articles

img

‘இந்தியாவில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வருவது சாத்தியமே!’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பில் நவம்பர் புரட்சிதின கருத்தரங்கம் பாளையங்கோட்டை நூற்றாண்டு  மண்டபத்தில் நவம்பர் 20 ஞாயிறன்று முழுநாள் நடைபெற்றது. இதில் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கருத்தாளர்கள், கருத்துரையாற்றினர். வகுப்புவாத சவால்களை எப்படி எதிர்கொள்வது?, எத்தகைய போராட்ட வடிவங்களை மேற்கொள்வது? சோசலிசத்தின் தேவை, உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கம் குறித்து உரையாற்றினர்.தொடர் பிரச்சாரங்கள் மூலம் வகுப்புவாத சக்திகளை களத்திலிருந்து அகற்ற முடியும் என்றும் இந்தியாவில் புரட்சிகர மாற்றத்தை கொண்டுவருவது சாத்தியம் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

  மக்கள் இருக்கும் இடம் தேடி...

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்: 

சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்ட போவ தற்கு காரணமாக இருந்த கோர்பச்சேவ் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.அவரது மரணம் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் ரஷ்ய மக்கள் இனிப்பு வழங்கி கொண்டா டினர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்த சோசலிச சமூக அமைப்பு கொண்ட தேசத்தை சீரழித்தவருக்கு எதிரான மக்களின் கோபம் இதன்மூலம் வெளிப் பட்டுள்ளது. மாற்றம் தேவை என்று எந்த வர்க்கம் நினைக்கி றதோ, எந்த வர்க்கத்திற்கு மாற்றம் என்பது கட்டாய மாகிறதோ, அதற்காக போராடுகிறதோ, அந்த வர்க் கத்தினர் புரட்சியில் ஈடுபடுகிறார்கள். கரும்பை விளைவிக்கும் விவசாயியால் கரும்புக்கும் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைக்கும் விலை நிர்ணயிக்க முடியாது. கரும்பை வாங்கி சர்க்கரையாக உற்பத்தி செய்யும் ஆலை முதலாளிதான் அதற்கு விலை நிர்ணயிக்கிறான்.எந்தச் சூழ்நிலையிலும் லாபம் முதலாளிகளுக்குத்தான் என்று இந்த சமூ கத்தில் உள்ளது. இதனை மக்களுக்கு சொல்லி உணர்த்த வேண்டும்.

எப்போது புரட்சி வரும் என்று சிலர் கேள்வி எழுப்பு வர். மூத்த தலைவர்களிடம் பேசும்போது இளைஞர்க ளாக இருந்த நாங்களும் இந்த கேள்வியை கேட்டுள்ளோம். இதற்கு மேல் சட்டங்களை போட்டு மக்களை அடக்கி ஆள முடியாது என்று முதலாளிகள் நினைக்கும்போது இதற்கு மேல் நெருக்கடிக்குள் வாழமுடியாது என்று மக்களும் தொழிலாளர்களும் எழுச்சி பெற்று எழும்போது புரட்சி எழும். சோவியத் யூனியன் தன்நாட்டு மக்களுக்கு இலவச மருத்துவம் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்த பிறகுதான் பல்வேறு நாடுகளும் அதனை வழங்கின.ஏகாதிபத்தியம் இருக்கும் வரை யுத்தம் இருக்கும். யுத்தம் இருக்கும் வரை ஏகாதிபத்தியத்தின் மூச்சு இருக்கும்.  விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வரு கிறது. 1970 களில் 3 பவுன் தங்கநகை மதிப்பில் இருந்த  ஒருவரின் மாதச்சம்பளம்,இன்று ஒன்றே முக்கால் பவுனாக குறைந்துள்ளது. மக்களை இதிலிருந்து திசை திருப்ப இந்தியாவில் மதவெறி நிகழ்ச்சிகளை கையி லெடுக்கிறார்கள். இதனால் மாயைகளில் சிக்கியுள்ள மக்களின் பிரச்சனைகளில் அவர்களையும் இணைத் துக்கொண்டு போராட்டங்களை நாம் நடத்த வேண்டும். சிறியஅளவிலான போராட்டமாக இருந்தா லும் நடத்த வேண்டும். மக்கள் இருக்கும் இடம்தேடி நாம் போக வேண்டும். இதன்மூலம் இந்தியாவில் வலுவான புரட்சிகர மாற்றத்தை கொண்டுவருவது சாத்தியம்.

