articles

img

பரந்தூர் விமான நிலையத்திலிருந்து பாமரன் பேசுகின்றேன்... - சி.சங்கர்

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், திரு பெரும்புதூர் என 2 வருவாய்க் கோட் டங்களையும், காஞ்சிபுரம், வாலாஜா பாத், உத்திரமேருர், திருபெரும்புதூர், குன்றத்தூர் என ஐந்து வட்டங்களையும்,  ஒரு மாநகராட்சி, இரண்டு நக ராட்சிகள், மூன்று பேரூராட்சிகள், 274 கிராம ஊராட்சி கள் கொண்ட மாவட்டம். இதில் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி 11,66,401பேர் உள்ளார்கள். மொத்தம்  479 வருவாய் கிராமங்கள் உள்ளன. மாவட்டத் தில் நெல் முக்கிய பயிர். கரும்பு, வேர்க்கடலை,  காய்கறி கள், தானியங்கள்,  பூ, தென்னை உள்ளிட்ட விவசா யத்தை விவசாயிகள் செய்து வருகின்றார்கள். மொத்த நிலப்பரப்பு 1704.79 சதுர கிலோமீட்டர். இவற்றில் பயிர்  செய்யும் நிலப்பரப்பு 367.67சதுர கிலோ மீட்டர். ஏரிகள் என்று பார்த்தால் 380 உள்ளன.  மேலும் இயற்கை வளங்கள்,  பாறை,  மணல்,  நல்ல தண்ணீர், நல்ல காற்று உள்ள மாவட்டம். திருபெரும் புதூர்,  குன்றத்தூர் தாலுகாக்களில் சில தொழிற்சாலை கள் வெளியிடும் நச்சுக் காற்றால் பருவ மழைக ளும் சில நேரங்களில் வராமல் போகும்.  நஞ்சை,  புஞ்சை  நிலங்களை கொண்ட இந்த  மாவட்டத்தில் பிரதானமாக விவசாயத்தை காட்டிலும் தொழிற்சாலையில் பணிபுரி யும் தொழிலாளர்கள் அதிகம்.  பட்டு கைநெசவு, கட்டு மானம்,  சிறுசிறு பட்டறைகள் கொண்ட இந்த  உள்ளூர்  தொழிலாளர் எண்ணிக்கையில் 25 சதவீதம். வெளி மாவட்ட, மாநில தொழிலாளர்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் காஞ்சிபுரம் மாவட்டமும் ஒன்று. ஏராள மான தொழிற்சாலைகள் உள்ள மாவட்டமாக இருந்தா லும் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. 

பசுமை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்திற்கு அடுத்த இரண் டாவது விமான நிலையம் பசுமை விமான நிலையம் அமைத்திட ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு அதற் கான பணிகள் துவக்க நிலையில் உள்ளன. அதற்குள் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வந்து விட்டது போல் ரியல் எஸ்டேட்காரர்கள் விமான நிலையம் அருகில் புதிய வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது என்று தொலைக்காட்சி மற்றும் தினசரிகளில்  விளம் பரம் செய்கிறார்கள்.  மறுபுறத்தில் தமிழக அரசின் அமைச்சர்கள் பரந்தூர் விமான நிலையத்தை ஒட்டி மெட்ரோ ரயில், பெங்களூர் விரைவு சாலை, பறக்கும் சாலை, என அறிவிப்புகளும், தொழில் வளர்ச்சிக்காக இரண்டாவது விமான நிலையம் தேவைப்படுகின்றது; ரூபாய் 100/- செலவழித்தால் ரூபாய் 320/- லாபம் கிடைக்கும் என்று பேட்டிகள் கொடுத்து வருகின்றார்கள்.  அரசியல் கட்சிகள் திமுக,  அதிமுக,  காங்கிரஸ்,  பிஎஸ்பி, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் விமான நிலையம் அமைவதை வரவேற்கிறார்கள். பாமகவும் ஏறக்குறைய விமான நிலையத்தை வரவேற்கும் போதே, நேரடியாக ஆத ரிக்காமல் ஏழு பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்வதாக கூறினாலும் விமான நிலையம் வேண்டும் என்பதே அவர்களுடைய கருத்தும்.

