articles

img

தீக்கதிரை இதயத்தில் தாங்கும் கோவை தொழிலாளர் வர்க்கம் - எஸ்.ஏ.மாணிக்கம்

தொழிலாளி வர்க்கத்திற்கு அதன் பத்தி ரிகை ஒரு அமைப்பாளனாக செய லாற்றும் என்றார் மாமேதைலெனின்.  கோவை தொழிலாளி வர்க்கம் தனக்கான பத்தி ரிகையை தானே முயற்சியெடுத்து துவக்கியதிலி ருந்தே புரட்சியாளர் லெனின் மதிப்பீடு எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக பொருளாதாரம் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்வதற்காக என்பதற்கு மாறாக, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எழுந்த தத்து வார்த்த விவாதத்தில் தாங்கள் ஒரு தெளிவான முடி விற்கு வரவேண்டும் என்பதற்காக பத்திரிகை அவசி யம் என்ற அரசியல் உணர்வு தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் முதிர்ச்சியை உணரச் செய்கிறது. 

சோதனை மிகுந்த ஆண்டுகள்

1962 மற்றும் 1963 காலங்கள் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சோதனை மிகுந்த ஆண்டுகள்.  முதலாவது சோதனை, நாட்டின் சோசலிசப் பாதைக்கான இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் திட்டத்தை வடிவமைப்பதில் ஏற்பட்டது. இந்திய ஆளும் வர்க்கத்தினை மதிப்பீடு செய்து அதை எதிர்கொள்ளும் வகையில் புரட்சிகர அணி சேர்க்கையினை உருவாக்கு வது தான் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப் பிரதான இலக்கு. இதில் ஏற்படும் தடுமாற்றம் எதிர்கா லத்தின் திசைவழியையே பாதிக்கும் அபாயத்தை உருவாக்கும். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கட்சியின் திட்டத்தை உருவாக்குவதற்கான போராட் டமே ஒரு நெடிய காலத்தை எடுத்துக்கொண்டது. அன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் சோசலி சத்தின் மீதான ‘பாசத்தை’ வைத்து மதிப்பீடு செய்வதா அல்லது விரிவான மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான அணியை கட்டுவதற்கான பாதையை தேர்வு செய்வதா என்பது.

இரண்டாவது சோதனை, இந்திய-சீன எல்லைப் பிரச்சனையில் இரு நாடுகளும் போருக்கு செல்வதா அல்லது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதா  என்பது. ‘போருக்கு எதிரானவர்கள் சீன ஆதரவாளர் கள்’ என்று முத்திரை குத்தப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒருபகுதி தலைவர்களும். ஊழியர்க ளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். இதனையடுத்தே 1964இல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது என்பது வரலாறு. இத்தகைய பின்புலத்தில் இருந்து தான் தீக்கதிர் 60 ஆண்டுகளுக்கு முன்பு தனது பயணத்தை துவக்கியது. தமிழகத்தின் பெரும் செல்வந்தர்களது குடும்பத்தி னர் பத்திரிகை துவங்கிய அந்தக் காலத்தில், தொழி லாளர்கள் தங்களின் சொந்த ஊதியத்திலிருந்து சிறு தொகை வசூலித்து அதனையே பத்திரிகையின் மூல தனமாகக் கொண்டு ஒரு பத்திரிகை துவங்கிய தென்றால் அதுதான் தீக்கதிர். 

இதுபற்றிய விபரத்தை மூத்த தோழர்கள் யூ.கே. வெள்ளிங்கிரி. டெக்ஸ்டூல் சின்னசாமி, பிஎஸ்ஜி ஆறுமுகம் ஆகியோர் குறிப்பிடுகையில், “கோவை நக ரத்தின் பிரதான தொழிற்சாலைகளான டெக்ஸ்டூல், பிஎஸ்ஜி மற்றும் எண்ணற்ற பஞ்சாலைகளில் பணியாற்றிய செங்கொடி சங்க தொழிலாளர்கள் பத்தி ரிகையின் அவசியத்தை உணர்ந்து அதற்கான நிதியை வசூலிக்க முடிவு செய்தனர். தொழிலா ளர்கள் மனமுவந்து நிதியளித்தனர். அன்றைய தொழி லாளர் சம்பளத்தை ஒப்பிடுகையில் அவர்கள் நிதிய ளித்த தொகை அதிகம். இதேபோல திருப்பூர் வட்டா ரத்திலும் தொழிலாளர்கள் நிதி திரட்டி கொடுத்தனர். கோவையைச் சார்ந்த எல்.அற்புதசாமி என்கிற அப்பு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்” என நினைவு கூர்ந்தனர். இந்த துவக்கப் பணிகளில் கே.ரமணி, ஆர்.வெங்கிடு, எம்.பூபதி உள்ளிட்ட தலைவர்கள் ஈடு பட்டனர் என்றும் தெரிவித்தனர்.