சோசலிசமே எதிர்காலம்

சோசலிசமே எதிர்காலம் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி:

சோசலிசம் என்ற வார்த்தையை உச்சரிக்காத, அதைப்பற்றி பேசாத அரசியல் கட்சித் தலைவர் கள் யாரும் இல்லை.அனைவரும் பேசியுள்ளனர். முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் காங்கிரசும் பேசியது. சோசலிச சோவியத் யூனியன் தான், உழுப வனுக்கு நிலம் சொந்தம் என்று சட்டம் இயற்றி, செய்துகாட்டியது. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும் சீனா, விண்வெளியில் மேடை அமைத்து கிரகங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.  கொரோனா பெருந்துயரத்தை இந்தியாவும் உலக நாடுகளும் சந்தித்தன. முதலாளித்துவ ஆட்சி நடக்கும் ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளில் இறப்பு விகிதம் அதிகம். அனைத்து மக்களுக்கும் மருத்துவம்  கிடைப்பதில் பாரபட்சம் இருந்தது. ஆனால் சோசலிச பாதையில் ஆட்சிபுரியும் நாடுகளில் இறப்பு விகிதம் மிகமிகக்குறைவு. மருத்துவ வசதிகள் கிடைத்தன. அன்றாட அத்தியாவசியப் பொருட்களும் வீடுதேடி விநியோகம் செய்யப்பட்டன.  வறுமை,சாதி மத ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட, அனைத்து மக்களுக்கும் கல்வி,வேலை,இருப்பிடம் கிடைக்க வேண்டுமானால் சோசலிசம் மலர வேண்டும். 

இது இடதுசாரிகளுக்கு  வாய்ப்பான காலம்

தென் அமெரிக்காவின் எழுச்சி என்ற தலைப்பில் பிரண்ட்லைன் ஆங்கில இதழின் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர் :

உழைப்பின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது நவம்பர் புரட்சி.சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்டபோது, பலருக்கு அந்த நம்பிக்கை தகர்ந்தது. ஆனால் இப்போது தென் அமெரிக்க நாடுகளில் தேர்தலில் வெற்றிபெற்று இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள்ளது, மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  தங்கத்தை தேடி வந்த கொலம்பஸ், ஒரு கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களை கொன்றது முதல் தென்அமெரிக்க நாடுகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட முறை ராணுவத் தலையீடு களை அமெரிக்க செய்தது வரை , அச்சம்பவங்களுக்கு எதிராக அந்த மக்களுக்கு 500 ஆண்டுகால கோபம் உள்ளது. சிலி நாட்டின் ஜனாதிபதியாக இருந்த சோச லிஸ்ட் அலெண்டேவை அமெரிக்காவில் உள்ள அமைப்பு கொன்றது.இதன்பிறகு நவதாராளமயக் கொள்கை முதலில் அமல்படுத்தப்பட்டது சிலிநாட்டில்தான்.  தற்போது உலகமயத்தின்  நேரடித் தாக்குதலில் அனைத்துப்பகுதி மக்களும் பாதிக்கப்பட்டு, ஒன்று திரண்டுள்ளனர். பொலிவியாவில் தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நடத்தி, அதனை ரத்து செய்ய வைத்தார்கள்.  இந்த காலத்தில் போராட்ட வடிவங்கள் வித்தியாச மாக மேற்கொள்ளப்படுகின்றன. சமூகவலைத் தளங்கள் மூலம் மக்கள் போராட்டத்திற்காக ஒன்றி ணைக்கப்படுவது, ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சாவேஸ் ஜனாதிபதியாக இருந்து ஆட்சி புரிந்த வெனிசுலாவில் எண்ணெய் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தி,அதன்மூலம் கிடைக்கும் நிதியில் மக்க ளுக்கு நலத்திட்டங்களை செய்தனர். அங்கு, கிராம  மருத்துவ கமிட்டி, கல்வி உரிமை கமிட்டி, பாதுகாப்பு  கமிட்டி என்ற 3 கமிட்டிகள் மக்கள் பங்கேற்புடன் அமைக்கப்பட்டன. இதில் ஆளுங்கட்சியினர் அதிகா ரம் செலுத்த முடியாது. சாவேஸ் நெருக்கடிக்கு உள் ளானபோது இந்த கமிட்டியில் உள்ள மக்கள்தான் தன்னெழுச்சியாக எழுந்து சாவேஸை பாதுகாத்தனர்.  முதலாளிகள் தொழில் மூலமாக தொழிலா ளர்களை சுரண்டினர். தற்போது தொழிலில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றி சுரண்டுகிறார்கள். தொழிலாளர்கள் கண்ணீருடன் வெளியேற்றப்படும் காட்சியை ஊடகங்கள் காண்பிப்பது இல்லை.தென் அமெரிக்க நாடுகளில் நடந்த தனியார் நடவடிக்கை தற்போது இந்தியாவில் நடக்கிறது.இது இடதுசாரிகள் வளர்வதற்கு வாய்ப்பான காலம்.ஏனென்றால் கொள்கை தெளிவு, அரசியல் உறுதிப்பாடு இடதுசாரி களுக்கு மட்டுமே உண்டு. 96 சதவீதம் முறைசாரா தொழிலாளர்கள்தான். இவர்களை அணிதிரட்ட வேண்டும். புதிய புதிய போராட்ட வடிவங்களை கையி லெடுக்க வேண்டும். களத்தில் பணியாற்றி, நம்பிக்கை யோடு புதிய பாதையில் செல்வோம். 