110 நாள் போராட்டம்

மறுபுறத்தில் விமான நிலையம் அமைப்புப் பகுதி காஞ்சிபுரம் வட்ட கிராமங்களான வளத்தூர், பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய் மற்றும் திருபெரும்புதூர் வட்ட ஏகனாபுரம், மேலேரி, அக்கம்மாபுரம், மகாதேவிமங்க லம் போன்ற கிராமங்கள் நிலங்களோடு பொதுமக்க ளும் வீடுகளும் முழுமையாக இல்லாமல் போகும். வரைபடத்திலிருந்து காணாமல் போகும். ஏகனாபுரம், அக்கம்மாபுரம், மேலேரி, நாகப்பட்டு, மகாதேவிமங்க லம் நெல்வாய் கிராமத்து மக்கள் 110 நாட்களைக் கடந்து விமான நிலையம் வேண்டாம் என்று போராடி வருகின் றார்கள்.  ஆர்ப்பாட்டம்,  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்,  பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத போராட் டம்,  உண்ணாவிரதம்,  மெழுகுவர்த்தி போராட்டம் நடத்தி 17-10-2022 அன்று தலைமைச் செயலகத்தை நோக்கி நடைபயணம் என அறிவித்து நடை பயணத்திற்கு தயாராகும்போது, இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழக அமைச்சர்கள் கிராமத்தில் முக்கிய பிரமுகர் களை அழைத்து பேசி தொடர் போராட்டம் கைவிடப் பட்டதாக அறிவித்தார்கள். ஆனால், கிராமத்து மக்கள் தொடர்ந்து இரவு ஏழு மணி முதல் 9 மணி வரை போராட்டத்தை நடத்தி வரு கின்றார்கள். பரந்தூர் விமான நிலையம் வருவதாகவும் அதற்கான வரைபடம் இதுதான் என்று 2018 லேயே தகவல் வெளிவந்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால் இன்று வரையில் அனைவரும் அந்த வரை படத்தை காண்பித்தே பல தகவல்கள் வெளியிடப் படுகின்றன. 4200 ஏக்கர், அதில் அரசு புறம்போக்கு 2500 ஏக்கர் என்றும் அதற்கான பணிகள் நடைபெறுவதாக வும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. 

விமான நிலையத்திற்காக எடுக்கப்படும் பகுதிக ளில் 52 ஏரிகள், குளங்கள் சென்னை அடையாறுக்கு தண்ணீர் செல்லக்கூடிய கம்பன் கால்வாய், கொசஸ் தலை ஆற்றுக்குச் செல்லும் கலங்கலில் இருந்து தண்ணீர் என அனைத்தோடு 2446.79 ஏக்கர் புஞ்சை நிலங்களும் 799.59 ஏக்கர் நஞ்சை நிலங்களும், அரசு பள்ளிகள் 13 என உள்ளன. இதனால்  1200 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழக்கும்.  நிலத்தை இழப்பவர்கள் குறைவாக இருந்தாலும்,  விவசாயிகளின் வாழ்வாதா ரம், கிராமப்புற வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப் படுகின்றது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்க ளின் கல்வி கேள்விக்குறியாகின்றது.   ஏகனாபுரத்து மக்கள் தலித் மற்றும் மிகவும் பிற் படுத்தப்பட்ட மக்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். 110 நாட்களாக போராட்டம் தொடர்கின்றது.  பரந்தூர் பகுதியில் ஆறாம் ஆரம்ப சுகாதார நிலைய இடத்தில் சென்று பார்த்தால் ஏராளமான காலி நிலங்கள் உள்ளது போன்ற தோற்றம் பார்ப்பவர்களுக்கு தெரியும். அதை தொடர்ந்து காஞ்சி புரம் தாலுக்கா நெல்வாய் கிராமத்திலும் நாகப்பட்டு கிராமத்திலும் திருபெரும்புதூர் தாலுகா ஏகனாபுரம் மேலேரி,  அக்கம்மாபுரம் முழுமையாகவும், மகாதேவி மங்கலம் ஒரு பகுதி மக்களின் வீடுகளும் செல்கின்றது. இதை ஒதுக்கி விட்டு விளைநிலம், புறம்போக்கு நிலத்தில் விமான நிலையம் அமைத்திடவும் கோரிக் கைகள் வைக்கப்படுகின்றன.  அதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை தான் உள்ளது. 

மறுபுறத்தில் சென்னையில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும்,  அதற்கான பணிகள் மற்றும் சென் னையிலிருந்து பெங்களூர் விரைவு சாலை பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது.  ஏற்கனவே விரைவு சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு நான்கு வழிச் சாலைக்கான பணிகள் நடைபெற்றாலும் பரந்தூர் கிரா மத்திற்கு ஒரு கிலோ மீட்டர் அருகில் பொடவூரில் பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றதை நாம் பார்க்க முடிகின்றது.

பாதிப்புக்குள்ளாகும் மக்கள்

விமான நிலையம், விரைவுச்சாலை, மெட்ரோ ரயில் பாதை அனைத்தும் விளை நிலங்களில் தான் அமைக்க உள்ளனர்.  இதனால் விவசாயிகளும் குடியிருக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கின்றார்கள்.  இவர்களுக்கான இழப்பீடு என்ன என்ற கேள்வி வலுவாக வருகின்றது.  பயிர் செய்யும் நிலங்களை இழக்கும் விவசாயிகள் குடியிருப்புகளையும், தாங்கள் வளர்க்கும் கால்நடை களையும் இழக்கும் விவசாயக் கூலி பெருமக்கள், அருகில் உள்ள தொழிற்சாலைக்கு அடுத்த அரை மணி நேரத்தில் நிம்மதியாக உண்டு உறங்கி பணிக்குச் செல்லும் வாய்ப்பை இழக்கும் தொழிலாளர்கள், கறவை மாடுகளை காலையில் காலி நிலங்களில் மேய்ச் சலுக்கு அனுப்பி மாலையில் பால் கறக்க முடியாமல் போகும் பால் உற்பத்தி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்ல முடியாத மாணவ - மாணவிகள்  என தொடரும்  பட்டியல், காலையில் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களை விட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்ல முடியாத முறை சாரா தொழிலாளர்கள், அடுத்தவர்களின் பராமரிப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகள் என தொடர்கிறது.

