articles

img

ஓரடி முன்னேறி இருக்கிறோம், ஆயினும் போராட்டம் தொடர்கிறது

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றா கும். இத்தேர்தலின் மூலம் ஜனநாய கத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் ஆட்சியாளர்கள் மதித்து நடந்திட வேண்டும் என்பதை மக்கள் நன்றாகவே வலியுறுத்தி இருக்கிறார்கள். மக்கள், 2014இலும் 2019இலும் பாஜக-விற்கு அளித்த பெரும்பான்மையை இப்போது தட்டிப்பறித்துவிட்டார்கள். பாஜக-வின் எண்ணிக்கை 303 இடங்களி லிருந்து இப்போது 240ஆகக் குறைந்துள் ளது. அதாவது 21 விழுக்காடு குறைந்துள் ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், ‘இந்தியா கூட்டணி’ 234  இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

21 விழுக்காடு  இடங்கள் இழப்பு

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மக்கள், ஜனநாயகம் மற்றும் அரச மைப்புச்சட்டத்தின் விழுமியங்களை  நன்கு உணர்ந்து வாக்களித்திருக்கி றார்கள் என்பதை இத்தேர்தல் முடி வுகள் மெய்ப்பித்துள்ளன. மக்கள், பாஜக அறுதிப் பெரும்பான்மை பெறுவதைப் பறித்துவிட்டார்கள். 2014 மற்றும் 2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தலிலும் பாஜக பெற்றிருந்த  பெரும்பான்மையை இப்போது பறித்துவிட்டார்கள்.  பாஜக-வின் இடங்கள் 303இலிருந்து 240ஆக, 21 விழுக்காடு குறைக்கப்பட்டு, கீழிறங்கி இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள் ளது. இந்தியா கூட்டணி 234 இடங்க ளைப் பெற்றிருக்கிறது. மோடி ஆட்சி செய்த கடந்த பத்தாண்டு காலமும், இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சி  நிரலை அமல்படுத்திய ஓர் எதேச்ச திகார ஆட்சியாக இருந்து வந்தது.  அரச மைப்புச்சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையுமே சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தடுத்து, தனக்குக் கீழ் அடிமையாக செயல்படும் விதத்தில் மாற்றி அமைத்தி ருந்தது. தேர்தல் நடைபெறும் சம யத்தில், மத்தியப் புலனாய்வு முகமை கள் மூலமாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் குறி வைத்துத் தாக்கப் பட்டார்கள். இரு மாநில முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கிய தேர்தல் ஆணையம்

எதிர்க்கட்சியினருக்கு சமமாக வாய்ப் பளித்து தேர்தல் பிரச்சாரம் நடத்தப் படவில்லை. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மிகவும் வருந்தத்தக்க விதத்தில் அமைந்தி ருந்தது. தனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தேர்தல் ஆணையாளர்களை நியமித்ததன் மூலம், தேர்தல் ஆணை யம் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் ஆளும் கட்சியினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்துத் தண்டிக்கக் கூடிய விதத்தில் முதுகெலும்பு இல்லாத ஓர்  அமைப்பாக மாறிப்போனது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை உமிழ்ந்து பேசிய போதும்,  அவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று வாக்குப்பதிவு தொடர்பான தரவுக ளை வெளிப்படுத்துவதிலும் வெளிப்ப டைத்தன்மை இல்லாததன் காரணமாக, தேர்தல் ஆணையத்தின்மீது தேவையற்ற விதத்தில் சந்தேகம் ஏற்பட்டு, அதன் நம்பகத்தன்மைக்கே ஊறு விளைந்தது.

