புதுதில்லி, ஏப்.8- ஒன்றிய அரசு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஆயிரக்கணக் கானோர் ராம் லீலா மைதானத்தில் திரண்டனர். மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது என்ற செய்தியை அறிந்தவுடன், மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம், மத்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி உள்ளிட்ட பலர், பெரும்பாலான இரவுகளை உறக்க மின்றி கழித்துக் கொண்டிருக்கின்றனர். பல பிரச்சனைகள்-கவலைகள் இருந்தாலும், 33 வயதான ராஜ்குமாரி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு, ராம்லீலா மைதா னத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட உழைப்பாளி மக்கள் நடத்தும் பேரணியில் பங்கேற்க புதனன்று தில்லி வந்தார்.
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, அசாம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் விவ சாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் திரண்டிருந்த இப்பேரணியில் ராஜ்குமாரியும் ஒருவர். இப்பேரணியில் பங்கேற்ற உழைப்பாளி பெண்கள், எங்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை அரசு வழங்க வேண்டும் என கோரினர்.
மாற்று ஏற்பாடு ஏதும் செய்யவில்லை
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இப்பேரணியில், குமாரி மற்றும் அவரது கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். “நான் இங்கிருக்கிற இச்சமயம், எங்கள் கிராமத்தில் உள்ள கோசாலைகளை (பசு காப்பகங்கள்) ஜேசிபி இயந்திரம் அகற்றியிருக்கும். மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக, அரசு எங்கள் நிலத்தை கேட்கிறது” என்றார் குமாரி. இதை எதிர்த்து குமாரி மற்றும் கிராமத்தினர் போபாலில் போராட்டம் நடத்திய போது, ‘அவர்க ளின் வீடுகளை கையகப்படுத்த மாட்டோம்’ என அம்மாநில அரசு உறுதியளித்து இருக்கிறது. ஆனால், “விவசாயம் செய்வதற்கு நிலம் இல்லா மல், வெறும் வீட்டை மட்டும் வைத்து என்ன பயன்?. இதுமட்டுமின்றி இதற்கு இழப்பீடாக, மாற்று நிலம் அல்லது மறுவாழ்வு திட்டங்கள் எதையும் பழங்குடியினரான எங்களுக்கு அரசு வழங்க வில்லை” என்றார் குமாரி. விவசாயிகளின் முதன்மை வாழ்வாதாரமாக உள்ள நிலங்களை (நெல் மற்றும் காய்கறி சாகுபடி) இழப்பதற்கு முன், அவர்களுக்கு மாற்று விவசாய நிலங்கள் மற்றும் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பிஎஸ்என்எல்-ஐ அழிக்க விடமாட்டோம்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நந்திதா தத்தா, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை விளை யாட்டு உதவியாளராக பணிபுரிகிறார். இவர் கடந்த 16 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். தற்போது பிஎஸ்என்எல்-ன் நிலை குறித்து அவர் கூறுகையில், “80 ஆயிரம் ஊழியர்கள் கட்டாய ஓய்வு பெற வற்புறுத்தப்பட்டனர். நாங்கள் யாரும் நிம்மதியாக இல்லை. அதேநிலை எங்களுக்கும் வரும் என்ற அச்சத்தில் உள்ளோம்” என்றார். 2007 ஆம் ஆண்டு இளநிலை விளையாட்டு உதவியாளராக பணியில் சேர்ந்த தத்தாவின் சக ஊழியரான பிபாஷா சர்கார், “ஒன்றிய அரசு 5ஜி அலைக்கற்றையை பிஎஸ்என்எல் நிறுவனத்தி ற்கு தர மறுத்து, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்குவது அதிருப்தியளிக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்க ளையும், தொழிலாளர்களையும் தேசிய அளவில் இழந்து கொண்டிருக்கிறோம். எங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் உருவான பிஎஸ்என்எல் நிறுவனத்தை, ஒன்றிய அரசு அழிப் பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதை எதிர்த்து போராடுவது என உறுதியேற்றுள்ளோம்” என்றார்.
எல்ஐசி-யில் பணியாற்றிய புதுதில்லியைச் சேர்ந்த அனுபமா (52) கூறுகையில், “ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங் கப்படுவதில்லை. மேலும், அவர்களுக்கு குறைந்த பட்ச பணி நேரமும் நிர்ணயிக்கப்படவில்லை. சமூக அமைப்பாக இருக்கும் எல்ஐசி-யை, லாபம் ஈட்டும் இயந்திரமாக மாற்ற ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. ஊழலுக்கு வழிவகுக்கும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என கோரியுள்ளார்.
கொரோனா ஊக்கத் தொகை கிடைக்கவில்லை
மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் மாவட் டத்தைச் சேர்ந்த ஜோதி பவார், முதல் முறையாக தில்லிக்கு வந்திருக்கிறார். இவர் ஏற்கனவே மும்பை மற்றும் நாசிக் உள்ளிட்ட நகரங்களில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். “ஆயுஷ்மான் திட்டத் தில் 2021-22 ஆம் ஆண்டு நாங்கள் பணியாற்றி யதற்கு, அரசு எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. அரசாங்கம் எங்களுக்கு குறிப்பிட்டத் தொகையை வழங்க வேண்டியுள்ளது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக இருந்த எங்களுக்கு, இதுவரை கொரோனா ஊக்கத்தொகை கிடைக்கவில்லை” என்றார் ஜோதி பவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘ஆஷா’ பணி யாளர் குழுவினர், எங்களை நிரந்தரப் பணியா ளர்களாக்க வேண்டும் என கோரியுள்ளனர். மாநில அரசு லட்லி பெஹ்னா யோஜனா (பெண்கள் நலத் திட்டம்) திட்டத்தில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தியது. இதை கண்டித்து, இவர்கள் மார்ச் 15 முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட ‘ஆஷா’ பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.
உணவின் தரமும் அளவும் குறைகிறது
பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் பலர் இப்பேரணியில் பங்கேற்றனர். பஞ்சாபின் மோங்கா மாவட்டத்தைச் சேர்ந்த கரம்ஜீத் கவுர் (50), தனது உடல் நலக்குறை வையும் பொருட்படுத்தாமல், மூன்றாவது முறை யாக இத்தகைய பெரும் போராட்டத்தில் பங் கெடுத்துள்ளார். அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழி யர்களாக அறிவிக்க வேண்டும், நிரந்தரப் பணி நேரத்தை நிர்ணயிக்க வேண்டும், தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை கரம்ஜீத் கவுர் மற்றும் அவரது சக ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். மேலும் “உணவின் தரமும், அளவும் மிகக் குறை வாக இருப்பதாக அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் எழத் தொடங்கி யுள்ளன. பல ஆண்டுகளாக நடத்திய போராட்டம் மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலம் எங்கள் தொழிற்சங்கம் ஊதியத்தை உயர்த்தியது. இதே போன்று, நிரந்தர பணி கோரியும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார் கவுர்.
தமிழில் : ஆர்.நித்யா