காலம் காலமாக  வர்க்கப் போராட்டம்

தமிழகமும் வர்க்கப்போரும் என்ற  தலைப்பில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம்: 

உலகத்தில் நடக்கும் பிரச்சனைகள் உள்ளூரில் பாதிக்கிறது. தாமிரபரணி நதிக்கரையில் நாம் கூடி யுள்ளோம். இங்கிருந்து சென்று காசியில் ஒரு கும்பல் கூடியுள்ளது. அங்கு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, காசிக்கு வந்த  முத்துசாமி தீட்சிதர் கங் கையில் மூழ்கி எழுந்தபோது, அவரிடம் சரஸ்வதி தேவி ஒரு வீணை வழங்கினார் என்றும் அந்த வீணைதான் அருங்காட்சியகத்தில் உள்ளது என்றும் கூறினார்.  இந்த பேச்சை சமூகவலைத்தளத்தில் விமர்சித்து வருகின்ற னர். காசியில் கூடியிருப்பது காவிகளின் சங்கமம். தாமிர பரணியில்  இப்போது கூடியிருப்பது செங்கொடிகளின் சங்கமம்.  நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் தாக்கப்பட்ட போது அவர்களுக்காக எந்த கடவுளும் வரவில்லை. செங்கொடிதான் வந்தது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் வீ.பழனி கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலை யிலிருந்து மீண்டு வந்துள்ளார்.  கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடலில், வசதி படைத்தவன் தரமாட்டான்;வயிறு பசித்தவன் விடமாட்டான் என்று கூறினார்.இவர்கள் இருவருக்கும் இடையேதான் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. காலங்காலமாக வர்க்கப்போராட் டம் நடந்து கொண்டிருக்கிறது. 100 நாள் வேலை கேட்டும் கூலி உயர்வு கேட்டும் நடக்கும் போராட்ட மும் வர்க்கப்போராட்டம்தான் .  கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் நிறைய படிக்கக்கூடிய வர்கள்.அவர்களிடம் வாதம் புரிந்து ஜெயிக்க முடி யாது என்பார்கள். நம்மைக் கண்டு எதிரிகள் பயப்படு கிறார்கள். பூமியிலே சொர்க்கத்தை படைப்பதுதான் சோசலிசம். அந்த சொர்க்கத்தை படைப்பதற்கு கம்யூ னிஸ்டுகள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாசிசத்திற்கு ஜனநாயகம் பிடிக்காது

கார்ப்பரேட் பாசிசம்:வினையும் எதிர்வினையும் என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் :

உலகின் பெரும் பணக்காரரான ஜெப் பெசோஸ் விண்வெளி சுற்றுலா சென்றார். அவர் விண் வெளியில் 11 நிமிடம் பயணித்தார். உலக அளவில் 1 நிமி டத்தில் 11 ஆயிரம் பட்டினிச்சாவுகள் நிகழ்கின்றன. இதுவரை இல்லாத ஏற்றத்தாழ்வு உலகம் முழுமையும் உள்ளது.முதலாளிகளின் வளர்ச்சிதான் தேசத்தின், உலகத்தின் வளர்ச்சியாக பேசப்படுகிறது. இந்த வளர்ச்சி சாமானிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற் றத்தை கொண்டுவந்திருக்கிறதா?  பாஜகவின் பிரதமரான வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் என்ரான் என்ற தனியார் மின்சார கம்பெனிக்கு 16 சதவீத லாபத்தை அரசு தருவது என்ற உத்தரவாதத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அடுத்து பாஜக பிரதமர் மோடி யின் முதல் ஆட்சிக்காலம், இரண்டாம் ஆட்சிக்காலத்தில் தனியார்மயம் மூர்க்கத்தனமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களை திசை திருப் பவே, கற்பனை எதிரிகளை முன்வைப்பது மதவெறி பாசிசம். மக்களிடம் ஆட்சிக்கு எதிரான கோபம் இருக்கிறது. ஒரு வருடம் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், அக்னி பாதை திட்டத்திற்கு எதிரான போராட்டம் இதனை வெளிப் படுத்தியது. பாசிச ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக உள்ளனர். நாடாளுமன்ற ஜனநாயகம் பாசி சத்திற்கு பிடிக்காது.வர்க்கரீதியான அணிதிரட்டலுக்கு எதிராக குறுக்கே நிற்கிறது கார்ப்பரேட் பாசிசம்.  இந்நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி களின் வெற்றி உலகம் முழுக்க நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது.மக்கள் இடதுசாரிகள் பக்கம் திரும்பியுள்ளார்கள்.

தொகுப்பு:எஸ்.உத்தண்ட ராஜ் 

;