நஞ்சு உமிழும் பிரச்சாரமும் மக்கள் நன்மை விரும்பும் பிரச்சாரமும்

பாஜக, கார்ப்பரேட் மீடியாவை முழு மையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அதே சமயத்தில், சமூக ஊடகங்களுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் வாரி இறைத்துத் தன் பிரச்சா ரத்தை மேற்கொண்டிருந்தது. இத்துடன் வாக்காளர்கள் மத்தியிலும் பணத்தை வாரி இறைத்தது. மோடியும் அவருடைய அடிவருடிகளும் இந்தியா கூட்டணியில் இருந்த கட்சிகள் மீது மிரட்டும் தொனி யில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த னர். இத்தகைய மோசமான சூழ்நிலை யில்தான் இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொண்டன. மோடி, முஸ்லிம்களுக்கு எதிராக  மதவெறி நஞ்சை உமிழ்ந்துகொண்டி ருந்த அதே சமயத்தில், எதிர்க்கட்சியி னரோ வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம், விவ சாய நெருக்கடி மற்றும் ஜனநாயகத்திற் கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் இந்துத்துவா வெறியர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் முதலானவற்றில் கவ னம் செலுத்தினார்கள். நாட்டில் முதன் முறையாக, அரசமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளைக் காப்பாற்றிட வேண்டியது அவசியம் என்பதை மக்களில் பெரும்பா லானவர்கள், குறிப்பாக தலித்துகள் உணரத்தொடங்கினர்.

இதயப்பகுதியில்  விழுந்த அடி...

பாஜக-விற்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதில் உத்தரப்பிர தேசத்தில் அதற்கு விழுந்துள்ள அடி முக்கியக் காரணமாகும். இங்கே மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சென்ற தேர்தலின்போது 62 இடங்களைப் பெற்றிருந்த பாஜக இப்போது இங்கே வெறும் 33 இடங்களில்தான் வெற்றி பெற  முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம், இந்துத்துவாவாதிகளின் இதயம் போன்ற பகுதியாகும். இங்கே இவர்கள் எழுப்பியுள்ள ராமர் கோவில், இவர்களின் இந்து உயர் மேலாதிக்க நிகழ்ச்சிநிரலை அடையாளப்படுத்துகிறது. எனினும், இங்கே பாஜக 9 விழுக்காடு வாக்கு களை இழந்திருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு, விவசாயிகள் மத்தியில் அதிருப்தி, அக்னிவீர் திட்டத்திற்கு எதிராக இளைஞர் மத்தியில் காணப்படும் கோபம், தேர்வுத் தாள்கள் தேர்வுகளு க்கு முன்பே வெளியாதல் முதலானவை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தன. இவற்றை சமாஜ்வாதி கட்சியால் கட்டி எழுப்பப்பட்ட கூட்டணி நன்கு பயன்படுத்திக் கொண்டது. அயோத்தி இருக்கும் தொகு தியான ஃபைசாபாத் மக்களவைத் தொகு தியிலேயே இப்போது பாஜக எம்.பி.யாக இருக்கக்கூடிய நபர் தோற்கடிக்கப் பட்டிருப்பது, பாஜக ஆட்சியாளர்கள் மேல் மக்களுக்கு உள்ள கோபத்தை நன்கு பிரதிபலிக்கிறது.

