articles

img

பாதுகாப்பில்லாத வேலை! நிரந்தரமில்லாத வேலை !!

சமூகப்பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.1 அன்று தென்சென்னையில், மாநில சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. ‘சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்’ (மெஸ்) இந்த மாநாட்டை நடத்துகிறது. இதனையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் ‘உடலுழைப்பு தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு’ எனும் தலைப்பில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை ஆற்றிய உரையின் சுருக்கம்

ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

பம் என்று தொழிலாளியின் உழைப்பை வேட்டை யாடுகிறது. ஒரு தொழிலாளி நல்ல உடல், மனநிலையோடு இருந்தால்தான் அவரால் முழு உற்பத்தியை தர முடியும். எனவே, தொழிலாளிக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க 1957ஆம் ஆண்டு டாக்டர் அக்ராய்டு ஒரு சூத்திரத்தை (பார்முலா) உருவாக்கினார். ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு 2700 கலோரி உணவு தேவை. இந்த அள வில் 80 விழுக்காடு கலோரி உணவு அவரது  மனைவிக்கும், தலா 60 விழுக்காடு வீதம்  120 விழுக்காடு கலோரி உணவு இரண்டு  குழந்தைகளுக்கும் தேவை. இதற்கான உணவுப் பொருட்களின் விலை, 5.5 மீட்டர்  துணி, இவற்றின் மதிப்பில், 10 விழுக்காடு வீட்டு வாடகை என அடிப்படைச் சம்பளம்   என்ற சூத்திரத்தை உருவாக்கினார். கல்வி, மின்சாரம், எரிபொருள் 20 விழுக்காடு, இதர தேவைகளுக்கு 25 விழுக்காடு என கூடுதலாக சேர்த்து ஊதியம் வழங்க பின்னால் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு குடும்பம் கண்ணியமான வாழ்க்கையை நடத்த, அடிப்படைத் தேவை களை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த பட்ச ஊதியம் இருக்க வேண்டும் என்று  அக்ராய்டு சூத்திரம் சொல்கிறது. சமூகப்  பாதுகாப்புடன் கூடிய வேலை என்றால், இதை உறுதி செய்ய வேண்டும். 1990 வரை இதுதான் அடிப்படையாக இருந்தது. இதனையொட்டி பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாயின.

அதில் ஒரு சட்டத்தின்படி, தொழிலாளி யின் ஊதியத்திலிருந்து 12விழுக்காடு, முதலாளியிடம் இருந்து 12 விழுக்காடு  பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதி (பிஎப்), இஎஸ்ஐ, ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு செலுத்தப்படும். தொழிலாளி உடல்நிலை பாதிக்கப்பட்டு இஎஸ்ஐ மருத்துவனையில் அனுமதிக் கப்பட்டால் இலவசமாக சிகிச்சையும், அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு அரை நாள் சம்பளமும் கிடைக்கும். தொழிலாளி யின் குடும்பம் முழுவதும் கட்டணமின்றி  சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். வருங்கால வைப்பு நிதி வாயிலாக ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெறமுடியும். இதுபோன்ற 29 சட்டங்களை ஒன்றிய அரசு 4 தொகுப்புகளாக மாற்றிவிட்டது. சட்டம் என்றால் கொடுத்தாக வேண்டும். கொடுக்காவிட்டால் குற்றம். வழிகாட்டு நெறிமுறை (தொகுப்பு) என்றால் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இது ஏன் நிகழ்ந்தது?

நவீன தாராளமயமாக்கல் கொள்கை அமலான பிறகு, இந்தியாவின் இயற்கை  வளங்கள், கனிம வளங்கள், தொழிலாளர்க ளின் உழைப்பை மலிவாக வாங்கி, பன்னாட்டு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. நிதிமூலதனம் தடையின்றி எந்த நாட்டுக்குள்ளும் செல்லும். மூன்றாம்  உலக நாடுகளுக்கு சென்று உழைப்பைச் சுரண்டும். அதீத லாபத்தை ஈட்டும். அதற்கு  ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள். உலக வங்கியில் கடனை பெற,  அவர்களது நிபந்தனைகளை ஏற்று,  1991லிருந்து உலகமயம், தனியார்மயம், தாராளயமயக் கொள்கை அமல்படுத்தப் படுகிறது. இதன்காரணமாக நிரந்தரமற்ற பணியை உருவாக்கி வருகிறார்கள். அரசுத்துறைகளில் கூட நிரந்தரப்பணி இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது.

 குரூரமான சூழல்

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை  தருவோம் என்றார் பிரதமர் மோடி. அதன்பிறகு சமோசா விற்பதும் வேலை வாய்ப்புதான் என்றார். ஒரு குடும்பமே உழைத்து பல லட்சங்கள் செலவு செய்து ஒருவரை படிக்க வைக்கிற நிலை உள்ளது.  அரசின் கொள்கை நிரந்தர வேலை இல்லை என்கிறது. எனவே, படித்த இளை ஞர்கள் இருச்சக்கர வாகனத்தில், போனை  வைத்துக் கொண்டு உணவு பொருட் களை விநியோகிக்க கடை வாயிலில் கும்பல்கும்பலாக நிற்கிறார்கள். ஓட ஓடக் காசு; ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும், வண்டிக்கு தவணை கட்டக் கூட வருமானம் வரவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள்தான் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியை  கொடுக்கின்றன. அரசு உருவாக்கிய தொழி லாளர் நலச் சட்டங்கள் அனைத்தும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களில்தான் அமல்படுத்தப்படுகின்றன. அங்குதான் இடஒதுக்கீடு, பணிப்பாதுகாப்பு, குடியிருப்பு போன்றவை உள்ளன. தனியார்  துறையில் இடஒதுக்கீடு கிடையாது. எனவே, சமூக நீதியை  காக்க பொதுத்துறைகளை தனியார்மய மாக்கக் கூடாது என்கிறோம். ஆனால்,  ஆட்சியாளர்கள் பொதுத்துறைகளை விற்பதோடு, தற்போது  நீண்ட கால குத்தகை அடிப்படையில் கார்ப்பரேட்டு களுக்கு வாரிக் கொடுக்கின்றனர். ஆர்எஸ்எஸ், கார்ப்பரேட் அஜெண்டாவை பாஜக செயல்படுத்திக் கொண்டு இருக்கி றது. இதனால் வேலை வாய்ப்பில் குரூரமான சூழல் உருவாகி உள்ளது.

