கடந்த சில நாட்களில் மூன்று அமெரிக்க வங்கிகள் திவால் ஆகியிருக்கின்றன. அவற்றில் இரண்டு, அமெரிக்க வரலாற்றில் இதுவரை திவாலான மிகப்பெரிய வங்கிகள் என்ற பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. அந்த அளவுக்குப் பெரிய வங்கிகள். திவாலானவற்றில் சிலிக்கன் வேலி வங்கியின் சொத்து மதிப்பு 209 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.17.12 லட்சம் கோடிகள். அவ்வளவு பெரிய வங்கி திவால் ஆனதற்கு காரணம் என்ன தெரியுமா? அமெரிக்க அரசுதான்! ஆம்! அதுதானே வட்டி விகிதத்தை உயர்த்தியது? வட்டி விகிதம் உயர்ந்தால் வளர்ச்சி வந்து விடும் என்று கருது வது சரியான அணுகுமுறை அல்ல. வளர்ந்த பொரு ளாதாரங்களில்கூட அது கேடு விளைவிக்கலாம் என்பதைத்தான் இந்த நிகழ்வு சுட்டிக்காட்டியி ருக்கிறது. இந்த சிலிக்கன் வேலி வங்கி என்பது, டெக் நிறு வனங்களின் - அதாவது தொழில்நுட்ப நிறுவனங்க ளின் நிதி, அவற்றின் ஊழியர்களின் சேமிப்பு என்று மிகப்பெரிய நிதியைக் கையாள்கிறது. முதலீட்டா ளர்களின் நிதிக்கு அதிக வளர்ச்சியைத் தரும் நோக்கில், நீண்டகால கருவூலப் பத்திரங்களில் இந்த வங்கி முதலீடு செய்திருக்கிறது. கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில் அரசுப் பத்தி ரங்களில்தான் முதலீடே தவிர, பங்குச் சந்தையில் அல்ல. பங்குச் சந்தை மட்டும்தான் ஆபத்து என்ற புரிதல் நமக்கு உள்ளது. ஆனால் நவீன தாராளமயப் பொருளாதாரத்தில் ஆபத்து அங்கு மட்டுமல்ல என்பதை இது காட்டுகிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக கூறி...
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அரசின் ரிசர்வ் வங்கியான ஃபெடரல் ரிசர்வ், 0.25 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 2022 மார்ச் 17 தொடங்கி 2023 ஃபிப்ரவரி 1 வரை 8 முறை உயர்த்தி, 4.75 சதவீதமாக்கிவிட்டது. சிலிக்கன் வேலி வங்கியின் முதலீடுகள் நீண்டகால அரசுப் பத்தி ரங்களில் உள்ளவை என்பதால் அவற்றுக்குப் பழைய மிகக் குறைந்த வட்டிதான் கிடைக்கும். பத்திரங்கள் சந்தையில் விற்பனை செய்யக்கூடியவை என்றாலும், வட்டி குறைந்த பத்திரங்கள் என்பதால் அவற்றுக்கு விலையும் மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது. வட்டியை ஃபெடரல் ரிசர்வ் உயர்த்திய நாளிலிருந்து வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வட்டி தர வேண்டும்; ஆனால் வைத்திருக்கிற அரசுப் பத்திரங்க ளை தொடர்ந்து வைத்திருந்தாலும், விற்றாலும் இழப்பு தான் என்ற நெருக்கடிக்கு அந்த வங்கி தள்ளப்பட்டு விட்டது. இழப்பைச் சமாளிக்க 21 பில்லியன் டாலர் மதிப்புள்ள அரசுப் பத்திரங்களை விற்றுவிட்டதாக வும், மேலும் 2.25 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களை அவசரமாக விற்கப் போவதாகவும் மார்ச் 8 அன்று வங்கி அறிவிக்க, வாடிக்கையாளர்கள் அவ சரமாக தங்கள் பணத்தை எடுக்கத் தொடங்கினர். அதற்கடுத்த ஒரே நாளில் 42 பில்லியன் டாலர்க ளை (சுமார் ரூ.3.44 லட்சம் கோடியை) வாடிக்கை யாளர்கள் எடுத்துவிட, வங்கி நெருக்கடியைச் சந்தித்தது. மார்ச் 10 அன்று, கலிஃபோர்னியா மாநில அரசின் நிதிப் பாதுகாப்புத்துறை இந்த வங்கியின் நிர்வாகத்தைக் கைப்பற்றி, ஃபெடரல் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷனிடம் ஒப்படைத்து விட்டது.