அரசியல் செல்வாக்கு உயர்ந்தது

டெக்ஸ்டூல் சின்னசாமி முதல் வாராந்திர பத்திரிகை யில் துவங்கி 1993 வரையில் 30 ஆண்டு காலம் கோவை யில் தீக்கதிரின் முதல் முகவராக இருந்து செயல்பட்ட வர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பிஎஸ்ஜி மில் தொழிலாளியான பழையூர் ஆறுமுகம்  வாராந்திர பத்திரிகை விநியோகத்தில் துவங்கி தற்போது வரை யிலும் தீக்கதிர் விநியோகப் பணியில் ஈடுபட்டு வரு கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவை தொழிலாளர்கள் மத்தியில் பத்திரிகை வாசிப்பு முலம் உருவான இத்தகைய இடதுசாரி அரசியல் உணர்வுகள் தான் வலுவான இடதுசாரி தொழிற்சங்க இயக்கத்தை கட்டமைக்கவும், தொழி லாளர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் மீதான செல் வாக்கு விரிவடையவும் அடித்தளமாக அமைந்தது. 1967ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட பெரும் செல்வந்தர் பொள்ளாச்சி மகாலிங்கத்தை தொழிற்சங்கத் தலை வரான கே.ரமணி  தோற்கடித்ததும் பின்னர் அடுத்த டுத்து நடந்த தேர்தல்களில்  இடதுசாரி இயக்கத் தலைவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்க ளாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் போன்ற சாதனைக ளுக்கு தொழிலாளர்கள் மத்தியில் மேலோங்கியிருந்த இடதுசாரி அரசியல் செல்வாக்கு ஒரு காரணமாகும்.  

பின்னர், பத்திரிகை மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு மதுரை அச்சகத்திற்கு கேரள தேசாபிமானியிலிருந்து ஒரு பழைய இயந்திரத்தை கேரள கட்சி கொடுத்தது. அந்த இயந்திரத்தை இயக்குவதற்காக தோழர் கே.ரம ணியின் முயற்சியால்  நவஇந்தியா பத்திரிகையில் வேலையில் இருந்த பீளமேடு தோழர் கருப்புசாமியை மதுரைக்கு அனுப்பி வைத்து அவரை அங்கேயே நிரந்தரமாக இருந்து அச்சுப்பணியை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அத்தோழரும் கட்சியின் விருப்பப்படி தனது மூப்புக்காலம் வரையிலும் மதுரை யில் பணியாற்றினார்.

வாசகர்களிடம் கொண்டு சேர்த்த மகத்தான தோழர்கள்

தீக்கதிர் வாரப்பத்திரிகையிலிருந்து நாளிதழாக மாறிய பிறகு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. பல புதிய தோழர்கள் முகவர்களாக இருந்து விநியோகம் செய்வற்கு மனமுவந்து முன்வந்த னர். பல பத்தாண்டு காலங்களுக்கும் மேலாக கடு மையான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் தீக்கதிரை நாள் தவறாது விநியோகித்து வந்தனர். பல தோழர்க ளின் பெயருக்கு முன்னாள் தீக்கதிர் என்ற அடை மொழி காலப்பதிவாகவே பதிந்துவிட்டது.

தீக்கதிர் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒரு தோழர் தன்னுடைய மகன் அகால மரணமடைந்து மருத்துவ மனை பிரேதக் கிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டி ருந்த நிலையிலும் அன்றைய தீக்கதிரை விநியோகித்து விட்டு அதற்குப் பின்னரே மருத்துவமனைக்கு சென்று  இறுதிநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். இத்தகைய தோழர்களின் அர்ப்பணிப்புக்களை சொல்லிக் கொண்டே போக முடியும். எந்தவொரு பத்திரிகைக் கும் இத்தகைய தியாகப்பூர்வமான முகவர்களை பார்க்க முடியாது. சோசலிசத்தின் மீதான தங்களின் ஆழமான நம்பிக்கையின் உத்வேகம் இத்தகைய சோதனைகளை  கடந்து செல்வதற்கான அரசியல் உணர்வினை அவர்களுக்கு அளிக்கிறது.