சிதைப்பு

இந்தியாவில் அனைவருக்கும் வேலை  கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். உண்மைதான். குடும்பமே சேர்ந்து உழைத் தால்தான் வாழ முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவன் மாண வனாக இல்லை. காலையில் செய்தித் தாள், பால் போடுபவனாக உள்ளான். ஒரு  இளைஞர் ஒரு வேலை செய்த நிலை மாறி,  உணவு விநியோகிப்பாளர், ரேபிடோ ஓட்டு பவர், பகுதிநேரம் வேலை செய்பவர் என  பல வேலைகளை செய்கிறார். வீட்டில்  இருந்தபடியே வேலை செய்யக் கூடிய வர்களாக பெண்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஒருவர் உழைத்து குடும்பம் வாழும் ஊதிய  முறையை ( அக்ராய்டு சூத்திரத்தை ) நவீன  தாராளமயக் கொள்கை சிதைத்துவிட்டது. இந்தியாவில் 23 லட்சத்து 70ஆயிரத்திற் கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 15 லட்சத்து  90ஆயிரம் தொழிற்சாலைகள் தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படக் கூடியவையாக உள்ளன. உபேசர், ராம்கி என்ற இரு பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் உள்ள கம்பெனியோடு கூட்டுச்சேர்ந்து சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளிக்  கொண்டு இருக்கின்றன. ஒரு நாளைக்கு 2 கோடி ரூபாய் அவர்களுக்கு மாநகராட்சி  தருகிறது. ஒரு நிரந்தர தொழிலாளிக்கு தர  வேண்டிய ஊதியத்தை எடுத்து 4 பேருக்கு  கொடுத்துவிட்டு, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றன.

ஆலைகளில், நிறுவனங்களில் சங்கம் இருந்தால், முதலாளிகள் சட்டப்படி தொழிலாளர்களுக்குத் தர வேண்டியதை கேட்கும் என்பதால் தொழிற்சங்கம் அமைத்தால் பழி வாங்குகின்றனர். இந்தியச் சட்டங்களை அமலாக்க மறுக் கின்றனர். இதை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். அடுத்தகட்டமாக, தொழிலாளிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர். தமிழகத்திலும் சங்கம் வைக்கும் உரிமை பறிக்கப்படுகிறது. அநீதிக்கு  எதிராகப் போராடுகிற தொழிலாளர்களை, தொழிற்சங்கத் தலைவர்களை காவல்துறை சிறைக்கு அனுப்புகிறது. பிளாட்பாரம், ஜிக் போன்ற முறைகளில் தொழிலாளர்கள் வேட்டையாடப்படுகின்றனர். விலைவாசி  உயர்ந்து கொண்டே செல்கிறது. வர்த்தகச் சூதாடிகள் லாபம் கொழிக்கின்றனர். தொழிலாளர்களின் ஊதியம் உயராமல், வாழ்க்கைத்தரம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை வைத்து முதலாளிகள் கொள்ளையடிக் கின்றனர். இண்டர்நெட் ரீசார்ஜ் கொள் ளையை தடுக்க கேரள இடதுமுன்னணி அரசு இலவசமாக டேட்டாவை வழங்கு கிறது. ஆனால் தொழிலாளர்களின் ஊதி யத்தை குறைப்பதற்காக புலம்பெயர்  தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்ற னர். ஆலைகளில், கிராமப்புறத்தில் நில மற்ற விவசாயத் தொழிலாளர்களின் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்கி றதா? ஆனால், கேரள அரசு பாதுகாக்கிறது.  கேரளாவில், மலையாள மொழி பேசும் தொழிலாளிக்கு என்ன கூலியோ, அதே  கூலியைதான் புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதுபோன்ற சட்டத்தை ஏன்  தமிழ்நாடு அரசு கொண்டு வரக்கூடாது? ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் வேலை செய்தால், பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது ஏன்? அரசுப்பணிகளில் சி, டி பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அல்லது இறந்து போனால் அந்த பணி யிடங்களை நிரப்பக் கூடாது. மாறாக, அவுட்சோர்சிங் முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்கிறது. எங்கும் நிரந்தரப் பணியே இல்லாத நிலையை உருவாக்கி வருகின்றனர். தொழிலாளி ஒருவர் சென்னை நகரில் 400 சதுர அடி வீடு வைத்திருந்தால், அதன் மதிப்பு ரூ.10  லட்சத்தை கடந்துவிட்டது. எனவே, நலவாரிய உறுப்பினராகத் தொடர முடி யாது என்று 17 ஆயிரம் பேரை உறுப்பினர்  பதிவிலிருந்து நீக்கியுள்ளனர். மாநில அரசின் சட்டங்கள், ஒன்றிய அரசின் பொரு ளாதாரக் கொள்கையை, சட்டங்களை பின்பற்றுவதாக உள்ளதை அனுமதிக்க முடியாது. சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.