மோடிக்கு முட்டுக்கொடுத்த ஊடகங்களும் கார்ப்பரேட்டுகளும்

தேசிய ஜனநாயகக் கூட்டணி சராசரி யாக 367 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெறும் என்று, ஏழாவது கட்டத் தேர்தல் முடிவடைந்தபின் வெளியாகிய கருத்துக் கணிப்புகள் கட்டவிழ்த்துவிட்ட  பிம்பம், சுக்குநூறாக நொறுங்கியது. எதிர்க்கட்சியினருக்கு மனச்சோர்வை ஏற் படுத்தும் விதத்திலும், ஆளும் கட்சியி னரின் மேலாதிக்கத்திற்கு முட்டுக் கொடுக்கும் விதத்திலும் இவை வெளி யாகி இருந்தன. இவ்வாறு ஊடகங்களும் கார்ப்பரேட்டுகளும் கட்டவிழ்த்துவிட்ட கருத்துக்கணிப்பின் விளைவாக மும்பை  பங்குச்சந்தையில் 14 லட்சம் கோடி ரூபாய் வரைக்கும் பங்குச்சந்தை வணிகம் உயர்ந்தது. மேலும் இந்தத்  தேர்தலில் ஒடிசா வில் பிஜு ஜனதா தளமும், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசும் படுதோல்வி அடைந்துள்ளதையும் பார்த்தோம். இவ்விரு மாநிலங்களிலும் நாடாளு மன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் நடந்தன. நாடாளுமன்ற மக்களவைக்கான இடங்களைப் பறி கொடுத்திருப்பதோடு, மாநில அரசாங் கங்களையும் இவை இழந்துள்ளன. ஒடிசாவில் மக்களவைக்கான மொத்த இடங்கள் 21இல் 20 இடங்களை பாஜக கைப்பற்றியிருப்பதோடு, சட்டமன்றத்தி லும் பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளது. இவ்விரு மாநிலங்களும் மாநிலக் கட்சிகளுக்கு ஒரு  படிப்பினை யை கொடுத்திருக்கின்றன.

மோடி அரசுடன் கூடிக்குலாவினால்...

யார் மோடி அரசாங்கத்துடன் கூடிக் குலாவினாலோ அல்லது அதனை ஆதரித்தாலோ அவர்களின் கதி இவ்வா றாகிவிடும் என்பதை  இவை தெரிவித்தி ருக்கின்றன. பாஜக-வுடன் யார் கூடிக் குலாவினாலும்  அவர்களை அது மெல்ல மெல்ல  சின்னாபின்னமாக்கி அது விழுங்கிவிடும். பாஜக-வைக் கடுமை யாக எதிர்த்திடும் மாநிலக் கட்சிகளால் மட்டுமே, அது திமுக-வாக இருந்தா லும் சரி, சமாஜ்வாதிக் கட்சியாக இருந்தா லும் சரி அல்லது ராஷ்ட்ரிய ஜனதா தளமாக இருந்தாலும் சரி, அவற்றால் மட்டுமே அதன் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதோடு, மேலும் வலுவாக வளரவும் முடியும்.  

காணாமல் போன ஒளிவட்டம்

இறுதியில் இந்தத் தீர்ப்பானது, நரேந்திரமோடியாலும், பாஜக-வினா லும் மிகப்பெரிய அளவில் பூதாகரமா கக் காட்டப்பட்டபோதிலும், அவற்றை யெல்லாம் தகர்த்துவிட்டது. பாஜக-விற்கு இவ்வாறு பலத்த அடி கிடைத்திருப்பதற்கு மோடியே காரணமாகும். பாஜக, மோடியை முன்னுக்கு வைத்தே இத்தேர்தலை நடத்தியது. பாஜக-வின் தேர்தல் அறிக்கை கூட மோடி ஆட்சிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றே கூறியது. இவ்வாறு மோடியைச் சுற்றி  கட்டமைக்கப்பட்ட ஒளிக்கீற்று காணாமல் போய்விட்டது. அமைய  இருக்கும்  தேசிய ஜனநாய கக் கூட்டணி அரசாங்கம், இனியாவது மோடியும் அமித்ஷாவும்  மேற்கொள் ளும்  நடவடிக்கைகள் அனைத்தும் சரியா கவே இருந்திடும் என்று கருதுவதைக் கைவிடும் என்று நம்புவோமாக.

