2023 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு ஜூலை 6முதல் 8ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. இதனிடையே, சீனாவின் நுண்ணறிவுத் தொழில் செழிப்பாக வளர்ந்து, அதன் மைய தொழில்களின் அளவு 50000கோடி யுவானை எட்டியுள்ளது. தொடர்புடைய தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 300 ஐத் தாண்டியதோடு, நிறைய புத்தாக்க சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன என்று இம்மாநாட்டின் துவக்க விழாவில் இருந்து தெரிய வந்துள்ளது. சீனாவின் செயற்கை நுண்ணறிவு அடிப்படை வசதிகளின் கட்டுமானம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டிங் திறன் அளவில் சீனா உலகின் 2ஆவது இடத்தை வகிக்கிறது. 28லட்சம் 5ஜி பேஸ் ஸ்டேசன்களும் 2500க்கும் அதிகமான எண்ணியல் தொழிற்சாலைகளும் கட்டியமைக்கப்பட்டுள்ளதாக சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துணை அமைச்சர் சியூ சியௌலேன் துவக்க விழாவில் தெரிவித்தார்.