articles

மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு - வே.தூயவன் -

திருப்பூர் மாநகராட்சியுடன் சுற்றிலும் உள்ள 19 ஊராட்சிகளை இணைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அடிப்படை வசதிகள் செய்து தருவதை விட கட்டணச் சுமைதான் கடுமையாக அதிகரிக்கும் என்று கிராமப்புற மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சற்றேறக்குறைய நூறாண்டு காலம் நகராட்சியாக செயல்பட்டு வந்த திருப்பூரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2010ஆம் ஆண்டு வாக்கில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகரின் அருகில் இருந்த வேலம்பாளையம், நல்லூர் நகராட்சி களையும் சேர்த்து, எட்டு ஊராட்சிகளை உள்ளடக்கி மாநகராட்சியாக மாற்றி அமைக் கப்பட்டது. சற்றேறக்குறைய 13 ஆண்டுகள் ஆன நிலையிலும் இணைக்கப்பட்ட பகுதி களில் முழுமையான அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகளை பூர்த்தி செய்யவில்லை. ஆரம்பத்தில் மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டால் சாலை, வடிகால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு இதில் ஏமாற்றமே மிஞ்சியது. சொத்து வரி கடுமையாக அதிக ரித்தது. அதேசமயம் ஊராட்சியாக இருந்த போது கிடைத்த வசதிகள் மாநகராட்சியாக ஆன பிறகு சுருங்கிப் போனது. சில பகுதிகளில் சாலை வசதி செய்யப்பட்டுள் ளது. குடிநீர் விநியோகமும் மேம்பட்டுள்ளது. ஆனால் இன்னும் எல்லைப்புறத்தில் இருக் கும் குடியிருப்புகள் பலவற்றில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் புறக்கணிக் கப்பட்ட பகுதியாக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி யுடன் மேலும் 19 ஊராட்சிகளை இணைக்க அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைக்க திட்டமிட்டு அதற் கான உத்தேச பட்டியலை, திருப்பூர் மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப் பனவர், திருப்பூர் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநருக்கு  கடிதம் அனுப்பி உள்ளார். அதில் பெருமாநல்லூர், பழங்கரை, பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், அ.பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளை யம், பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கணபதிபாளையம், கரைப்புதூர், அருள் புரம், ஆறுமுத்தாம்பாளையம், 63.வேலம் பாளையம், இடுவாய், மங்கலம், கணியாம் பூண்டி மற்றும் வஞ்சிப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் சேர்க்கப்படுவதற்கு பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளி யான உடன் பல்வேறு ஊராட்சிப் பகுதிக ளிலும் பொது மக்கள் தன்னிச்சையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மாநக ராட்சியுடன் இணைப்பதன் மூலம், வரி உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் மக்கள் வாழ்க்கைத்த ரம் மாறுமா? என்பது சந்தேகம் என்று மக்கள் கூறினர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெயபால் கூறுகையில், முத்தனம்பாளையம் ஊராட்சி யின் பிரதான பகுதிகளிலேயே கழிவுநீர், வடிகால் வசதிகள் இல்லை. மாநகராட்சி யுடன் இணைத்தால் அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்று சொல்லித்தான் 13 ஆண்டு களுக்கு முன்பு இணைத்தனர். பிஏபி நகர், கார்த்திக் நகர், குருவாயூரப்பன் நகர், பிள்ளையார் நகர் என பல்வேறு இடங்க ளில் அடிப்படை வசதிகள் இல்லை. முத்த னம்பாளையத்தில் மாநகராட்சியின் 58,59 மற்றும் 60 வார்டுகளும், வீரபாண்டியில் 53, 54 மற்றும் 57 ஆகிய வார்டுகளில் இன்னும் பல இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. 

மாநகரின் மையப்பகுதியாக உள்ள 44-வது வார்டில் செல்லப்புரம் வீதிகள், குப்புசாமி புரம், காளியம்மன் கோயில் வீதி, ராஜவீதி, டிமாண்ட் வீதி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடைகள் இல்லை. மையப் பகுதியிலே இப்படிப்பட்ட நிலை இருக்கும்போது, இனி புதியதாக இணைக்கப்படும் ஊராட்சிக ளுக்கு அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஊராட் சியாக இருக்கும் வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பசுமை வீடு திட்டம் மூலம் மக்கள் பயன் பெறுவார்கள். மாநகராட்சியாக மாறும் போது, மக்களுக்கான திட்டங்கள் பெரியதாக கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரி வித்தார். 

இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஊராட்சிகளின் சில தலைவர்கள் கூறும் போது, “19 ஊராட்சிகள் சார்பில் கூட்ட மைப்பை உருவாக்கி, ஊராட்சிகளை மாநக ராட்சியுடன் இணைக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகக் கூறினர். எனினும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இந்த இணைப்பு நடவ டிக்கையை மேற்கொள்ள அரசு நிர்வாகம் முனைப்புடன் இருக்கிறது. திருப்பூர் மாநக ராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்ப னவர் இந்த இணைப்பு நடவடிக்கை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக செய்து முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாநகராட்சியாக மாற்றப்படும்போது, கிராம ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதி களுக்கு இருக்கக்கூடிய அதிகாரமும் பறிக் கப்படுகிறது. மாநகராட்சி வார்டு கவுன்சிலர்க ளாக மாற்றப்படும்போது அவர்களுக்கு கொள்கை முடிவெடுப்பதில் தீர்மானகர மான பங்கு இல்லாமல் போகிறது. கிராமப்புற மக்களுக்கான ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் பெறக்கூடிய சில சலுகைகள் ஆகியவை மாநகரமாக மாறும் போது பறி போகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், மாநகராட்சிகளில் குடி நீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை என அனைத்து அடிப்படை விசயங்களுமே கட்டணம் செலுத்திப் பெறக்கூடியவையாக மாறிவிட்டன. ஊராட்சிகளை மாநகராட்சியு டன் இணைப்பதில் மக்களுக்கு அளிக்க வேண்டிய உள்ளாட்சிகளின் அடிப்படை சேவைகளும், வணிக அடிப்படையிலான தாக மாற்றப்பட்டு விடுகிறது. எனவே மாநக ராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என ஊராட்சி வார்டு உறுப்பினர்க ளாக இருப்பவர்களும், மக்களும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.