தீய திட்டங்களை திணிக்க மறைமுக வழியில் முயற்சிக்கும்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மையில்  மூன்றில்  இரண்டு பங்கிற்கு மிகவும் கீழே இருக்கிறது. இதன் காரணமாக ‘ஒரே தேசம் ஒரே தேர்தல் முறை’ போன்று இது நினைத்துக் கொண்டிருந்த தீங்கு விளைவிக்கும் பல திட்டங்களை இதனால் உடனடி யாக நிறைவேற்ற முடியாது கிடப்பில்  போடப்பட்டுவிடும். மோடி  மூன்றாவது  முறையாக அமைத்திடும்  அரசாங்க மானது ஒரே சமயத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்திடும்  முறையை உடனடியாகக் கொண்டுவரும்  என்று உறுதிமொழி அளித்திருந்தார். இதற்கு நாடாளுமன்றத்தில் ஏகப்பட்ட அரசமைப்புச் சட்டத்  திருத்தங்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இப்போது  இதனை அதனால் மேற் கொள்ள முடியாது போன்றே தோன்று கிறது.  எனினும், இவர்களின் நடவடிக்கை கள் குறித்து மிகுந்த விழிப்புணர்வு முக்கியமாகும். எனினும், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்களின் மத்தியில் எதேச்சதிகார இந்துத்துவா வெறி நன்கு ஊடுருவியிருப்பதால், தங்கள் நிகழ்ச்சி நிரலை  நிறைவேற்ற நேரடியாக இல்லா விட்டாலும், மறைமுகமான வழிகளை இவர்கள் தேடத் தொடங்குவார்கள்.

இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட...

இப்போது, இந்தியா கூட்டணி யில் அங்கம் வகிக்கும் கட்சிகள், நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும், மிகவும் முக்கியமாக நாடாளுமன்றத்திற்கு வெளி யேயும், ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் குறித்து ஆராய வேண்டியிருக்கிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும்  கட்சிகள் அனைத்தும் ஒரு பொது மேடையின்கீழ் ஒருங்கிணைந்து சிறந்த முறையில் செயல்படுவதை  உத்தர வாதப்படுத்த வேண்டியது அவசியம். கடந்த  சில மாதங்களின்   அனுபவம், ஒவ்வொரு கட்சிக்கும்  அவற்றுக்கே உரித் தான அரசியல்  திட்டங்கள் இருந்தபோதி லும், அவற்றுடன் மோதாதவிதத்தில் ஒரு விரிவான பரந்த மேடையின்கீழ் திறமை யாகச் செயல்பட்டதைக் காட்டியது. இந்தியா கூட்டணியைக் கட்டுப்படுத்தும் கொள்கை என்பது ஜனநாயகம், மதச்சார்பின்மை  மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை உயர்த்திப்பிடித்திடும்  வகையில் அமைந்திட வேண்டும்.    எதேச்சதிகாரம்-இந்துத்துவா மதவெறி அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடைந்துவிடவில்லை. ‘இந்தியா கூட்டணி’ அடைந்துள்ள வெற்றியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் பகிர்ந்து கொள்ளும் அதே சமயத்தில், அவர்க ளுடைய தேர்தல் செயல்பாடுகள்  விமர்ச னரீதியாக மறுஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் தாங்கள் வெற்றி பெற்றுள்ள இடங்களில் சற்றே முன்னேற்றம் காணப்பட்டிருக்கி றது. சென்ற முறை ஐந்து  இடங்களைப் பெற்றிருந்த இடதுசாரிக் கட்சிகள்  தற்போது எட்டு இடங்களைப் பெற்றி ருக்கின்றன. (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 4, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – 2,  இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்-லெனினிஸ்ட் -2).  கேரளாவில் தேர்தல் முடிவுகள்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் ஏமாற்றத்தை அளிப்ப தாக இருக்கின்றன. இங்கே அவர்கள் அதிக இடங்களை வெல்வோம்  என்று எதிர்பார்த்தார்கள். இவ்வாறான நிலை ஏற்பட்டதற்கான காரணங்களையும், பலவீனங்களையும் சுயவிமர்சன ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. வர விருக்கும் காலங்களில் இந்துத்துவா-கார்ப்பரேட் கள்ளக் கூட்டிற்கு எதிரான போராட்டத்தை வலுவாக  முன்னெ டுத்துச் செல்ல, ஒரு வலுவான இடதுசா ரிக் கூட்டணி மிகவும் முக்கியமாகும்.

ஜூன் 5, 2024, 
தமிழில் : ச.வீரமணி

;