எழுதப் படிக்கத் தெரியாத பஞ்சாலை, சுமைப் பணித்  தொழிலாளர்கள், சாயப்பட்டறை, விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் ஓய்வு நேரங்களில் படிக்கத் தெரிந்த இளைஞர்களின் உதவியைப் பெற்று  தீக்க திரை முழுமையாக படிக்கச் சொல்லி அரசியலை அறிந்து கொண்டனர். உறுதிமிக்க தொழிலாளர்க ளாக தொழிற்சங்க இயக்கத்தில் பணியாற்றியதற்கு தீக்கதிர் வாசிப்பு ஒரு நல்ல அடித்தளத்தை உரு வாக்கியது.

முப்பதாம் ஆண்டு விழா

 1993 ஆம் ஆண்டு  தீக்கதிரின் முப்பதாண்டு விழா கோவையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தோழர்.இ.கே.நாயனார் பங்கேற்றார்.கலைவிழாவில் இயக்குநர் பாலுமகேந்திரா கலந்து கொண்டார். பல் லாயிரக்கணக்கானோர் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். இந்த விழா தீக்கதிரின் விரிவாக்கத் திற்கு பெரிதும் உதவியாக அமைந்தது.  1990களுக்குப் பிறகு கோவையில் அடுத்தடுத்து நிகழ்ந்து வந்த வகுப்பு மோதல்களும். தொடர் குண்டு வெடிப்பும் அதைத்தொடர்ந்து முன்னுக்கு வந்த பதற்ற நிலைமைகளும் அறிவோம். இத்தகைய பதற்றமான தருணங்களில் தீக்கதிர் நாளிதழ் மக்களின் ஒற்று மையை முன்னிறுத்தி செய்திகளையும். அரசியல் பின்னணிகளையும் வாசகர்கள் மத்தியில் எடுத்துச் சென்றது. அமைதிக்கான முயற்சிகளுக்கு தீக்கதிர் தன்னுடைய பங்களிப்பை செய்தது. மக்கள் ஒற்றுமை மத நல்லிணக்கத்திற்கான ஆயுதமாக தீக்கதிர் உழைக் கும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது.

பத்தாண்டு சந்தா எனும் உற்சாகம்

2001ஆம் ஆண்டு அரசுப் போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தின் வெள்ளிவிழாவையொட்டி  சிஐடியு சேரன் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடனாக பெற்று பத்தாண்டு சந்தாக்களாக பொள்ளாச்சியில் நடை பெற்ற விழாவில் தோழர்.எஸ்.ஏ.பெருமாளிடம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான தொகையினை வழங்கினர். இதேபோல ஈரோடு ஜீவா போக்குவரத்து தொழிலா ளர்களும் சந்தா வழங்கினர். ஐந்தாண்டு, பத்தாண்டு சந்தாக்களை வழங்குவதை ஊக்கப்படுத்தும் முயற்சி க்கு இது வித்திட்டது. இத்தகைய வளர்ச்சிப் போக்குகளே தீக்கதிரின் மூன்றாவது பதிப்பு கோவையில் துவங்கிட  காரண மாகின. கோவையை மையப்படுத்தி ஒன்றுபட்ட கோவை மற்றும் சேலம் மாவட்டங்களை உள்ளடக்கி கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பதிப்பு அலுவ லகத்திற்கான இடத்தை தீக்கதிர் நிர்வாகம்  தேர்வு செய்யும் இடத்தை மாவட்டக் கட்சி வழங்கும் என்று சொன்னதோடு அதன்படி கட்சியின் கோவை கிழக்கு  நகரக்குழு செயல்பட்டு வந்த புதிய கட்டிடத்தை தீக்க திருக்கு வழங்கியது. தீக்கதிரின் வளர்ச்சிக்கு என முன்னுக்கு வரும் எந்தவொரு முயற்சிகளும் முன்னுரி மையாக கருதப்படுவதற்கு இது ஒரு நல்ல உதாரண மாகும்.

வரலாறு படைத்த கோவை பதிப்பு

கோவை பதிப்பு துவங்கப்படுவதையொட்டி கட்சி  அணிகள். தொழிலாளர்கள் மத்தியிலும் நல்ல உற்சா கத்தை ஏற்படுத்தியிருந்தது. கோவை, திருப்பூர் மாவட் டங்களில் ஆயிரத்திற்கும் மேலான சந்தாக்களை சேர்த்து பெரும் நிதியாக வழங்கப்பட்டது. குறிப்பாக ஈரோடு ஜீவா போக்குவரத்து தொழிலாளர்கள் சந்தா விற்காக ஊதியத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி 500 சந்தாக்களுக்கான தொகை ரூ.5 லட்சத்தை தோழர் பிரகாஷ் காரத்திடம்  வழங்கினர்.  மதுரைப் பதிப்பிலி ருந்து வந்த பத்திரிகை எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்தது. சந்தா வழங்கியதோடு பதிப்பு துவக்க நாளன்று வெளியான சிறப்பு மலருக்கும் ரூ.20 லட்சம் வரையில் விளம்பரங்களை அளித்து தீக்கதிருக்கு மூல தனத்தை உருவாக்கிக் கொடுத்தவர்களில் பெரும் பகுதி உழைப்பாளி மக்கள் தான். 