மாசுபடும் நிலத்தடி நீர்

திருபெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ள நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகளில் சில தொழிற்சாலை கள் வெளியிடும் நச்சுக்காற்றால் சுற்றுச்சூழல் பாதிக் கின்றது; இத்தோடு விமான நிலையம் அமைத்தால் அவற்றின் கழிவுகளாலும் வெளியிடும் நச்சுக்காற்றா லும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது நிச்சயம். மேலும் விமான நிலையம் அமைந்துள்ள அடுத்துள்ள 15 கிலோ மீட்டர் காஞ்சிபுரம் மாநகராட்சியோடு பரந்தூர் பகுதி யில் குறிப்பாக 13 ஊராட்சிகளும் நகரமயமாக மாறும் போது கழிவுநீர் விடுவதற்கான இடம் எங்கே? விவசாயி கள் ஏரிகளை பயன்படுத்தி பயிர் செய்தது போக, அனைத்து ஏரி குளங்களும் கழிவு நீரால் கெடுவதற் கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு உதாரணம் காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய், காஞ்சிபுரம் வேகவதி ஆறு, நத்தப்பேட்டை பெரிய ஏரி, வையாவூர் களியனூர்  ஏரிகள் அனைத்தும் காஞ்சிபுரம் மாநகரத்தில் வெளி யேற்றப்படும் அனைத்து கழிவு நீரால் காட்சி அளிக்கின் றது.  மறுபுறம் நத்தப்பேட்டை ஏரியும் பாதி அளவிற்கு குப்பை கொட்டும் இடமாக மாறி வருகின்றது.  இவை அனைத்தும் சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபடு கின்றதை அனைவரும் அறிவார்கள்.  ஒன்றிய அரசும், மாநில அரசும் பரந்தூர் விமான நிலையம் அமைப்ப தற்கான பணிகளில் வேகம் காட்டும் வேலையில் இருக் கின்றார்கள். அனைத்தும் இழந்திடும் அப்பகுதி மக்க ளுக்கு பல கோடி ரூபாய் கொடுத்தாலும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடியாது. 

வாரி வழங்கப்படும் வாக்குறுதிகள்

இதற்கிடையில் தற்போது தகவல்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  நிலம் எடுப்பதற்கு முன் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் குறிப்பாக மாவட்ட ஆட்சியர், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய குடியிருப்புகள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு போதிய இழப்பீடு கள், பலன் தரும் மரங்கள் வாழை, தென்னை, மாமரங்க ளுக்கு 20 ஆண்டுகள் கணக்கிட்டு நிவாரணம் என கூறு வது தேர்தல் நேரங்களில் கட்சிகள் வழங்கும் வாக்கு றுதிகளையும் கடந்து செல்லும் வாக்குறுதிகளாக உள்ளன.  நிலம் எடுத்த பிறகு என்ன இழப்பீடு கொடுப் பார்கள்? எப்போது கொடுப்பார்கள்? பரந்தூர் விமான நிலையம் அமைவதால் வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி அனைத்தும் உலக மகா  பணக்காரர்கள் மேலும் மேலும் லாபம் அடை வதற்கு தான் பயன்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவது உட்பட அனைத்தையும் நாம் அனுபவித்திட வேண்டும். குறைந்தபட்சம் அரசு செய்ய வேண்டியது 13 ஊராட்சி கள் உள்ளடக்கிய பொதுமக்களை கொண்ட குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் இழப்பீடு கள் இனத்திற்கு சந்தை மதிப்பிலா அதற்கும் கூடுத லாக கொடுப்பதற்கான உத்தரவாதம் உண்டா? கால்நடைகளை பராமரிக்கும் வகையில் குடியிருப்புகள், அருகில் மேய்ச்சல் நிலங்கள், இலவசக் கல்வி கொடுப்பதற்கான உத்தரவாதம், வீட்டுக்கு ஒருவருக்கு உத்தரவாதமான வருமானத்திற்கான அரசு பணியோ அல்லது தொழிற்சாலை பணியோ, ஏரி குளங்கள் சில மூடினாலும் மூடாமல் நீர் தேக்கிடவும் கம்பன் கால்வா யில் எப்போதும் ஓடும் மழை நீர் சென்றிட உத்தரவா தம், விளையாட்டுத் திடல், பொழுதுபோக்கு பூங்காக்க ளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்படுத்தி தர வேண்டும். செய்யுமா  ஒன்றிய அரசு? 

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்
 

 

;