articles

img

“சாதிக்கு” அல்ல “சாதிக்க”

நாங்கள் கூக்குரலிட்டு
கத்திக் கதறினாலும் கேட்கவா போகுது 
எங்கள் குமுறல்கள்??
சாதியில் ஊறிய உங்கள் செவிகளில்... 

ஒடுக்கப்பட்டவனின் கைகளை 
உடைக்கத்தான் முடியும்... 
அவனோடு படிக்கவா முடியும்?? 
வெட்டத் தெரியும்
வேறு என்ன தெரியும்??

படிப்பிற்கும் போராட்டம்...
பதவிக்கும் போராட்டம்... 

சின்னத்துரையின்  இரத்தம் அதிகம்
வழிந்ததால் தெரிய வந்ததோ இந்தக் கதை?? 
இரத்தத்தை யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொண்டவன்... 
சத்தமில்லாமல் ஊமையாய் அழுபவனின் 
கதையெல்லாம் தெரியுமா?? 
எங்கள் சாதி பெருமை இதுதான்!!! 

ஒடுக்கப்பட்டாலும் ஓங்கி எழுவோம்!?!? தடுக்கப்பட்டாலும் தாண்டி வருவோம்!! 
உங்களைப் போல் “சாதிக்கு” அல்ல 
““சாதிக்க””

– மல்லேஸ்வரிகிரி