திருப்பூர் மாவட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சந்தாக்க ளை சேர்த்தும், தீக்கதிருக்கு விளம்பரத்தை அளிப்ப தன் மூலம் தீக்கதிரின் வளர்ச்சிக்கு மகத்தான பங்க ளிப்பை செய்து வருவதையும் கட்சி அணிகளும், தீக்கதி ரின் ஆதரவாளர்களும் ஒரு கடமையாகவே கருதுகிறார் கள். கடந்த 2016ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டக்குழு ‘நம்ம திருப்பூர் நம்ம தீக்கதிர்’ எனும் ஒரு மாத கால சிறப்பு விற்பனை இயக்கம் தீக்கதிர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைத்தது. பல ஆயிரக்க ணக்கான புதிய வாசகர்கள் தீக்கதிருக்கு அறிமுக மாகினர். மக்கள் மத்தியில் பெரியளவில் தீக்கதிர் பிரச்சாரத்தை கொண்டு செல்ல முடிந்தது.தற்போது திருப்பூரில் மாவட்ட செய்தி பிரிவு துவக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டு காலத்தில் அரசியல் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இடதுசாரி தொழிலாளி வர்க்க அரசியல் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்  விளைவாக வலதுசாரி பிற்போக்கு சக்திகள் தலை தூக்குகின்றன. உழைக்கும் மக்கள் பொருளாதார மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக் கப்பட்டு வருகிறார்கள். அமைதியான சமூகம், தொழில் துறையில் வளர்ச்சி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

தொழிலாளி வர்க்கம் தான் பாதுகாவலன்

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தையொட்டி கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடை பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த பத்தி ரிகையாளர்கள் மத்தியிலிருந்து இடதுசாரி இயக்கத் தலைவர்களை நோக்கி வந்த முதல் கேள்வியே, ஒரு தொழிலாளர் வர்க்க தளமான கோவையில் மதவெறி அரசியல் எப்படி உருவானது? என்பதுதான். உழைக் கும் மக்களிடத்தில் வர்க்க அரசியல் வளர்க்கப்படா விட்டால் அந்த இடத்தில் பிற்போக்கு அரசியல் கருத் துக்கள் ஆக்கிரமித்து மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் என்பது தான் அதன் பொருள். நவ தாராளமயக் கொள்கை சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஒழித்துக் கட்டியதோடு, அமைப்பு  ரீதியாக திரண்ட தொழிலாளர்களை உடைத்து உதிரித் தொழிலாளர்களாக வீதியில் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கான தேவைக்காகவே ஓட வேண்டிய நிலையில் அரசி யல் உணர்வுகள் இரண்டாம்பட்சமாக மாற்றப்பட்டு வருகின்றன. தொழிலாளி வர்க்க உணர்வு பலவீன மடைந்த நிலையில் பாசிசவாத சக்திகள் தலை தூக்குகின்றன.

இன்றைய ஊடகங்களில் பெரும்பாலானவை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒருபகுதியாகவே இருக்கின்றன. அரசியல் சார்ந்த செய்திகளை தவிர்த்து தங்களின் நலன் சார்ந்த கருத்துக்களுக்கு ஊடகங்களை பயன்படுத்துகின்றன. கார்ப்பரேட்-மோடி கூட்டணியை எதிர்த்து ஒரு வலுவான அரசியல் சக்தியை உருவாக்கிட உழைக்கும் மக்களிடத்தில் தீக்கதிரை பரவலாக கொண்டு செல்வதே இன்றைய தேவை.இதன் மூலமே  தொழிலாளி வர்க்க அரசிய லின் செல்வாக்கினை மீட்டெடுக்க முடியும்.  முந்தைய தலைமுறை கொண்டிருந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமை, சோசலிசத்தின் மீதான நம்பிக் கையினை மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.

கட்டுரையாளர் : தீக்கதிர் பொது மேலாளர், கோவைப் பதிப்பு

 

;