படும் தனி மனித உரிமை மீறல்கள் குறித்தும் அரசுகள் எந்த அக்கறையும் கொள்வது இல்லை. சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மேலும் காலம் தாழ்த்தாமல் உட னடியாக இதனை முறைப்படுத்தி சட்ட ஒழுங்கிற்குள் கொண்டு வரவேண்டும். 

புதிய பணிமுறை

கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்பு, வீட்டில் இருந்து பணிபுரியும் முறை பிரதான பணி முறையாக மாறிய பின், வீட்டில் இருந்து பணி செய்வது பல மடங்கு உயர்ந்துள் ளது. நிறுவனங்கள், வீட்டில் இருக்கும் தங்க ளுடைய ஊழியர்களின் செயல்பாடுகள் மேலாளர் கண்காணிப்பில் இல்லாமல் இருப்பதை ஒரு பெரும் சவாலாக கருதின. இதுதொடர்பாக கோவிட் காலத்தில் நாஸ்காம் (NASSCOM) போன்ற ஐ.டி. துறை பெரும் முதலாளிகளின் சங்கங்கள் இணைய கூட்டங்கள் நடத்தி தொடர்ந்து விவாதித்தனர். இதன் விளைவாக கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் சில மாதத்திற்குள்ளேயே, “கடைநிலை பாதுகாப்பு” என்று கூறப்படும் கண்காணிப்பு மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன. 

வேவு பார்ப்பதில் போட்டி

இத்தகைய ‘வேவு’ மென்பொருளை உருவாக்குவதற்கு என்றே பல நூறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. திடீர் என்று பல நிறுவனங்கள் உருவானதினால் சந்தையில் மூர்க்கத்தனமான போட்டி உருவானது. எந்த மென்பொருள் வேகமாக இணையத் தாக்குதல்களில் இருந்து தடுத்து நிறுத்தும் என்ற போட்டி தான் ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ நிறுவனம் சரியாக சோதனை செய்யாத ஒரு மென்பொருள் மேம்பாட்டை உலகம் முழுக்க அனுப்பியதன் பின்னணி. பெரும் கார்ப்பரேட் ஐ.டி. நிறுவனங்களின் இத்த கைய மூர்க்கத்தனமான போட்டியின் விளைவு நம் கண்முன் சில மணிநேரங் களில் நடந்தேறியது. 

உலகமே ஸ்தம்பித்தது

பல்லாயிரக்கணக்கான மருத்துவமனை கள், பல்பொருள் அங்காடிகள், விமான நிலையங்கள், வங்கிகள், ஏடிஎம் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஸ்தம்பித்தன. ஒரு நிறு வனத்தின் தவறினால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டும், பொருளாதார இழப்புகள் ஏற்பட்டும் இருக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் ஒரு நிறுவனம், இந்திய நாட்டு மக்களின் வாழ்க்கையை, பொருளாதாரத்தை பாதிப் பிற்கு உள்ளாக்கும் அபாயம் கொண்டது என்பதை மிகப் பெரிய எச்சரிக்கையாக பார்க்க வேண்டும். இன்னும் குறிப்பாக இது இந்திய நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் செயல்.

மேலும் மேலும் இணையம் மற்றும் மென்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே போகும் பின்னணியில் நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்றார்போல் மக்களின் உரிமைகளைக் காக்கும் வழிகளை வடிவமைக்கவும் வேண்டும்.

ஆனால் இந்தியாவில், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இதற்குத் திட்டமிடாமல் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மக்களின் உரிமைகளையும் நாட்டின் இறையாண்மையையும் ஏலம் விட்டுக்கொண்டுள்ளது.

ஏகபோகம் பேராபத்து

மென்பொருள் இயங்குதளம் பயன்பா ட்டில் மைக்ரோசாப்ட் ஒரு ஏகபோக நிறுவன மாக இருக்கின்றது. அத்தகைய ஏக போகத்தை ஊக்குவிக்கும் மோடி அரசாங்கம், நாட்டுமக்கள் பாதிக்கப்பட்டும் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல், உதவி செய்யுமாறு அந்த நிறுவனத்திடம் கெஞ்சிக்கொண்டு இருக்கின்றது. நாட்டின் இறையாண்மையை கேள்விக்குள்ளாகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தண்டனை விதித்து பாடம் கற்பிப்பதே இத்தகைய செயல்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உதவும்.

சீனா, கேரளா பாதையில்...

இதில் ஏற்பட்ட படிப்பினைகளைக் கொண்டு, மைக்ரோசாப்ட் ஏகபோகத்தை ஊக்குவிக்காமல், அதற்கு மாற்றாக, சீனா மற்றும் கேரளா போன்று ஒன்றிய மாநில அரசுகள் தங்களின் கட்டுப்பாட்டில் மக்களுக்கான மென்பொருள் கடமைப்பு களை உருவாக்குதலும் மேம்படுத்தலும் இன்றைய தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில் நாட்டின் இறையாண்மை காக்க அவசியம்.