மேலும் இரண்டு வங்கிகள்
இதற்கு இரு நாள் முன்பாக, மார்ச் 8 அன்று சில்வர்கேட் வங்கி தொடர்ந்து செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக அறிவித்ததும், வங்கியின் வாடிக்கையாளர்கள் அவசரமாக தங்கள் சேமிப்பு களை எடுக்கத் தூண்டியது. சில்வர் கேட் வங்கியின் நெருக்கடிக்குக் காரணம் கடன்களில் ஏற்பட்ட இழப்பு கள் என்று அதன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கடன்களில் இழப்பு ஏற்படுவதில் வட்டி விகிதத்தின் திடீர் உயர்வின்பங்குமிருக்கிறது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. க்ரிப்டோ நாணயங்களின் முதலீட்டிலும், பரிவர்த்தனையிலும் கவனம் செலுத்திய இந்த வங்கி, நிகழ்நேரத்தில் க்ரிப்டோ நாணயங்களை, டாலர், யூரோ போன்ற அரசு நாண யங்களாக மாற்றித்தரும் ஓர் எக்ஸ்சேஞ்சையும் உரு வாக்கி நடத்தி வந்தது. இந்த வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, க்ரிப்டோ சந்தையில் கவனம் செலுத்தி வந்த சிக்னேச்சர் வங்கியையும், ஆபத்தான நிலையி லிருப்பதாகக்கூறி, நியூயார்க் மாநில நிதிப் பாதுகாப்புத் துறை மார்ச் 12 அன்று மூடிவிட்டது. இந்த சிக்னேச்சர் வங்கி, ரூ.10 லட்சம் கோடிக்குச் சற்றே குறைவான சொத்துடையது. அமெரிக்க வரலாற்றில் திவாலான வங்கிகளில் மூன்றாவது பெரிய வங்கி.
ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொரு நெருக்கடிக்கு...
இவ்வளவு பெரிய வங்கிகள் திவாலாகியிருப்பது, அமெரிக்க நிதித் துறையில் நிலவும் நெருக்கடியையே சுட்டிக்காட்டுகிறது. 2008 நெருக்கடியைத் தொடர்ந்து 2008-12 காலத்தில் மட்டும் 465 வங்கிகள் திவாலா யின. அப்போது பல்வேறு புதிய விதிகள் உருவாக்கப் பட்டன. அதைப் போலவே இப்போது, இந்த மூன்று வங்கிகளின் திவாலைத் தொடர்ந்து, ‘பேங்க் டெர்ம் ஃபண்டிங் ப்ரொக்ராம்’ என்ற திட்டம் (வங்கிகளை மீட்கும் நிதித்திட்டம்) அவசரமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதாவது, திவாலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வங்கிகளுக்குத் தேவையான நிதியை ஓராண்டில் திருப்பித் தரவேண்டிய கடனாக அளித்து, தற்காலிகத் தீர்வளிப்பதுதான் இத்திட்டம். பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கு என்று அரசே நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு, கடன் அளித்து அந்த நெருக்கடியைத் தீர்ப்பது பலனளிக்காது என்பது வெளிப் படுகிற காலம் அதிகத் தொலைவில் இல்லை.
வட்டி விகித உயர்வு தீர்வாக இருக்காது என்பதை, அமெரிக்காவில் நிலவும் வீட்டு வாடகையும் நிரூபிக்கி றது. வட்டி உயர்த்தப்பட்டவுடன், வீடு வாங்குவது குறைந்ததால், வீட்டின் விலை குறைந்திருக்கிறது. ஆனால், இதே காலகட்டத்தில், இதைவிட அதிக மான வேகத்தில் வீட்டு வாடகை உயர்ந்திருக்கிறது. வட்டி விகித உயர்வுக்குப்பின் 5 சதவீதத்திற்கும் கீழாக இருந்த வீட்டு வாடகை உயர்வு, தற்போது 8 சத வீதத்திற்கு அருகில் வந்துவிட்டது. அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணில் இந்த வீட்டு வாடகைக் குறியீடு 32 சதவீதப் பங்கைக் கொண்டிருக்கி றது என்பதால், பணவீக்கம் மேலும் உயரவே செய்யும். எனவே, அமெரிக்கப் பொருளாதாரம் மற்றொரு பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் வாய்ப்புகள் அதிக மாகவே தென்படுகின்றன. ஏற்கெனவே, இந்த வங்கி திவால்கள் இந்தியா உட்பட உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகளில் எதிரொலித்திருக்கின்றன. அமெரிக்கப் பொருளாதாரத்தின் நெருக்கடியாக மாறினால், பிற நாடுகளின் பொருளாதாரங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கவே செய்யும்.
டாலரைக் கைவிடுவதே உத்தமம்
டாலர் அல்லாத நாணயங்களில் வர்த்தகத்துக்குத் தயாராக உள்ள ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடு களின் முன்முயற்சியை ஏற்றும், பிற நாடுகளை ஊக்கப் படுத்தியும் டாலர் இடையீடு இல்லாத வணிகத்துக்கு முடிந்தவரை மாறுவதும், அந்நியச் செலாவணிக் கையிருப்பை டாலருக்கு பதிலாக யூரோ போன்ற பிற நாணயங்களுக்கு மாற்றிக் கொள்வதும்தான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இந்திய அரசு உட னடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இருக்கின்றன.